பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று வெளிக்‌ கப்பல்‌ 597

3 தொங்கும் ஏணியில் இறங்கிச் சீர் செய்ய வேண்டும். இந்த ஏணி காற்றால் அலைக்கழிக்கப்படுகிறது. ஆனால் குட் இயர் நிறுவனம் அமைத்த கப்பல்களில், பொறிகள் காற்றுப் பையினுள்ளேயே பொருத்தப் பட்டிருக்கும். பயன்கள். காற்று வெளிக்கப்பல்கள் உரிய வானூர்திகளை எடுத்துச் செல்கின்றன. ஐந்து சிறிய விமானங்கள், காற்று வெளிக் கப்பலில் உள்ள கொக்கிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை, காற்றுக் கப்பல் பறந்து கொண்டிருக்கும்போதே, மிகு தொலைவு அனுப்பப்படுகின்றன அல்லது நிலத்தில் இறக்கப்படுகின்றன. இத்தகைய ராணுவக் காற்று வெளிக் கப்பல்கள் அனைத்துத் தட்பவெப்ப நிலை களிலும் பயன்படுகின்றன. சில அவற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினம். சமயங்களில் காற்று வெளிக் கப்பல்களின் அமைப்பும், சுற்றுப் புறச் சூழ்நிலையும், கடலில் செல்லும் சொகுசுக் கப்பல்களைப் போன்று இருப்பதில்லை. காற்று வெளிக் கப்பல்கள் மிகப் பெரியவையாகவும். துணி களால் மூடப்பட்டும், வெளிப்புறத்தைப் பார்க்கக் கூடிய வசதிகொண்டனவாகவும் அமைந்திருந்தன. நிலையான தட்பவெப்பநிலையில், காற்று வெளிக் கப்பல்களில் செல்வது. அமைதியாகவும் சீராகவும் உள்ளது. அதில் பயணம் செல்வோர், கீழே தெரியும் காற்று வெளிக் கப்பல் 597 நிலப்பகுதியைப் பறவைக் அழகாகக் காண முடியும். கண்ணோட்டத்துடன் ஹைட்ரஜன், ஹீவியம் ஆகிய இரு வளிமங்களே பெரும்பாலும் பயன்படுகின்றன. ஹைட்ரஜன் மிக லேசானது. ஆனால் எளிதில் தீப்பற்றக்கூடியது. ஹீலியம் தீப்பற்றக் கூடியது அன்று எனினும், அது மிகு விலையுடையது. மிகு அளவில் தேவைப்படக் கூடியது. புகழ் பெற்ற ஜேப்பலின் காற்றுக் கப்பல் ஹிண் டன் பர்க் ஆகும். இது மிகப் பெரியது. அட் லாண்டிக் பெருங்கடலைக் கடப்பதற்குப் பயன் பட்டது. ஆனால், இதில் ஹைட்ரஜன் வளிமம் பயன்படுத்தப்பட்டமையால், தீப்பிடித்து அழிந்து போயிற்று. தற்காலத்தில் காற்று வெளிக் கப்பல்களில் ஹீலி யமே மிகுதியாகப் பயன்படுகிறது. ஹீலியம் பயன் படும் நவீன காற்று வெளிக் கப்பலின் வடிவமைப்பு, படம் 3-இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சரக்கு களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வசதியாகத் திருகு ஊர்தித் தளம் (heli pad) ஒன்றுள்ளது. தற்காலத்தில் காற்று வெளிக் கப்பல் பெரும் பாலும் விளம்பரங்களுக்கே பயன்படுகின்றது. ஆனால் பிற்காலத்தில் இவற்றைப் போக்குவரத்திற்கும், கடல் ளவை அளப்பதற்கும் பயன்படுத்துவதற்கான ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வா அனுசுயா இரட்டை திருகு ஊர்தித் தளம் உயர்த்தியின் உள்ளிழுக்கக்கூடிய அச்சுத் கட்டுப்பாட்டு பணியாளர் அறை பகுதி உறை த ண் அணுக்கருப் பொறி மூல மின்னோடி ஒரே துண்டாலான இயக்கும் லேசான உடற்பகுதி சரக்குப் பகுதி செலுத்தி படம் 3. நவீன காற்று வெளிக் கப்பலின் வடிவமைப்பு