614 கானரிப் பறவை
6/4 கானரிப் பறவை (அஸ்ஸாம்) ஜபல்பூர் ராஞ்சி (பீஹார்)னஹதராபாத் (ஆ.பி) சிம்லா (இ.பி.) ஆகிய இடங்களில் வட்டாரக் கானாய்வு மையங்கள் இயங்கி வருகின்றன. மாதிரி பற்றிய இந்நிறுவனத்தின் கீழ் ஆறு அருங்காட்சியகங் கள் பேணப்பட்டு வருகின்றன. 15,000 களைக் கொண்ட தடிமரக் காட்சியகம் (xylarium) 3 லட்சத்திற்கு மேற்பட்ட மாதிரிக் காட்சியகங்கள் (herbaria) ஆகியவை கானியல் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஏனையோருக்கு வனங்கள் அறிவை வழங்குகின்றன. கோயம்புத்தூர் கல்லூரி வளாகத்தினுள் அமைந்துள்ள கான் பொருள் அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் சிறப்புறு காட்சியகம் ஆகும். கானியலின் பல்வேறு துறைகள் பற்றிய குறிப்புகள், நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் முதலியவற்றைப் பெருமளவில் வெளியிடுவதும் இக் கழகத்தினரின் சிறப்புப்பணிகளில் ஒன்றாகும். கானரிப் பறவை வனக் வனப் ச. பாலகதிரேசன் இவை ஃப்ரின்ஜில்லிடியே (fringillidiae) குடும்பத் தைச் சேர்ந்தவை. முதன் முதலில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கானரித் தீவுகளில் கண்டு பிடிக்கப்பட்டமையால் இவை இப்பெயர் பெற்றன. தற்போது உலகின் பல பகுதிகளிலும் காணப்படு கின்றன. வீட்டுப் பறவை மிக இனிமையாகப் பாடும். காட்டுப்பறவைகள் கரும்பச்சை நிறத்துடன் இருக்கும். 20 செ. மீ. நீளம் வரை வளரும். இவை எப்பொழுதும் இணையாகவே இருக்கும். உயரமான மரக்கிளைகளில் கூடு கட்டி 4-5 முட்டைகளிடும். வீட்டுப் பறவைகள் மஞ்சள் நிறத்தி லிருக்கும். இப்பறவைகள் போர்க் காலங்களில் நிலக்கரிச் சுரங்கங்களின் நச்சுக் காற்றை அறிய ஆய்வகங்களில் ஆய்வுப் பறவைகளாகப் பயன் படுகின்றன. கானல் நீர் கூ. கு. அருணாசலம் ஓர் ஊடகத்திலிருந்து வேறுபட்ட அடர்த்தியுள்ள பிறிதோர் ஊடகத்திற்குள் ஒளி நுழையும்போது அதன் திசை மாறுகிறது. இதற்கு ஒளி விலகல் (refraction) என்று பெயர். ஒளி காற்று மண்டலத் மட்டுமே பயணம் திற்குள் செய்யும்போதுகூட இத்தகைய ஒளி விலகல் ஏற்படுவதுண்டு. காற்று மண்டலம் முழுதும் சீரான அடர்த்தியுடனிருப்ப தில்லை. அதில் வெவ்வேறு அடர்த்தியுள்ள பல படலங்கள் உள்ளன. ஒரு படலத்திலிருந்து அடுத்த படலத்திற்குள் ஒளி நுழையும்போது அது தன் நேர் கோட்டுப் பாதையிலிருந்து சற்று மாறுகிறது. சூடான பாலைவனங்களில் வெப்பநிலை 608- 80°C வரை உயரும். அப்போது தரையை ஒட்டிய காற்றுப் படலங்கள் சூடாகி அவற்றின் அடர்த்தி மிகவும் குறையும். அப்போது ஒளி விலகலின் காரண மாக ஒளி மிகவும் திசைமாறி அப்படலங்களிலிருந்து எதிரொளிக்கப்படுவது போலவே தோன்றும். பாலை வனங்களில் கானல்நீர் (mirage) என்னும் மாயத் தோற்றம் ஏற்படுவதற்கு இதுவே காரணம். தொலை வில் சலசலக்கும் நீர்நிலை இருப்பது போன்ற மாயத் தோற்றம் ஏற்பட்டுப் பயணிகள் ஏமாறுவர். நகரங்களில்கூடச் சூடான தார்ச் சாலைகளிலும் கான்கிரீட் சாலைகளிலும் இத்தகைய மாயத் தோற்றம் ஏற்படும். தொலைவிலுள்ள பொருள் களின் உருத்தோற்றங்கள் நீரில் எதிரொளிக்கப்பட்டு வருவது போலத் தலைகீழாகத் தெரியும். சில சமயங்களில் ஒளி விலகலின் காரணமாக அடிவானத் திற்கும் கீழேயுள்ள பொருள்களின் உருத்தோற்றங்கள் கூட மிகத் தெளிவாகத் தெரிவதுண்டு. இத்தகைய காட்சிகள் வழக்கமாக விடியற்காலையில்தான் தோன்றும். அப்போது தரையை ஒட்டியுள்ள காற்று குளிர்ச்சியாக இருக்கும். மேலே உயரத்திலுள்ள காற்றுப்படலங்களில் சூரிய ஒளி பட, அவை சூடாகி அடர்த்தி குறைந்திருக்கும். இந்நிலையில் தெரியும் உருத்தோற்றங்கள் நேராக இருக்கும். சாதாரணமாகக் காற்றோட்டமில்லாத காலங் களில்தான் கானல் நீர்த்தோற்றங்கள் ஏற்படும். காற்றடித்தால் காற்றுப் படலங்கள் கலைந்துவிடும். ஆனாலும் காற்றில் மாயத்தோற்றங்கள் உண்டாவ தற்கான சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன.