கான் ஆய்வுக் கழகம் 613
கான் ஆய்வுக் கழகம் கானியல் என்பது (forestry) அறிவியலும் தொழில் நுணுக்கமும் இணைந்த அறிவியல் பிரிவாகும். கானி யற் பணிகள் சீராக நடைபெற வேண்டுமெனில், கானியல் அலுவலர்க்குக் கூர்த்த கானியலறிவும் தேர்ந்த தொழில் துறைப் பயிற்சியும் தேவையாகும். மேலும்கானியல் என்பது வளரும் தாவரங்கள் குறிப் பாகத் தாவரக் கூட்டங்கள் (plant communities) பற்றிய அறிவியல் மட்டுமன்றி அவற்றின் பாதுகாப்பு, மேம்பாடு, பயன்பாடு என்பனவற்றையும் உள்ளடக்கி யதாகும். காடுகள் தற்காலத் தலைமுறையினருக்கு மட்டு மன்றி எதிர்காலச் சந்ததியினரின் பயன்பாட்டிற்கும் வழிவகுக்கும். ஏனெனில் காடுகள் ஓரிரு ஆண்டுகளில் வளர்ந்து பயன் தருவனவல்ல. அவை நீண்ட வளர்ச்சிக்காலம் கொண்டவை. ஆகவே கானியல் என்பது நெடுங்காலத் தெ தொலை நோக்குத் தொழிற் செயற்பாடு ஆகும். அந்நீண்ட இடைக்காலத்தில் வானிலை உயிரினக் காரணிகளின் தாக்கத்தால் ஏற் படும் இடையூறுகள், தீங்குகள் இவற்றினின்றும் காடு களைப் பாதுகாக்க வேண்டிய இன்றியமையாமை உள்ளது. இது வேறெந்தத் துறைக்கும் இல்லாத தனித்தன்மையாகும். மேலும் பெருகி வரும் மக்கள் தொகையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூலப் பொருள்களைக் காலத்தில் உறபத்தி செய்து அறுவடை செய்து தர வேண்டிய பெரும் பணியும் கானியலார்க்குத் தற்போது ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே உலகில் ஒவ்வொரு நாடும் கானியற் கல்வியையும் கான் ஆய்வையும் மேற்கொண்டுள்ளது. இந்தியக் கானியல், நூறாண்டு நிரம்பிய துறையாகும். தொடக்கத்தில் வேளாண்மைத் துறையுடன் இணைக்கப்பட்டிருந்தபோதும், காலப் போக்கில் கானியல் தன் தனித்தன்மையையும் சிறப்பையும் உறுதி செய்து, அறிவியலடிப்படையில் செயல்பட, கானியற் கல்வியை 1878 ஆம் ஆண்டி ல் உத்தரப்பிரதேச மாநில டேராடூன் நகரில் வனச் சரகர் கல்லூரியைத் தொடக்கியும், 1906 ஆம் ஆண்டில் கானாராய்ச்சிப் பிரிவுகளைத் தொடக்கியும். கோயம்புத்தூரில் 1912 இல் ஒரு வனச்சரகர் கல்லூரியைத் தொடக்கியும் மேம்பாடைந்து, இன்று டேராடூனில், இந்தியக் கானாய்வுக் கழகமும். கல்லூரிகளும் (ges) எனும் பெயரில். தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய நிறுவனமாக, 1951 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அவையின், உணவு வேளாண்மை நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்று, கானியற் கல்வி ஆய்வில் இந்தியருக்கும் வளரும் நாடுகளைச் சார்ந்தவர்க்கும் சிறப்புமையமாகச் செயல்பட்டு வருகின்றது. கான் ஆய்வுக் கழகம் 613 நோக்கங்கள். இந்திய வனப்பணி அலுவலர். மாநில வனப்பணி அலுவலர், வனச்சரகர் ஆகியோருக் கான கானியற் பயிற்சி வழங்குதல், வனவளர்ப்பு. பேணுதல் மேலாண்மை அறுவடை ஆகிய துறை களிலும் வனப்பொருட் பயன்பாட்டுத் துறையிலும் ஆய்வுகளை மேற்கொள்வது, சமூக வளங்கள் வழி யாக மக்கள் கூடுதல் பயன்பெறத் தக்க ஆய்வுகளை மேற்கொள்வது, வனப் பாதுகாப்பு முறைகளில் ஆய்வு செய்து குறிப்பாக, தீங்கு செய்யும் பூச்சி நோய்களிலிருந்து கான் மரங்களைக் காப்பது பற்றிய ஆய்வு மேற் கொள்வது, கானியல், கான்படு பொருட் பயன்பாடு ஆகியவற்றில் வழி காட்டுதல், குறிப்பாக, வனஞ்சார் தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் நுணுக்க அறிவு வழங்குதலோடு அவர் களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளுக்குத் தீர்வு காணுதல் என்பன. கூட்டமைப்பு. மேற்கூறிய நோக்கங்களைச் செயல் படுத்துவற்கு உதவியாக நான்கு இயக்கங்களைக் (directorates) கொண்ட அமைப்பாக இந்தியக் கானாய்வுக் கல்லூரி உருவாக்கப்பெற்றுள்ளது. வனத்துறையின் மூத்த அலுவலர் ஒருவர் இவ்வமைப் பின் பெருந்தலைவராகச் செயல்படுகிறார். அவருக்கு உதவியாக நான்கு இயக்குநர்கள் கானியற் கல்வி இயக்கசும். கானாய்வு இயக்ககம், கானுயிரியல் இயக்ககம், கான்படு பொருள் ஆய்வு இயக்ககம் இயக்ககங்களின் தலைமைப் பொறுப்பில் கிய உள்ளனர். இவ்வியக்கங்கள். கானியல் வல்லுநர்கள், வன அறிவியலார் கொண்ட பல்துறைப் பணிக்குழுக் களைத் தம்முடன் கொண்டு, டேராடூனில் மட்டு மன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலப் பகுதிகளிலும் கிளையாகப் பரவிச் செயல்படுகின்றன. கானியற் பயிற்சிக் கல்லூரிகள், டேராடூனில் இந்திய வனப்பணி அலுவலர்க்கும். டேராடூன் பர்னிகாட் (அஸ்ஸாம்), கோயம்புத்தூர் (த.நா) ஆகிய நகரங்களில் மாநில வனப்பணி அலுவலர்க்கும் அமைந்துள்ளன. நான்கு வனச்சரகர் பயிற்சிக் கல்லூரிகள், இக்கழகத்தின் நேரடி மேலாண்மையில் கோயம்புத்தூர் (த.நா). சந்திரப்பூர் (20.19.) கர்சியாங் (மே.வ) பாலகாட் (ம.பி.) ஆகிய நகரங் களில் இயங்கி வருகின்றன. சரகருக்கான கல்லூரிகள் ஹல்துவானி (உ.பி), ஜபல்பூர் (ம.பி), ராஜ்பிப்லா (குஜராத்), சிகால்தாரா (மராட்டியம்), அங்குல் நகர் (ஒரிஸ்ஸா) ஆகிய இடங்களில் டோராடூன் கானாய்வுக் கழகத்தின் பயிற்சி நெறி முறைகளுக்குட்பட்டு அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்பெறுகின்றன. தலைமை நிறுவனத்தின் மேற்பார்வையில் கோயம்புத்தூர். பங்களூர் (கர்னாடகா), பர்னிகாட்