பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 காற்று விரைவு அளத்தல்‌

594 காற்று விரைவு அளத்தல் R தன் எல்லாவற்றுக்கும் பொருந்துகிற வளிம நிலை எண் = 8.314×107 எர்கு'C மோல்; K = லெப்ப விகிதம் (specific heat ratio) காற்றுக்கு K = 1.4, M = 29 கி/கி. மோல் V 4.480 T. [ 1 − ( P/P。 P.) 0.286 ]' 86] இதில் V காற்று 'விரைவு மீட்டர் நொடி ; T. = முழுமை வெப்பம் K மொத்த அழுத்தம், நிலை அழுத்தங்களை அளக்கும் முறைகள், குறை ஒலி, மிகை ஒளி வேக ஓட்டங் களுக்கு மாறுபடுகின்றன. படம் 1 இல் குறிப்பிட் டுள்ள பிட்டாட் குழாய்க் காற்று விரைவு ஒவி வேகத்தைவிடக் குறைவாக இருக்கும்போது அளக்கப் பயன்படுகிறது. காற்றொழுக்கானது திறந்த பகுதி யின் மூலம் கருவியுள் நுழைகிறது. பின் அதன் காற்று விரைவு, பூஜ்யத்தைத் தொடும் வரை குறை கிறது. இந்த இடத்தில் அளக்கப்படும் அழுத்தம் (P.) மொத்த அழுத்தமாகும். பிட்டாட் குழாயின் சுவரில் பக்கவாட்டில் துளைகள் போடப்பட்டுள்ளன. காற்று இந்துளைகள் மூலமாக அடுத்த பகுதிக்குச் செல்கிறது. இப்பகுதியில் அளக்கப்படும் அழுத்தம், நிலை அழுத்தம் (P) ஆகும். காற்றின் விரைவு மிகை ஒலி வேகத்தில் உள்ள போது பயன்படுத்தப்படும் கருவியின் வடிவமைப்பும் ஏறக்குறைய முன்கூறிய மாதிரியே இருக்கும். ஆனால் இதில் இரண்டாவதாகப் பிரிக்கப்பட்ட பகுதியில் உள்ள துளைகள் சிறிது பின் தள்ளி அமைக்கப்பட்டி ருக்கும். நிலை அழுத்தம் (P,) முதலில் குறிப்பிட்ட வாறே அளக்கப்படுகிறது. ஆனால் கருவியைச் சுற்றி யுள்ள அதிர்வு அலைகளால் நிலை அழுத்தத்தை நேரடியாக அளக்க முடிவதில்லை. ஆகையால் இந்த அதிர்வுக்குப் பின் உள்ள மொத்த அழுத்தத்தை (P,s) அளக்கலாம் . P. Po. Pos ஆகிய இந்த மூன்று அழுத்தங்களுக்கும் உள்ள உறவின் மூலம் நிலை அழுத்தத்தைக் கணக்கிட முடியும். வானூர்தியில் உள்ள அழுத்த அளவி குறிப்பு - காற்று லேகம் காட்டுவதற்காக மதிப்பிடப்பட் டுள்ளது. அதைக் கொண்டு காற்று அடர்த்தியை அளக்கச் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். குறுவழிக் குழாய் (venturi tube). இக் கருவி தொழிற்சாலைகளில் வளிம விரைவை அளப்பதற் காகப் பயன்படுகிறது. இக்கருவியைப் பயன்படுத்த நிலை அழுத்தம் அல்லது பிட்டாட் அழுத்தம் தேவைப்படுகிறது. குழாய் இரண்டு முனைகளிலும் திறந்த பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் இது இரண்டு பகுதிகளிலிருந்தும் நடுப்பகுதியை நோக்கிச் வரும். சீராக வட்டத்தில் குறைந்து கொண்டே இறுதிப் பகுதி முன் பகுதியைவிட வட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பங்கு பெரியதாக இருக்கும். இவ்வமைப்பால் குறைந்த பகுதியில் உள்வாங்குதல் ஏற்படுகிறது. இதை ணைக்கப்பட்ட அழுத்த அளவியின் மூலம் அளக்கலாம். அழுத்த அளவி குழாயுடன் பிட்டாட் ணைக்கப்பட்டுள்ளது. இரண்டு அழுத்தங்களுக்கும் உள்ள வேறுபாடு காற்று விரைவையும் காற்றுப் பரிமாணத்தையும் சார்ந்தது. அதிர்வு அலை மிகை ஒலிவேக காற்றுப் போக்கு Pos P படம் 2. பிட்டாட் குழாய் (மிகை ஒலி வேகம்) தடைப்படுத்தப்பட்ட அழுத்தப் பலகை. இந்தக் கருளி புயல் வீச்சு அல்லது வன் காற்றலைகளின் (gusts) விரைவைக் காணப் பயன்படுகிறது. ஏனெனில் இது சுற்றும் கருவிகளைவிட விரைவில் காற்று விரைவைக் காட்டும் பலகையாகும். காற்றில் இது திறந்துவிடப்பட்டுள்ளது. பலகையின் மேல் மோதும் விரைவு அழுத்தம் ஒரு சுருள்வில் மூலம் நிலைப் படுத்தப்படுகிறது. தூண்டப்படும் விசைமுறை மாற்றி யமைப்புக்கருவி மூலம் திருப்பத்தை அளக்கலாம். விசைமுறை மாற்றமைப்புக்கருவியின் மூலம் வரும் குறியீடுகள் மிகைப்படுத்தப்பட்டுப் பதிவு செய்யும் கருவிக்கு அனுப்பப்படுகின்றன. குறியீடுகள் காற்றுப் பரிமாணத்தைப் பொறுத்து மாறுபடும். குறைந்த காற்று விரைவுகளை எளிதான எந்திரக் கருவிகளைக் கொண்டு அளக்கலாம். காட்டா வெப்ப அளவி. இக்கருவி காற்றுச் சுழற்சிப் பகுதிகளில் உள்ள குறைந்த காற்றின் விரைவைக் காணப் பயன்படுகிறது. பெரிய குமிழுள்ள சாராய வெப்ப அளவி 100 F-க்கு மேல் சூடேற்றப்படுகிறது. அது பிறகு குளிர்விக்கப்படுகிறது. 100 °F லிருந்து 95°F வரை குளிர்வதற்கு ஆகும் நேரம் கணக்கிடப் படுகிறது. இந்தக்கால இடைவெளி அந்த இடத் திலுள்ள காற்று ஓட்டத்தின் அளவாகும். பாதுகாக்கப்பட்ட வெப்ப இரட்டை. இந்தக் க கருவி பிட்டாட் குழாயில் உள்ள மொத்த வெப்பத்தை