காற்றோட்டம் 611
காற்றோட்டக் கருவிகள் உருவாக்கும் வரைவுகளில் பயன்படுத்தப்பட்டு, மிகு எண்ணிக்கையினாலான கட்டடங்களுக்கு அடிப்படையான காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன, அறைக் காற்றின் வெப்ப அளவு அளவு வெளியிலிருப்பதைவிட மிகுதியாக இருப்பின், அந்தக் காற்று மேல்நோக்கி நகர்ந்து கட்டடத்தின் மேல்பகுதியிலுள்ள திறப்பின் வழியே வெளியேறுகிறது. குளிர்ந்த காற்று, கட்டடத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள திறப்பின் வழியே உட்புகுந்து வெப்பமான காற்றை இடமாற்றுகிறது. மாறும் காற்றின் அளவு, உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இருக்கும் வெப்பநிலை வேறுபாடு, உள்ளே செல்லும் வழி (inlet) மற்றும் வெளியேறும் வழி (outlet) ஆகியவற்றிற்கிடையே உள்ள உயர் வேறுபாடு மற்றும் திறப்புகளின் பரப்பளவு ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். உள்ளே செல்லும் வழித்திறப்பு கள் காற்று வீசும் திசையில் கீழ்ப்பகுதிகளிலும் வெளி யேறும் வழித்திறப்புகள் எதிர்த்திசையில் மேல் பகுதி களில் கூரையின் அருகில் உள்ள பக்கச் சுவர்களிலும் கூரைகளிலும் அமைக்கப்பட்டிருக்கும். எந்திரக் காற்றோட்டம். எந்திர வழங்கு காற் றோட்டம் என்பது பகிர்ந்தளிக்கும் குழாய்கள் கொண்ட மைய விசிறி அமைப்பு மூலம் ஒரு பெரிய இடத்திற்கோ பல இடங்களுக்கோ பயன்படுத்தும் மைய வகை எனவும், சிறிதளவு குழாய் அல்லது குழாய் வேலைகள் ல்லாமலேயே ஒரு பெரிய இடத்திற்கோ, பெரிய இடத்தின் ஒரு பகுதிக்கோ பயன்படுத்தும் தனிப்பட்ட வகை எனவும் இரு வகைப்படும். இவ்விரு வகைகளையும் பள்ளிக்கூடங் கள். வணிகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம். காற்றோட்டம் 611 உள்ளே வெளிப்புறக் காற்று இணைப்புகள் பொதுவாக அனைத்து அமைப்புகளிலும் பொருத்தப்படுகின்றன. கெடுநாற்றத்தை நீக்குவதற்கும் பலவிதமான சுட்டட இடங்களிலிருந்தும் கருவிகளிலிருந்தும் வெளியேற்றப் பட்ட காற்றை இட்டு நிரப்பவும், வெளிப்புறக் காற்று கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் தேவை யாகும். காற்றை உள்விடும் வழிகள், புகை, தூசிப் பொருள்கள். பூந்தூள்கள் முதலியவை நுழைவதைக் குறைக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் முழுமையான தூய காற்றுக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமையால், சில தொழிற்சாலைகள் அல்லது கோடை உதவிப் பயன்பாடுகள் பொதுவாகக் காற்றோட்டக் காற்று வடிகட்டிகள் இவ்வமைப்பின் உறைகளில் பொருத்தப்பட்டிருக்கும். இது காற்றை வெப்பப்படுத்தும் கருவியில் (air heater) காற்றுத் தடைப்படுவதையும் குறைந்த வெப்பப் பரி மாற்றம் நிகழ்வதையும் தடுக்கிறது. இவ்வமைப்பு களால் பூந்தூள், தூசி ஆகியவை குறையும் வாய்ப்புள்ளது. தவிர, காற்றோட்ட வெளியேற்றி அமைப்புகள், (exhaust ventilation Systems). ஒரு சூழப்பட்ட இடத்திலிருந்து (enclosed occupied space) கெடுநாற்றம், புகை, தூசி மற்றும் வெப்பம் ஆகியவற்றை நீக்குவதற்குக் காற் றோட்ட வெளியேற்றி தேவைப்படுகிறது. இவ்வகை வெளியேற்றி, முன்பே விளக்கப்பட்ட இயற்கை முறையாகவும் அல்லது சுவர் வெளியேற்றி விசிறி அல்லது எந்திர வெளியேற்றி அமைப்புகளாகவும் இருக்கலாம். எந்திர அமைப்புகள் குறைந்த அளவு குழாய் வேலைகள் சிறிதளவும் இல்லாமல் அல்லது விரிவான குழாய் வேலைகளுடன் கூடியதாக அவ்விடத்திற்குரிய செயல் இயக்கங்களிலிருந்து அ க.8-39 அ VAWAWAYDAY படம் 2. சூழப்பட்ட இடத்தில் காற்றின் அசைவு