பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று விரைவு அளத்தல்‌ 593

காற்று விரைவு அளத்தல் 593 . உள்ளன. கீழ்த் தட்டில் எண்ணெயும், மேல் தட்டில் உலோக நூல், பருத்தி நூல் ஆகிய வடிகட்டும் பொருள்களு ரும் உள்ளன. வளிமண்டலக் காற்று முதலில் எண்ணெய்த் தட்டிற்குச் சென்று எண்ணெ யுடன் அமிழ்கிறது. அப்போது தூசி, மணல் போன்ற கனமான பொருள்கள் அடியில் தங்குகின்றன. பிறகு காற்று மேல் தட்டிற்குச் சென்று வடிகட்டப்படும் போது, காற்றிலுள்ள எண்ணெய்ப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. தூய்மையாக்கப்பட்ட காற்று நடுவில் அமைந்துள்ள குழாய் வழியே எரிகலப்பியை அடைகிறது. -கே.ஆர்.கோவிந்தன் Baumei- நூலோதி. Baumeister, A. Avallone, ster III, Marks' Standard Hand Book for Mechanical Engineers, Lighth Edition, McGraw-Hill Book Company, New York, 1978. காற்று விரைவு அளத்தல் ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள காற்று அல்லது வளி மத்தின் இடப்பெயர்ச்சி வீதத்தை அளத்தல் காற்று விரைவு அளத்தல் (air-velocity measurement) எனப் படும். காற்று வேகம், காற்றுச் சுரங்கத்தின் ஆய்வுப் பகுதியில் (test section) உள்ள காற்று விரைவு, வானூர்தியில் காற்று வேகம், குளிர்பதனப் பெட்டியில் உள்ள விசிறி உற்பத்தி செய்யும் காற்றின் விரைவு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். காற் றழுத்தத்தின் பரிமாணத்தையும் திசையையும் விரைவு காட்டும். காற்று விரைவை அளப்பதற்கு மூன்று முறைகள் வழக்கத்தில் உள்ளன. இம் மூன்று முறைகளும் பயன்படும் கருவிகளும் கீழுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. 2. 3. முறை மொத்த அழுத்தம் P ஒலிவேகக் காற்றுப் போக்கு. லை அழுத்தம் துளைகளின் வளையம் படம் 1. பிட்டாட் குழாய் (குறை ஒலிவேகம்) பிட்டாட் குழாய், காற்றுச் சுரங்கங்கள் மாதிரி வானூர்திகளில் (air craft model) காற்று வேகத்தை அளப்பதற்குப் பயன்படும் கருவி வெப்பம் அளக்கும் கருவிகளுடன் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படு கிறது. மொத்த (பிட்டாட்) அழுத்தம் (P), மொத்த பிட்டாட் வெப்பம் (T.). நிலை அழுத்தம் (p) ஆகியவை விரைவு வேகத்தைக் கணக்கிடத் தேவைப்படுகின்றன. வை அனைத்து விரைவுத் தொகுதிகளுக்கும் (மிகை ஒலி அல்லது குறை ஒலி வேகம்) பயன்படுகின்றன. மொத்த அழுத்தம், மொத்த வெப்பம், நிலை அழுத்தம் ஆகியவற்றுடன் விரைவுக்குள்ள உறவைக் கீழ்க்காணும் 'சமன் பாட்டின் மூலம் காணலாம். இந்தச் சமன்பாடு அனைத்து வளிமங்களுக்கும் பொருந்தும். V= இதில் 2k RT ✓ ( ) ( )|- k-1 M (k-1/k T.= மொத்த வெப்பம்; M மூலக்கூறு எடை; காற்று விரைவு அளக்கும் முறைகள் காற்றோட்டத்தில் உள்ள ஒரு தனிமத்தின் மேல் உள்ள அழுத்தம் காற்றோட்டத்தில் உள்ள சுழலும் தனிமத்தின் வேகம் அல்லது சுற்றின் எண்ணிக்கை காற்றோட்டத்திலுள்ள ஒரு சூடாக்கப் பட்ட தனிமத்தின் மேல் விரைவின் விளைவு சுருவிகள் பிட்டாட் குழாய் (pitot tube), குறுவழிக் (venturi) குழாய், தடைப்பட்ட அழுத்தப் பலகை (bridled) pressure plate) கிண்ணக் காற்று வேகஅளவி (anemometer) காற்றாடி காற்று வேகஅளவி சூட்டுக் கம்பி காற்று வேக அளவி (hot wire anemo - meter) காட்டா வெப்ப அளவி (Kata thermometer) அ. 4. 8 38