கானாங்கீரை 615
காற்றுப் படலங்கள் சிறுசிறு சலனங்களால் கலைந்து விடுவதில்லை. அடி கடலில் விடிவதற்குச் சற்று முன்னால் வானத்திற்கு அருகில் ஒரு சுப்பல் விரைந்து செல்வதைக் கண்டு பழங்கால மாலுமிகள் வியந்திருக் கின்றனர். அதைத் துரத்திச் சென்றால் மறைந்து விடும். அது மூழ்கிப் போன கப்பலின் ஆவி என்னும் ஒரு மூட நம்பிக்கை ஏற்பட்டு அதற்குப் பறக்கும் டச்சுக்கப்பல் எனப் பெயரும் இடப்பட்டது. ஆனால் உண்மையில் அது அடிவானத்திற்கப்பால் சென்று கொண்டிருந்த ஓர் உண்மையான உருத்தோற்றமேயாகும். கானாங்கிரை கப்பலின் கே.என்.ராமச்சந்திரன் காமலைனா பென்கலன்சிஸ் என்னும் கானாங்கீரை. கானாள்வாழை அல்லது கானான் தாவரம். காமலைனேசி என்னும் ஒருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்த 80 சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அசாம், சிக்கிம், மேற்குத் தொடர்ச்சி மலை, திருவனந்தபுரம், கங்கைச் சமவெளிப்பகுதி, வங்காளம், சோட்டாநாகபுரி, வெப்ப, மிதவெப்ப இமாலயப் பகுதிகளில் இத்தாவரங்கள் வளர்கின்றன. வை சதைப்பற்று நிறைந்த ஒரு பருவக் குறுஞ் செடிகள். இத்தாவரங்களின் தண்டு நேராகவும், கவட்டையாகக் கிளைத்தும் காணப்படும். தண்டு மென்மையாகவும், தரைமீது படர்ந்தும் காணப் படும். தண்டின் கணுக்களிலிருந்து வேர்கள் வளரும். கானான் தாவரத்தின் தண்டு 30 90 செமீ. வரை நீண்டு மென்மையாகக் கிளைத்திருக்கும். தண்டு சொர சொரப்பாகவோ மயிரிழைகளுடனோ காணப்படும். இலைகள் தனியானவை; அகன்று முட்டை போன்ற உருவ அமைப்பு சிறிய காம்புடனோ, காம்பற்றோ உடையவை. காணப்படும். லை விளிம்புகளில் மயிரிழைகள் காணப்படுகின்றன. லையின் அடிப்பகுதி சாய்வாகவோ வட்டமாகவோ அமைந்திருக்கும். இலையின் அடிப்பகுதியில் நீளமான அல்லது குட்டையான உறை காணப்படும். இவ்வுறையின் வாய்ப்பகுதியில் மயிரிழைகள் காணப் படுகின்றன. மஞ்சரி பூவடிச் செதில்களால் ஆகிய உறையால் மூடப்பட்டுள்ளது. மலர்கள் மூடப்பட்ட நிலையில் அமைந்துள்ளமையால் மகரந்தச் சேர்க்கை மலர்கள் எனப்படுகின்றன. மலர்கள் நீல நிறங்கொண்ட இருபாலானவை. மலரா கானாங்கீரை 615 பக்கச் சமச்சீர் கொண்ட மூன்று அங்க மலர்கள் கிடைமட்டத்தில் அமைந்துள்ளன. மடல் போன் ற பூவடிச் செதிலிலிருந்து கிளைத்த இரண்டு மலர்கள். சைம் அமைப்பில் தோன்றுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு மலர் மட்டுமே வெளிப்படுகிறது. சைம் மஞ்சரியின் மேல் பகுதியில் காணப்படும் மலர்கள் சிறியவையாகவும் உதிர்வன போன்றும் உள்ளன கீழே உள்ள பூவடிச் செதில் பகுதியில் காணப்படும் மலர்கள் ஒரு பக்கமாக ஒருங்கிணைந்து அமைந்துள்ளன. காமலைனா பென்கலன்சிஸ் என்னும் கானான் தாவரத்தில் மட்டநிலத்தண்டின் கிளைகளில் மூடிய மலர்கள் காணப்படுகின்றன. வளமான மலர்களில் பூவடிச் செதில், மலர்க்காம்பு உள்ளன. ஆறு பூவிதழ்கள், இருவரிசைகளில் வரிசைக்கு மூன்றாக அமைந்துள்ளன. வெளிவரிசைப் பூவிதழ்கள் புல்லிகள் என்றும் உள்வரிசைப் பூவிதழ் கள் அல்லிகள் என்றும் கூறப்படுகின்றன. வெளி வரிசைப் பூவிதழ்கள் சிறியவையாக, முட்டை வடிவத் தோடும் மயிரிழைகளோடும் காணப்படுகின்றன. உள்வரிசைப் பூவிதழ்கள் நீல நிறத்துடன் நீளமாக உள்ளன. இவை பெரும்பாலும் பெரியவையாகவும் பிளவுபட்டும் காணப்படுகின்றன. மகரந்தத்தாள்கள் ஆறு. அவற்றில் மூன்று வளமாகவும் எஞ்சிய மூன்றும் கொண்டனவாகவும் உள்ளன. மலட்டுத்தன்மை மூன்று வளமையான மகரந்தத் தாள்களில், இரண்டு நீளமான வெண்மையான மகரந்தப் பைகளைக் கொண்டுள்ளன. மூன்றாம் மகரந்தத் தாள் குட்டை யாகவும், பெரிய மகரந்தப்பையுடையதாகவும் காணப்படுகிறது. மலட்டு மகரந்தந்தாள்கள் மஞ்சள் நிறத்துடனும் அழகான வடிவமைப்புடனும் காணப்படுகின்றன. ஈரறை மகரந்தப்பை நீள்வாக்கில் வெடிக்கிறது. சூலகம் மூன்று சூவிலைகள் இணைந்து, மூன்று சூலறையுடன் காணப்படுகிறது. மேல் மட்டச் சூலகப் பை; குல்கள் அச்சு ஒட்டு முறையில் அமைந் துள்ளன. மேல்புறச் சூலறையில் ஒரு சூலும், கீழ்ப் புறத்திலுள்ள இரு சூலறைகளில் ஒவ்வொன்றும் ரண்டு சூல்களும் காணப்படும். சூலகத்தண்டு எளிமையாகவும், மென்மையாகவும் உள்ளது. சூலகமூடி சற்றுப் பருத்துக் காணப்படுகிறது. கனி, நீண்டு மூன்று வால்வுகள் கொண்டதாக உள்ளது. இரண்டு வால்வுகள், இரு விதைகள் வீதமும், மூன்றாம் வால்வு ஒரு விதை வீதமும் அமைந்துள்ளன. கனிகள் பெரும்பாலும் மலரடிச் செதிலின் உள்ளே மறைந்து காணப்படுகின்றன. கானான் வாழை மலமிளக்கியாகவும், தொழு நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. எழில் தாவர மாகவும் வளர்க்கப்படுகிறது. கால்நடை மருத்து வத்தில் இது பெரிதும் பயன்படுகிறது. -நா. வெங்கடேசன்