பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 கான்‌ ஆய்வு

612 கான் ஆய்வு (process operation) உண்டாகும் வெப்பக்காற்று. வளிமம். புகை, தூசி, ஆகியவற்றைத் திரட்டு வதற்குப் பயன்படுத்தப்படும். வெளியேற்றிக் குழாய்கள் மூலமாகத் தூசியைக் கடத்த நேரும் ங்களில் தூசியைக் கடத்திச் செல்லும் அளவிற்கு அதன் விரைவு இருக்க வேண்டும். இந்நோக்கத்திற்கு விரைவானது 3000-6000 அடி நிமிடத்திற்கு (914-1828 மீட்டர் ஒரு நிமிடத்திற்கு) இருக்க வேண்டும். குறைந்த அளவு விரைவு புகையை நீக்குவதற்குப் போதுமானதாக இரு ருக்கலாம். ஆனால், அரிப்பிலிருந்து பாதுகாக்க, தகுந்த குழாய்கள் மற்றும் கருவிப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வட்ட வடிவமான குழாய்களே பெரும்பாலும் தூசி மற்றும் புகை அமைப்புகளில் பயன்படுகின்றன. ஏனெனில், அவை குறைந்த உராய்வும், நன் முறையில் கையாளும் தன்மையும் கொண்டுள்ளன. தூசியைக் சாதாரண காற்றோட்ட வெளியேற்றி அல்லது வெப்பத்தை வெளியேற்றுதல் ஆகியவற்றில் விசிறி கள். வழங்கு விசிறிகளை (supply (supply fan) ஒத்து இருக்கலாம். ஆனால் புகை மற்றும் தூசி வெளியேற்றி விசிறிகள் மிகவும் கடினமானவை யாகவும், ஆர -அலகுகள் கொண்டனவாகவும் இருத்தல் முக்கியமானதாகும். அச்சு வழிப் பாய்மம், மைய விலக்கு விசிறிகளும் வ்வகையில் பயன் படுகின்றன. மு.புகழேந்தி நூலோதி.I. C. Syai & A. K. Goel, Reinforced Concrete Structures, Second Edition, Wheeler & Co. Pvt. Ltd.. Allahabad, 1987. . கான் ஆய்வு இந்த ஆய்வு பால்வினை நோயைக் கண்டுபிடிக்க உதவும். பால்வினை நோய்களில் பல வகையுண்டு. இவற்றுள் மேக நோய், வெட்டை நோய் என்பவை மிக முக்கியமானவை. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேக நோய் ஐரோப்பா முழுதும் முனைப் புடன் பரவியிருந்தது. சிபிலிஸ் என்னும் ஆட்டிடை யனை இந்நோய் தாக்கியதால் இந்நோய்க்கு இதே பெயர் இடப்பட்டது என்று கூறுவர். இது முதல் சுட்டம், ரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என மூவகைப்படும். முதல் இரண்டு கட்டங்களில் நுண்ணோக்கி மூலம் ஆய்ந்து இந்நோயை உறுதிப் படுத்த இயலும். ஆனால் பால்வினை நோயை ஆய்வின் மூலம் அறுதியிட இரத்த ஆய்வு முக்கிய மாகும். இதுவும் வாஸர்மன் ஆய்வு (Wasserman test) கான் ஆய்வு (Khan test) பால் வினை நோய் ஆராய்ச்சி நிலைய ஆய்வு (Venereal Disease Research Labratory) என மூவகைப்படும். மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆய்வு சுருக்கமாக வி.டி.ஆர். எவ் (V.D.R. L) எனப்படும். இவற்றுள் வாஸர்மன் ஆய்வு சிறந்ததென்று தொடக்க காலத்தில் கருதப்பட்டு வந்தது. ஆனால் அதில் உள்ள பல குழப்பமான பகுதிகளால் நாளடை வில் இம்முறை கைவிடப்பட்டது. அடுத்துக் கூறப் பட்ட இரண்டு ஆய்வுகளும் இதைவிடச் சிறப்பாகக் கருதப்பட்டன. கான் ஆய்வு என்பது ஓர் ஆய்வுக் குழாயின் மிதப்பு (Tube Flocculation test) ஆய் வாகும். செய்முறை. இந்த ஆய்வில் மூன்று கண்ணாடிக் 0.5 மி.லிட்டர் இரத்தம் எடுத்துக் குழாய்களில் கொள்ள வேண்டும். பிறகு புதிதாகச் செய்யப்பட்ட எதிர்ச்செனிக்(antigen) கரைசலைப் பல்வேறு அளவு களில் (0.05 கரைசல். 0.025 கரைசல், 0.0125 கரைசல்) எடுத்துக் குழாயிலிட்டுக் கலக்கவேண்டும். பிறகு கான் குலுக்கல் முறையில் நிமிடத்திற்கு 280 அதிர்வுகளாகக் குலுக்கிய பிறகு உப்பு நீரைச் சேர்த்துச் சற்று நேரம் வைத்துக் கவனிக்க வேண்டும். நோய் இருப்பதைத் தெரிவிக்கும் வகையில் சிறிய மிதப்புகள் மேலே மிதக்க நேரிடும். இந்த மூன்று குழாய்களிலும் காணப்படும் மிதப்புகளின் அளவைக் கொண்டு நோயின் முனைப்பு உறுதி செய்யப் படும். நோய் இல்லையென்றால் மூன்று குழாய்களிலும் ஒரே மாதிரியான வெண்மையான கலங்கல் மட்டும் காணப்படும். சில நேரங்களில் நோய் இல்லாமல் இருப்பினும் குழாய்களில் மிதப்புகள் உண்டாகலாம். இந்நிலை ஒரு தவறான கணிப்பாகும். எனவே அறுதி யிட்டுக் கூறுவதற்காக மற்றொரு சிறந்த முறை சுண்டுபிடிக்கப்பட்டது. அதற்குக் கான் சரிபார்க்கும் ஆய்வு என்று பெயர். இந்த முறை 1 வெப்பத்திலும் 37• வெப்பத் திலும் ஆய்வு செய்யப்படுகிறது. மேக நோய்க்கான எதிர்ப்பு ஆற்றல்கள், ஆய்ந்தறியப்படும் இரத்தத் தில் இருக்குமானால், அது 37 இல் உறுதியான விளைவுகளை ஏற்படுத்தும். மாற்று எதிர்ப்பு ஆற் றல்கள் 19 இல் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்தக் கான் ஆய்வு முறையும் சற்றுக் குறைபாடுள்ள தாகவே கருதப்படுகிறது. மூன்றாம் ஆய்வான வி.டி. ஆர்.எல் ஆய்வு கான் ஆய்வைவிடச் சிறந்ததாகக் கருதப்படுவதால், இன்று அனைத்து ஆய்வகங்களி லும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இம் முறை யில் கிடைக்கும் முடிவு சரியானதென்று அனைவரா லும் ஒப்புக் கொள்ளப்படுவதால் இது இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. .சு. ராஜலட்சுமி