காற்று வேகத் தடை 607
யல் தரை மட்ட வேகம், காற்றுப்போக்குக் கோணம் (drift angle), பாதைக் கண்காணிப்புப் போன்ற வற்றைக் கண்டுபிடித்த உண்மை அல்லது காற்றுவேகம் விமான ஓட்டிக்குத் தேவைப்படுகிறது. காற்று வேகங்காட்டியின் அளவை மதிப்புக் காட்டி யின் மேல் நகரும் இரண்டாம் மெல்லிய சுட்டும் முள் காட்டி தெரிவிக்கிறது. இயல் காற்று வேகம் வானூர்தியின் பறக்கும் வேகத்திற்குத் தகுந்தவாறு இருக்கும். இது ஊர்தி யின் உயரத்திற்கு ஏற்றவாறு மாறாது. அதே நேரத் தில் குறிப்புக் காற்று வேகம் வானூர்தி உயரத்திற்கு ஏற்றவாறு மாறும். ஏனென்றால் இயக்க ஆற்றல் அழுத்தம், ஊர்தி உயரம் அதிகரிக்கும்போது குறையும். இரண்டு காட்டிகளும் குறைந்த உயரத்தில் அதாவது தரைக்கு அருகில் இருக்கும்போது ஏறக் குறைய ஒரே அளவைக் காட்டும். உண்மை ஒலிவேகத்திற்கும் குறிப்பிட்ட இடத்தி லுள்ள ஒலிவேகத்திற்கும் உள்ள விகிதம், ஒலிவேகத் திலும், மிகை ஒலி வேகத்திலும் செல்லக்கூடிய வானூர்திகளுக்கு இதன் வேகத்தை அளக்கப் பயன் படுகிறது. இந்த அளவைக் (விகிதம்) கணக்கிடும் கருவி மாக் அளவி எனப்படும். சார்பு மாக் எண்ணைக் கணக்கிடுவதற்கு முதலில் மொத்த தாக்கு அழுத்தத்திற்கும் மொத்த நிலை அழுத்தத் திற்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட வேண்டும். பின் சில வாய்பாடுகளைப் பயன்படுத்தி அந்த விகிதத்தை மாக் எண்ணாக மாற்ற வேண்டும். சில ஒலிக் கருவிகள் காற்று வேகம், மாக் எண் ஏற்கப் பட்ட பெரும எல்லை வேகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் காட்டவல்லவை. எஸ். ரெங்கராஜன் நூலோதி. EHJ, Pallett, Aircraft Instruments, II Edition, Pitman publishing Limited, Great Britain, 1981. காற்று வேகத் தடை வேகத் தடைக் கட்டைகளை விரிக்கச் செய்யும் நெம்புருளுக்குத் (cam) தேவையான விசை. ஊர்தியின் எந்திரப் பொறியால் இயக்கப்படும் ஒரு காற்றழுத்தப் பொறியின் வாயிலாக வரும் அழுத்தப் பட்ட காற்றால் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நெம்புருளுக்கும் தேவையான வேகத்தடை அறை (brake chamber) ஒவ்வொரு சக்கரத்துடனும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வேசுத் தடை அறைகள் காற்றுத் தேக்கியுடன் (air reservoir) குழாய் வாயி லாக இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வேகத் தடைக் கட்டுப்பாட்டிதழ் (brake valve) வேகத் தடை காற்று வேகத் தடை 607 அறையினுள் செலுத்தப்படும் காற்றின் அழுத் தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இவ்வேகத் தடைக் கட்டுப்பாட்டிதழ் கால் அழுத்துங் கட்டையால் (foot pedal) இயக்கப்படுகிறது. டைத்திரை உருளை ந்து துளை சுருள்வில் B- H படம் 1. சுருள்வில் இணைந்த காற்று வேகத் தடை அமைப்பு இயக்கம். கால் அழுத்துங் கட்டை அழுத்தப் பட்டதும், அழுத்தப்பட்ட காற்று வேகத் தடை அறைகளில் உள்ள இடைத் திரைக்குச் (diaphragm) சென்று செயல்படுகிறது. இவ்விடைத் திரை. வேகத் தடை நெம்புருளுடன் இணைக்கப்பட்டிருக்கும். உயர் காற்று அழுத்தத்தால் இடைத் திரை தள்ளப் படும் போது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நெம்பு ருளும் இயங்கி, வேகத் தடைக் கட்டைகள் இழுவை வில்லின் விசையை மீறி விரிக்கப்படுகின்றன. இதனால் வேகத் தடை உருளையில் உராய்வு ஏற்படுத்தப் பட்டுச் சுழற்சி நிறுத்தப்படுகிறது. கால் அழுத்தக் கட்டையிலிருந்து. கால், விடுவிக்கப்பட்டதும் இழுவைவில் இயல்பின்படி அழுத்தக்கட்டையைத் தன் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறது. இதனால் வேகத்தடைக் கட்டுப்பாட்டிதழ் மூடப்படு கிறது. மேலும் வேகத்தடை அறைகளில் காற்றும் விடுவிக்கப்படுகிறது. உள்ள வேகத்தடை அறைகளில் உள்ள காற்றழுத்தம் விடுவிக்கப்படுவதால் அதிலுள்ள இடைத்திரை தன் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது நெம்புருளும் தன் இயல்பு நிலையை அடைகிறது. அதனால் வேகத் தடைக் கட்டைகள் இயல்புநிலையை அடைந்து பின்னுகின்ற நிலை தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு கால் அழுத்துங் கட்டையின் அழுத்தத்திற்கு ஏற்ப வேகத் தடை ஏற்படுகிறது.