608 காற்று வேட்கை
608 சுாற்று வேட்கை காற்றழுத்த வேகத் தடையின் பகுதிகள் காற்றழுத்தப் பொறி. இப்பொறி, காற்றின் அழுத் தத்தைத் தேக்கியினுள் மிகுதிப்படுத்துவதற்குப் பயன்படும். பொதுவாக உந்து வகைக் காற்றழுத்தப் பொறிகளே (piston type) வேகத்தடை முறைகளில் பெரிதும் பயன்படுகின்றன. உள்ளிழுக்கும் வீச்சின் போது சுத்திசுரிக்கப்பட்ட காற்று உள்ளிழுக்கும் அடைப்பிதழைத் திறந்துகொண்டு உருளையினுள் நுழைகிறது. உந்து தண்டு அழுத்து வீச்சிற்காக மேலே செல்லும்போது மேலுள்ள காற்று அழுத்தப் பட்டு வெளியேற்றக் கட்டுப்பாட்டிதழ் வாயிலாக வெளியேறுகிறது. அழுத்தக்காற்று, குழாய்வழியாகத் தேக்கியை அடைகிறது. காப்புக் கட்டுப்பாட்டிதழ். இது ஒரு தானியங்கிக் கட்டுப்பாட்டிதழ் ஆகும். இது தேக்கிக்கும் காற் றழுத்தப் பொறிக்கும் இடையில் பொருத்தப் பட்டிருக்கும். தேக்கியில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் காற்றழுத்தம் ஏற்படும்போது தானாக இயங்கி. திறந்து கொண்டு காற்று வெளியேறி, மிகு அழுத்தத் தால் ஏற்படக் கூடிய விபத்தைத் தவிர்க்க உதவுகிறது. காற்றுத் தேக்கி. இது ஒரு சாதாரண எஃகு உருளை ஆகும். இத்தேக்கி உயர்ந்த காற்று அழுத்தத்தைத் தாங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப் பட்டிருக்கும். இதன் இரு புறமும் குழாய் இணைப்பு கள் இருக்கும். வேகத்தடைக் கட்டுப்பாட்டிதழ். இக்கட்டுப் பாட் டிதழ் கால் அழுத்துங் கட்டையால் செயல்படுத்தப் படுகிறது. இவ்வடைப்பிதழ் தேக்கிக்கும் ஒவ்வொரு வேகத் தடை அறைகளுக்குச் செல்லும் இணைப்புகளுக்கும் இடையில் பொருத்தப்படுகிறது. குழாய் வேகத்தடை அறை. இவ்வேகத் தடை அறையி னுள் முன் பின் நகர்ந்து இயங்கக்கூடிய ஓர் இடைத் திரை இருக்கும். இவ்விடைத் திரை வேகத்தடை நெம்புருளுடன் தண்டுகள். இழுவை வில் ஆகியவை மூலம் இணைக்கப்பட்டிருக்கும். வேகத் தடை அறை. இடைத் திரையால் இருபகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. தொடர் முனைக்கு, எதிர்முனைக் காற்று வெளியேறா வண்ணம் காக்கப்பட்டிருக்கும். இதனால் உயர் காற்றழுத்தம் இடைத்திரையில் செயல்பட்டு அதைத் தள்ளுகிறது. இத்தள்ளு விசை, நெம்புரு ளுக்கு அளிக்கப்பட்டு வேகத்தடை ஏற்படுத்தப்படு கிறது. விரைவு வெளியேற்றுக் கட்டுப்பாட்டிதழ். இக்கட்டுப் பாட்டிதழ் முன்புற வேகத்தடைக் குழாய் இணைப்பு களில் பொருத்தப்பட்டு வேகத்தடை அறையிலிருந்து வெளியேறும் காற்றை விரைவுபடுத்தி விரைவாக வெளியேற்றம் அடைய உதவுகிறது. இக்கட்டுப்பாட் டிதழ் நேரடியாசு, வேகத்தடை அறையின் காற்றை வெளியே அனுப்புகிறது. வேகத்தடைக் கட்டுப்பாட்டி தழில் வெளியேற்றப்படும் முன்னரே இக்கட்டுப் பாட்டிதழால் காற்றழுத்தம் விடுவிக்கப்படுவது இதன் சிறப்பாகும். இடையூட்டி அல்லது இடைமாற்றிக் கட்டுப்பாட்டி தழ். இக்கட்டுப்பாட்டிதழ் வேகத்தடை அறையின் உட்புகும் மற்றும் வெளியேறும் காற்றின் வேகத்தை விரைவாக்குகிறது. உடனடி வேகத் தடையைப் பெறக் காற்றை நேராக வேகத்தடை அறைகளுக்கு விரைந்து அனுப்புகிறது. அது போலவே பின்புறத்தில் உள்ள வேகத் தடை அறைகளில் உள்ள காற்று, வேகத் தடைக் கட்டுப்பாட்டிதழ் வழியாக வெளியேறும் முன்னரே விரைந்து வெளியேறிக் காற்றழுத்தத்தை விடுவிக்கிறது. எச்சரிப்பான் (warning signal). இது காற்றழுத்தத் தேக்கியில் ஏற்படும் குறைந்த அழுத்தத்தை ஓட்டு நருக்கு உணர்த்தி எச்சரிக்கக்கூடிய ஓர் ஒளி அல்லது ஒலி அமைப்பாகும். இது மின்னாற்றலால் செயல் படக்கூடியது. காற்று வேகத்தடை பயன்படும் இடங்கள். காற்று வேகத் தடை பெரும்பாலும் தானியங்கு கரைக ஊர்திகளில் தனித்தும், துணை ஆற்றலாகவும் பயன் படுத்தப்படும். வெ. ஸ்ரீதர் நூலோதி. Baumeister, A. Avallone, Baumcister III. Marks Standard Hand Book for Mechanical Engineers, Eighth Edition, McGraw-Hill Book Company, 1978. காற்று வேட்கை மூச்சுப்பாதை அயல் இந்நோய்க்கு முக்கிய காரணம் அடைப்பாகும். குழந்தைகளிடத்தில் பொருள்கள் மூச்சுக் குழாயில் சிக்கிக் கொள்வது அல்லது தொண்டை அடைப்பான் போன்ற நோய்களால் காற்று வேட்கை ஏற்படலாம். மேல் தொண்டை, குரல்வளை வழியாகக் காற்றுப் பாதை தொடங்கி,மூச்சுக் குழல், மூச்சுக் கிளைக் குழல் வரை செல்கிறது. இதில் எங்காவது அடைப்பு ஏற் பட்டால் காற்று வேட்கை உண்டாகும். உணவுப் பொருள்கள்கூட மூச்சுப் பாதையை அடைக்கலாம். இத்தகைய அயல் பொருளை அகற்ற, நோயாளியின் இடுப்பை நன்கு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, அடி வயிற்றைப் பலமாக அமுக்கினால், வயிற்றுள் அழுத்தம் அதிகரிக்க, தொண்டையிலுள்ள பிற பொருள் வெளிவந்து விடலாம். குரல் வளைக்கு நரம்பூட்டம் அளிக்கும் குரல் வளை நரம்பின் செயலிழப்பு, மூச்சுக் குழலின்