காற்றுவெளி மிதவை 603
அவ்வாறு விடுவித்துக் கொள்ளாவிடில் காற்று வெளி மிதவையினுள் காற்று நிரம்பி மிதவையாளரை இழுத்துச் செல்லக்கூடும். இக்காற்று வெளி மிதவை மீண்டும் பயன்படுத்தப்படுமாதலால், அதில் பழுது ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்ந்து, கவனமாகப் பாதுகாக்க வேண்டும். இச்செயல்களுக்கு ஆழ்ந்த பயிற்சி தேவை. காற்று வெளி மிதவையில் பறந்து செல்லும் படைவீரர்கள் 10மீ விட்டமுடைய காற்றுவெளி மிதவைகளைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு நொடிக்கு 6 மீட்டர் என்னும் வேகத்தில் மெது வாசுக் கீழே இறங்குகிறது. அவர் 180 அவர் 180 செ.மீ உயரத்திலிருந்து கீழே விழுவதைப்போலவே தரை யிறங்குகிறார். குண்டுகள், ஊர்திகள் ஆகியவற்றைக் கீழே இறக்குவதற்கு 30 மீட்டருக்கும் மேலாக அகல முடைய காற்றுவெளி மிதவைகள் பயன்படுகின்றன. கீழிறக்கப்படும் பொருள்களின் எடை அதிகரிக்க அதிகரிக்க காற்றுவெளி மிதவையின் விதானமும் அதிகரித்தல் வேண்டும். 20 டன்னுக்கும் மிகுந்த எடையுடைய பொருள்கள், மிதவைகளை ஒன்றிணைத்துக் கீழே இறக்கப்படுகின்றன. நாடா வெளி மிதவை (ribbon parachute) என்பது சாதாரண வகையிலிருந்து சிறிது மாறுபட்ட தாகும். அதனுடைய நாடாக்கள். பொதுவான மையத்தை உடைய வட்ட வடிவத் துண்டுகளாகும். இரு நாடாக்களுக்கு இடையே உள்ள இடைவெளி யின் வழியாகக் காற்று வெளியேறுகிறது. இவ்வகை மிதவைகள் விமானம் தரையிறங்கும்போது, விமானத் தின் வேகத்தைக் குறைக்க உதவுகிறது. ஆகையால் இது தரையிறங்கு வேகத்தடுப்பு மிதவை (landing brake parachute) அல்லது பின்னிழுப்பு (drag chute) எனப்படுகிறது. காற்றுவெளி மிதவை 603 மிதவை படம் 1. நவீன காற்று வெளி மிதவை படம் 2