காற்று வெளிப் பயண இயல் 601
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக நிலைப்படம் வரையும் ரேடார் கருவியைக் கூறலாம். இக்கருவி வானூர்தியிலிருந்து கண்ணுக்குத் தெரியக் கூடிய நிலப்பகுதியை எதிர்மின் கதிர்க்குழாயில் காட்டுகிறது. இதைக் கொண்டு வானூர்தியின் நிலையை அறிய இயலும். இத்துடன் அகச் சிவப்புக் கதிர் உணர் பொறிகளும், தொலைக்காட்சி உணர் பொறிகளும் பயன்படுகின்றன. இவ்வகைக் கருவி களின் பயன்பாட்டால் இம்முறையின் செயல்திறன் அதிகரிக்கிறது. வான் வெளிப்பதிவுக் குறியீடு. இம்முறை மிகு தொலைவு பறக்கும் கடல் கடந்து செல்லும் வானூர்திகளில் மிகவும் பயன்படுகிறது. இம்முறையில் இயற்கையான தொடுவானத்தைப் பயன்படுத்த யலாது. எனவே மாற்றி வடிவமைக்கப்பட்ட கோண அளவி மிகவும் எளிமையாக்கப்பட்டவானியல் அட்டவணைகளும் பயன்படுகின்றன. . கோண அளவியின் ஒளி உணர் பாதையில், நீர் மத்தில் மூழ்கியுள்ள காற்றுக் குமிழியை அமைப்பதன் மூலம் ஒரு செயற்கையான அடிப்படை அளவைப் பெறலாம். தொடுவான உருப்போலி (simulated horizon) போல் இவ்வமைப்புச் செயல்படுகிறது. மேலும் நேர் வரிப்பாட்டின்போது (தொலைநோக் காடியின் பார்வைக் கோட்டை ஒழுங்குப்படுத்தல்) வானூர்தியின் இயக்கத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகளைக் குறைப்பதற்காக நிரலளவு எந்திர நுட்பம் ஒன்றும் பயன்படுகிறது. கணக் மாற்றியமைக்கப்பட்ட வானியல் அட்டவணை களைப் பயன்படுத்திவான்வெளியைக் கவனிப்பதன் மூலம் விரைவாக வானூர்தியின் நிலையைக் கிடலாம். இத்தகைய முறைகளைச் செயல்படுத்து வதன் விளைவாக மணிக்கு இரண்டு அல்லது மூன்று விண்மீன் குறியீடுகளைப் பெற இயலும். இம்முறை யால் ஓரளவிற்கு நுட்பமாகத் தேவையான விவரங் களைக் கணக்கிட இயலும். இம்முறை மிகவும் நம்பத் தகுந்ததாகும். ஆனால் இம்முறையில் பெரும்பாலான பணிகளை மனிதன் செய்ய வேண்டியுள்ளது. இவற் றைச் செய்யச் சில சிறப்புப் பயிற்சிகளைப் பெற வேண்டியுள்ளமையால் இம்முறை பெரிதும் பெரிதும் வர வேற்கப் படவில்லை. காற்றுக்குமிழிக் கோண அள விக்குப் பதிலாகச் சில சிறப்புக்கருவிகள் பயன்படு கின்றன. இக்கருவிகளின் மூலம் வானூர்தியின் நிலையை அறிவதோடு, திசையையும் மிகு நுட்பமாகக் கணக்கிட இயலும். இக்கருவிகள் துருவப் பகுதி களிலும், புவியின் காந்தப் புலத் துருவங்களிலும் மிகவும் பயன்படுகின்றன. வானூர்திப் படைக்கலத் துறையில் தானியங்கிக் கோண அளவிகள் பயன்படுகின்றன. வை தொடர்ந்து இரவும்-பகலும் குறிப்பிட்ட விண்மீன் களைக் கண்டறிந்து கண்காணிக்க வல்லவை, இவை காற்று வெளிப் பயண இயல் 601 தாமாகவே தொடர்ச்சியாக வானூர்தியின் நிலையை யும், செல்லும் திசையையும் எவ்வித மனித ஆற்றலின் உதவியுமின்றித் தரக் கூடியவை. வானொலி முறைகள். இவை மிகவும் எளியவை. அனைத்து வானிலைகளிலும், சிக்கலான வானவெளி யியல் நடைமுறைகளின்றித் தேவையான விவரங் களைத் தரவல்லவை. இவை வானூர்தியின் சரி யான இருப்பிடத்தைத் தெளிவாகத் தெரிவிப்பவை. மேலும் ஓடுபாதை புலனாகாத வானிலையிலும் இவற்றைப் பயன்படுத்தி வானூர்தியை இறக்கலாம். பொதுவாகப் பல்வேறு வகை வானொலி வகைக் கருவிகள் காற்று வெளிப்பயண இயலில் பயன்படு கின்றன. அவற்றுள் திசைவரையறையற்ற வழி காட்டி. தானியங்கி திசைகாட்டும் கருவி, மிகு அதிர் வெண் காட்டி என்பன சிலவாம். குவிபிறை வானவெளியியல் முறை. இவ்வகையில் டெக்கா. டெக்ட்ரா, லோரான். ஓமேகா (omega) போன்ற முறைகள் அடங்கும். இம்முறைகளில் வெளிப்படுத்தப்படும் கால வேறுபாடு அல்லது நிலை வேறுபாட்டு அளவுகளை ஒப்பிட்டு, அவற்றால் புவியின் மேல் முப்பரிமாணத்தில், புள்ளிகளால் அமைக்கப்படும் குவிபிறை அமைப்பை அறியலாம். தனால் சில தனித்தன்மை வாய்ந்த கோடுகளை வரையறுக்கலாம். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று குவி பிறை வானவெளியியல் கருவிகளின் மூலம் வரையறுக்கப்படும் கோடுகளிலிருந்து, வானூர்தியின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளலாம். சிறப்பு முறையில் வடிவமைக்கப்பட்ட வான்வெளி அட்டவணைகளும். வரைபட முறைகளும் இதில் பயன்படுகின்றன. இதன் காரணமாக விமானியின் வேலைச்சுமை மிகும். ஆனால் கணிப்பொறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வேலைச்சுமை குறையும். கேடுகளைத் தவிர்த்தல். வானிலை, மனிதனால் ஏற்படும் தடைகள், வானில் பறக்கும் பிற வானூர்தி கள், காற்றுப்போக்கு, வானூர்தியின் மேல் ஏற்படும் பனிப்படலம் போன்றவற்றால் வானூர்திக்குப் பல் வேறு கேடுகள் நேரிடலாம். பறப்பிற்கு முன் திட்டமிடுதல்,பறப்பின் போது விதிகளைப் பின்பற்றல், தரையிலிருந்து வானூர்தி களின் கட்டுப்படுத்துதல், நடவடிக்கைளைக் சிறப்பு வகை வானவெளியியல் கருவிகளைப் பயன் படுத்துதல், ஆகிய முறைகளாலும் இவற்றைத் தவிர்க்கலாம்.தற்போது வானூர்திக்கு நேரும் தீமை யைப் பற்றித் தெரிவிக்கும், தானியங்கு கருவிகளைப் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இக் கருவிகள் கேட்டைத் தவிர்க்கத் தேவையான நட வடிக்கைகளையும் தெரிவிக்கும் வண்ணம் வடி வமைக்கப்படும். எஸ். நாகேஸ்வரன்