602 காற்றுவெளி மிதவை
602 காற்றுவெளி மிதவை நூலோதி. Arnold M Kuethe, Chuen -yen chow. Fourdations of Aerodynamics-Bases of Aerodynamic design, John Wiley & Sons, New York, 1976; A.C, Kermode. Mechanics of Fiight, Himalayan Books, New Delhi, 1982; Bernard, Etkin, Dynamics of Flight Stability and control, II Edition, John Wiley & Sons, New York, 1982. காற்றுவெளி மிதவை ஒரு விண்கலம் புவிக்குத் திரும்பும்போது, மிகுந்த வேகத்தில் காற்று மண்டலத்திற்குள் நுழைகிறது. காற்றின் உராய்வால் இதன் வேகம் ஓரளவு குறைக்கப் படலாம். ஆனால், அவ்விண்கலம் பாதுகாப்பாகத் தரையிறங்க அதன் வேகம் பெருமளவு குறைக்கப்பட வேண்டும். சற்று அடைவதற்குச் முன்பாகக் காற்று வெளி மிதவையைப் (parachute) பயன்படுத்தி வேகத்தைக் குறைக்கலாம். இதனால் அவ்விண்கலம் மெதுவாக மிதந்து பாதுகாப்பாகக் கீழிறங்குகிறது. நிலப்பரப்பை க பாதுகாப்பான வான் பயணத்திற்குக் காற்று வெளி மிதவைகள் இன்றியமையாதவையாகக் கருதப் படுகின்றன. மிக உயரத்தில் விமானம் பழுதடைந்து, தரை இறங்க முடியாதிருக்கும்போது. அவ் விமானத்திலிருந்து வெளியேறப் பயணிகளும் விமானியும் காற்று வெளி மிதவையைப் பயன் படுத்துவார்கள். பொருளை மிகுந்த உயரத்திலிருந்து பாதுகாப்பாகக் கீழிறக்கவும் காற்று வெளி மிதவை பயன்படுகிறது. தற்காலத்தில் விமானம் தரையிறங்கும்போது அதன் வேகத்தைக் குறைக்க காற்று வெளி மிதவைகள் பயன்படுகின்றன. காற்று வெளி மிதவை பெரிய குடை போன்றிருக்கும். ஒருகுடையின் கைப்பிடியில் கல்லைக் கட்டி, குடையை விரித்து ஜன்னல் வழியாகக் கீழே எறிந்தால், அக்குடை மெதுவாக மிதந்து நிலத்தை அடைகிறது. இது காற்றால் உண்டாகும் தடையினால் நிகழ்கிறது. விரித்த குடை காற்றில் மிதக்கும். அதன் விரிந்த பரப்பு, காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லமுடியாததால், மிதக்க முற்படுகிறது. அதனால் அக்குடையின் கீழேவிழும் வேகமும் குறை கிறது.மடக்கிய குடை காற்றைக்கிழித்துச்செல்வதால் அது விரைவாகக் கீழே விழுகிறது. காற்று வெளி மிதவையில் இக்குடை போன்ற பரப்பு மேற்கவிகை அல்லது விதானம் (canopy) எனப்படும். எளிய காற்று வெளி மிதவையில் இவ் விதானம்,பெரியதாகவும், வட்டமாகவும் இருக்கும். திறக்கப்பட்டவுடன் து கீழ்நோக்கிக் கவிழ்ந்த எடை நைலானால் டவெளி கிண்ணத்தின் வடிவத்தைப்பெறுகிறது. இவ்விதானம். குறைந்த வலிமையாக உள்ள செய்யப்படுகிறது. இதன் நடுவில் சிறிய (vent) அல்லது துளை காணப்படும். இத்துளை வழியாகச் சிறிதளவு காற்று வெளியேறிச் செல்கிறது. இல்லாவிடில், காற்றுவெளி மிதவையில் மிதப்பவர் கீழிறங்குவதற்குப் பதிலாகப் பக்கவாட்டில் செல்லக் கூடும். விதானம் பல நீண்ட பாய்மரக் கயிறுகள் (shrouds) போன்றவற்றுடன் ணைக்கப்படும். இக்கயிறுகள் காற்று வெளி மிதவையாளர்கள் அணிந்திருக்கும் காற்று வெளி மிதவைச் சிப்பத்துடன் parachute pack) இணைக்கப்பட்டுள்ளன. இக்கயிறு கள் காப்புக் கவசம் (harness) எனப்படும் வார்களின் (strap) தொகுதிகளால் கட்டப்பட்டுள்ளன. சிப்பம் என்பது விதானத்தையும் கயிறுகளையும் உள்ளடக்கி வைத்திருக்க உதவும் பொதியுறை ஆகும். காற்று வெளி மிதவை திறக்கப்பட்டவுடன், மிதவையாளர் களுக்குக் குறைந்த அதிர்ச்சியே ஏற்படும் வகையில் காப்புக்கவசம் அமைக்கப்பட்டுள்ளது. பொதியுறையுள் மற்றொரு சிறிய காற்று மிதலையும் உள்ளது. அம்மிதவை, வழிகாட்டிக் காற்று வெளி மிதவை (pilot parachute) எனப்படும். இம்மிதவையே பொதியுறையில் இருந்து முதலில் வெளிப்படுகிறது. இது மேற்கவிகையை இழுப்பதால், மேற்கவிகை அமைப்பு வெளியேறி விரிந்து கொள் கிறது. காற்று வெளி மிதவையாளர், வானூர்தி யிலிருந்து குதித்த பிறகு மேற்கவிகையைத் திறக்கக் கூடிய கயி சிறு (rip - cord) இழுக்கப்படுகிறது. இதனால் மேற்கவிகை வெளியேறி விரிந்து கொள்கிறது. இக்கயிறு மிதவையாளராலோ. தானியங்கு முறையிலோ இழுக்கப்படுகிறது, இதை மிக முன்ன தாகவோ, மிகத் தாமதமாகவோ இழுக்கக் கூடாது. மிக முன்னதாக இழுக்கப்பட்டால் காற்று வெளி மிதவை விரிந்தவுடன், வானூர்தியுடன் மோதக் கூடும். மிகத் தாமதமாக இழுக்கப்பட்டால் மிதவை யாளர் தரையைத் தொட்ட பிறகே காற்று வெளி மிதவை விரிவடையும். இதனால் மிதவையாளருக்குப் பெருங்கேடு விளையக்கூடும். வெளி காற்று வெளி மிதவை விரிந்தவுடன், மிதவை யாளர் கீழே இறங்கும் வேகம் குறைகிறது. தொங்கும் கயிறுகளை இழுப்பதன் மூலம் காற்று மிதவையைத் திசை திருப்ப இயலும். மேலும் மேற் கவிகையின் வழியாகச் செல்லும் காற்றின் பாதை மாறுகிறது. தரையிறங்கும்போது மிதவையாளர் கால்களை வளைத்தும், தரையில் உருண்டும் கீழே விழுவதைத் தடுக்கிறார். பின்னர் பொதியுறை யிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கிறார்.