காஸ்மிக் கதிர்களின் சூரிய மண்டல விளைவுகள் 627
சென்கோ ஆகிய பல முக்கிய துறைமுகங்கள் அமைந் துள்ளன. இக்கடலின் மட்டம் குறைவது பெரும் கவலையை அளித்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் இதன் ஆழம் ஏறத்தாழ 7 அடி குறைந்துள்ளது. க்கடல் மட்டம் மேலும் குறையாமலிருக்க இங்கு வந்து சேரும் நன்னீரின் அளவை அதிகரிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. ம.அ. மோகன் காஸ்பே முந்நீரகம் - வளை கனடாவின் கிழக்கேயுள்ள கியுபெக் மாநிலத்தைச் சார்ந்த பாஸ் தூய லாரண்ட் கஸ்பிசியே என்னும் இடத்தில் காஸ்பே முந்நீரகம் (Gaspe peninsula) உள்ளது. இம்முந்நீரகம் கிழக்கு - வடகிழக்காக மட்டபீடியா ஆற்றிலிருந்து தூய லாரன்ஸ் குடா வரை ஏறத்தாழ 240கி.மீ. தொலைவு விரிந்து காணப்படுகிறது. வடக்கில் தூய லாரன்ஸ் ஆற்றுக்கும் தெற்கில் சாலியர் விரிகுடா மற்றும் புதிய பீரன்ஸ்விக்கும் இடையில் இம்முந்நீரகம் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளைக் கொண்ட சிக் சாக் மலைகள் வட க்கு மையத்தில் அமைந்து தூய லாரன்ஸிக்கு இணையாக அமைகின்றன. கஸ்கபீடியா தூயஜீன், யார்க், கிராண்ட், டு கிராண்ட பாபோஸ் போன்ற பல ஆறுகள் இம்முந்நீரகத்தில் கலக்கின்றன. கடற்பகுதியோரமாகப் பெர்சி, சாண்ட்லர், நியு கார்லிஸ்லி போன்ற இடங்களில் குடியேற்றம் காணப் படுகிறது. வட காஸ்பே முந்நீரகத்தில் காஸ்பியன் மாநிலப் பூங்கா போன்றவற்றை உள்ளடக்கிய பெரும் பகுதி கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். இம் முந்நீரகத்தைச் சுற்றி நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. காஸ்பே முந்நீரகத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ள போரில்லான் தேசியப் பூங்கா 20.040 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. மீன்பிடித்தல், வேட்டையாடுதல் முதலிய பொழுது போக்குகளுக்கு இவ்விடம் ஏற்றதாகத் திகழ்கிறது. இங்குள்ள காட்டு மரங்கள் பொருளாதார நோக்கில் பயனுடையவையாகத் திகழ்கின்றன. மேலும் தாமிரம், துத்தநாகம், ஈயம் போன்ற கனிமங்கள் சுரண்டியெடுக்கப்படுகின்றன. காகிதத் தயாரிப்புக்குத் தேவையான கூழ் காட்டு மரங்களிலிருந்து தயாரிக்கப் படுகிறது. ம.அ.மோகன் காஸ்மிக் கதிர்களின் சூரிய மண்டல விளைவுகள் காற்றின் மின் கடத்துந் திறனைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருந்தபோது காஸ்மிக் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்காலத்தில் தெரிந்திருந்த அ.க.8-40 அ காஸ்மிக் கதிர்களின் சூரிய மண்டல விளைவுகள் 627 கதிரியக்கத் தோற்றுவாய்களால் மட்டுமன்றி வேறு ஏதோ ஒரு தோற்றுவாயிலிருந்து வருகிற கதிர்களா லும் காற்று அயனியாக்கம் செய்யப்படுவதாக அந்த ஆய்வுகள் காட்டின. புவிப் பரப்பிலிருந்து உயரே போகப் போக இந்தக் கதிர்களின் செறிவு அதிகரிப்ப தாகத் தெரிந்தது. எனவே புளிக்கு வெளியிலிருக்கிற ஒரு தோற்றுவாயிலிருந்து இந்தக் கதிர்கள் வருவன வாகக் கருதப்பட்டது. இந்தக் கதிர்களில் ஒரு குறுக்குக் கோட்டு விளைவும் (latitude effect) ஒரு கிழக்கு-மேற்கு விளைவும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்தத் தோற்றுவாயிலிருந்து உயர் ஆற்ற லுள்ள நேர்மின் துகள்கள் புவியின் வளிமண்டலத்தில் புகுமென அறியப்பட்டது. இந்த உயர் ஆற்றல் மின் துகள்களே காஸ்மிக் கதிர்கள் எனப்படுகின்றன. புவியில் வந்து மோதுகிற துகள்கள் மட்டுமல்லாமல் சூரிய மண்டல வெளியிலும், கோளிடை வெளியிலும். விண்மீன் மண்டலத்திலும் பரவியிருக்கிற துகள்களும் இதில் அடங்கும். அண்டம் முழுதுமே இக் காஸ்மிக் துகள்கள் பரவியுள்ளன எனக் கருதலாம். சூரிய மண்டலத்திற்குள்ளிருக்கும் காஸ்மிக் கதிர்களை இரு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒரு கூறு சூரியனிலிருந்து வருவது. ஏனையது சூரிய மண்டலத்திற்கு வெளியி லுள்ள விண்மீனின் வெளிப்பகுதியிலிருந்து வருவது. புவியின் வான் ஆலன் கதிர் வீச்சு வளையங்களி லிருந்தும், புவிக் காந்தப் புயல்கள் தாக்கும்போது புலியின் காந்தக் கோளத்திலிருந்தும், வியாழனின் காந்தக் கோளத்திலிருந்தும், கோளிடை வெளி யில் பரவும் அதிர்ச்சி அலைகளிலிருந்தும் கூட உயர் ஆற்றல் துகள்கள் வெளிப்படுகின்றன. ஆனால் அவற்றைக் காஸ்மிக் கதிர்களுடன் சேர்ப்பதில்லை. பல சமயங்களில் அவை ஒன்றோடொன்று கலந்து விடுவதும் உண்டு. மேலும் சூரிய மண்டலத்திலுள்ள பல எலெக்ட்ரான் வோல்ட் முதல் ஏறத்தாழ 100 எலெக்ட்ரான் வோல்ட் வரை ஆற்றலுள்ள துகள்கள் அங்குக் காணப்படுகின்றன. உயர் ஆற்ற லுள்ள துகள்கள் மட்டுமே காஸ்மிக் கதிர்கள் எனப் படுகின்றன. சில நூறு கிலோ எலெக்ட்ரான் வோல்ட் டுக்கு மேற்பட்ட ஆற்றலுள்ள புரோட்டான்களும், சில பத்துக் கிலோ எலெக்ட்ரான் வோல்ட்டுக்கு மேல் ஆற்றலுள்ள எலெக்ட்ரான்களும் காஸ்மிக் கதிர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சூரிய மண்டலக் காஸ்மிக் கதிர்களிலிருந்து சூரிய வளிமண்டலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது. சூரியப் பிழம்புகளில் துகள்கள் முடுக்கப் படுகிற செயல் முறைகளைப் பற்றியும் அறிய முடி கிறது. சூரியப் பிழம்புகளில் துகள்கள் முடுக்கப் படுகிற செயல் முறைகள், காந்தப் புயல்களின் போது புவியின் காந்தக் கோளத்தில் துகள்கள் முடுக்கப்படுகிற செயல் முறைகளையும், வேறு பல வானியற்பியல் சூழ்நிலைகளில் துகள்கள் முடுக்கப் படுகிற செயல் முறைகளையும் ஒத்தவையாக இருக்க