606 காற்று வேகங்காட்டி
606 காற்று வேகங்காட்டி நிலை வெப்ப வகை, நிலை - தடை வகை எனவும் வழங்கப்படும். இது மிகவும் பயன் மிகுந்ததாகும். வீட்ஸ்டோன் சமனியில் உள்ள மின்கலத்தின் மின் தடையம், வளிமப் பாய்வினால் குளிர்விக்கப்பட்ட கம்பி, மீண்டும் அதன் பழைய வெப்பநிலையை அடையும் வரை அதிகரிக்கிறது. அம்மீட்டரில் காணப்படும் சூடான கம்பியின் மின்னோட்டம், காற்றின் திசைவேகத்தைக் குறிக்கிறது. இவ்வகை அளவியின் மற்றுமொரு முக்கிய பயன்பாடு, கொந் தளிப்பு மாற்றங்களை அளத்தலாகும். இம்மாற்றங்கள் கம்பியின் மின் தடையில் ஏற்படும் மாற்றங்களால் கணக்கிடப்படும். இது எல்லை அடுக்குகளைப் பற்றிய ஆய்வில் பெரிதும் உதவுகிறது. இந்த அளவியில் பயன்படுத்தப்படும் சூடு கம்பி பிளாட்டினம், டங்ஸ் டன் போன்ற பொருள்களால் ஆனது. இதன் விட்டம் ஏறத்தாழ 0.25-25 மைக்ரோ மீட்டர் ஆகும். வா. அனுசுயா மா பூஜ்ய உயரத்தில் தவறாக இருந்தாலும் வானூர் தியை இயக்கும் உறவு றுபடாமையால், இது வானூர்தியின் பறக்கும் வேகத்தை அளக்கப் பயன் படுகிறது. இந்தக் கருவிகளுடன் ஏற்கப்பட்ட பெரும் எல்லை வானூர்தி வேகம் காட்டுவதற்காக இரண்டாம் காட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. GUCCD காற்று வேகங்காட்டி இது வானூர்தியின் வேகத்தை அது பறக்கும் வளி மண்டலத்துடன் ஒப்பிட்டு, கணக்கிட்டுக் காட்டும் கருவி ஆகும். குறிப்புக் காற்று வேகங்காட்டி, இயல் காற்று வேகங்காட்டி, மேக் அளவி ஆகியவை நடைமுறையில் உள்ள பிற காற்று வேகங் காட்டிகள் (air spced indicator) ஆகும். வானூர்தி யின் வேகத்தைக் காற்று மண்டலத்துடன் ஒப் பிட்டும், தரையுடன் ஒப்பிட்டும் கணக்கிடலாம். காற்றுடன் ஒப்பிட்டுக் கணக்கிடப்படும் வேகம் காற்று வேகம் என்றும், தரையுடன் ஒப்பிட்டுக் கணக்கிடப்படும் வேசும்,தரை மட்ட வேகம் என்றும் கூறப்படும். மிகுதியாகப் குறிப்புக் காற்று வேகங்காட்டி புழக்கத்தில் உள்ளது. வானூர்தியின் வேகம் அதி சுரிக்கும்போது, ஒரு குழாயின் மூலம் காற்று இடைத் திரையின் மேல் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக் கிறது. இதனால் இடைத்திரை விரிவடைய அத் துடன் இணைக்கப்பட்டுள்ள பல்சக்கரத் தொடர் நகர்த்தப்பட்டு அதன் மூலம் காட்டியானது காற்று வேகங்காட்டியின் வட்ட முகப்பின் குறியீடுகளின் மேல் நகர்ந்து வேகத்தைக் காட்டுகிறது. குறிப்புக் காற்று வேகம் என்பது அழுத்த வேறு பாடுகளைப் பொறுத்து மாறுபடும். அழுத்த வேறு பாடு என்பது பொது அழுத்தத்திற்கும் நிலையான அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகும். நிலை யான பிட்டாட் (pitot) குழாய் இவ்விரு அழுத்தங் களுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் கருவி யாகச் செயல்படுகிறது. இந்தக் குறிப்பு அளவுகள் படம் 1. காற்று வேகங்காட்டி (அ) தொழில்துறைக் கருவி கலத்தொகுதி (ஆ) முகப்பு இயல் காற்று வேகங்காட்டி, குறிப்பு வேகங் காட்டியைப் போன்றே இருந்தாலும், அதனுடன் முழுமையான அழுத்தம், வெப்பம் இவற்றை அளப் பதற்காக ஒரு கருவி உள்ளது. இதன் மூலம் காற்று அடர்த்தி உண்மை வேறுபாடுகளைத் தவிர்த்து, அல்லது இயல் காற்று வேகத்தைக் கணக்கிடலாம். தனால் இயல் காற்றுவேகங்காட்டி ஒரு காற்று வெளிப்பயணக் கருவியாகவும் குறிப்பு வேகங்காட்டி ஓர் ஊர்திக் கருவியாகவும் பயன்படுகின்றன. அனைத்து வானூர்திகளும் அவற்றின் செந்தூக்க ஆற்றல் கூறு ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கும் வரை நிலையானவையாகவும் கட்டுப்படுத்தக் கூடிய வையாகவும் இருக்கும். இந்த உயரம் வானூர்தியின் தரத்தைப்பொறுத்து மாறுபடும். குறைஒலிவேகத்தில் ஊர்தியின் தாக்குங் கோணம் மாறாமல் இருப்பதால் செங்குத்து ஆற்றல் கூறு, இயக்க ஆற்றல் அழுத்தத் திற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. அதனால் ஊர்தி பாதுகாப்பான காற்று வேகத்திற்குள் செலுத்தப் பட்டால், எந்த உயரத்திலும் ஊர்தியின் நிலைத் தன்மையும், எளிதான கட்டுப்பாடும் உறுதிப்படுத்தப் படும். இதனால் வானூர்திசெலுத்துவோருக்கு இந்தக் குறிப்புக் காற்று வேகம் மிகமிக இன்றியமையாதது.