கற்காரைத் தளம் 45
ஒரு தளத்தில் நீள்திசை இடைவெளிக்கும், அகலத் திசை இடைவெளிக்கும் உள்ள விகிதம் 2 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது ஒருவழித் தளம் (one way slab) எனப்படும். மாறாக விகிதம் 2க்குக் குறை வாக இருந்தால் அது இருவழித்தளம் (two way slab) எனப்படும் (படம்2, 3) ஒவ்வொரு திசையிலும் ஏற் படும் சுமைப் பரவல் மற்றும் இரு திசைகளிலும் ஏற்படும் விறைப்பு முதலியவற்றைப் பொறுத்து ஒரு வழித்தளம் அல்லது இருவழித்தளம் தேர்வு செய்யப் படும். இவ்விரு தளங்களிலும் பல தாங்கிகளைக் கொண்ட தொடர்தளங்களும் (continuous slab) உண்டு. தாங்கிகளுக்கிடையில் உள்ள தொலைவு மிகுதி யாக இல்லாமல் இரு தாங்கிகள் மட்டும் எதிர்த் திசையில் இருந்தால் அதன்மீது அமைக்கும் தளத்தை ஒருவழித் தளமாக அமைக்க வேண்டும். ஒருவழித் தளத்தில் முதன்மைக் கம்பிகள் தாங்கிகளை ணைக்கும் திசையிலும், பரவலாக்கப்பட்ட கம்பிகள் அதற்குக் குறுக்குத் திசையிலும் இருக்கும்படி அமைக்க வேண்டும். ஒரு வழித் தளத்தை மிக அதிக இடை வெளி உள்ள இடத்தில் அமைத்தால் தளத்தின் கனம் மிகவும் அதிகமாகி விடும். அதனால் தன் எடையும் மிக அதிகமாகி விடும். இருவழித் தளத்தில் இரு திசைகளிலும் முதன்மைக் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். தொய்வு திருப்புத்திறன் இரு திசைகளிலும் கணக்கிடப் பட வேண்டும். இந்திய செந்தர எண் 456-1978இல் கூறியுள்ளபடி, இந்திய செந்தரத் தொகுப்புமுறையின் படிக் (Indian standard code method) கணக்கிட வேண்டும். தாங்கிகளுக்கிடையே உள்ள இடைவெளி ஒரு திசையில் மிக அதிகமாக இருந்தால், உத்திரங் களுடன் கூடிய ஒருவழித்தொடர் தளம் அமைக்க வேண்டும். தாங்கிகளுக்கு இடையில் உள்ள இடை வெளி இரு திசைகளிலும் மிக அதிகமாக இருந்தால் இரு வழித்தொடர் தளம் அமைக்க வேண்டும். தளத்தின் மூலைப் பகுதிகள் கீழே தொங்காதவாறு நான்கு முனைகளும் தாங்கிகள் மீது அமர்ந்திருக்கக் கூடிய ஒரு தளம். சீராகப் பரவலாக்கப்பட்ட சுமையைச் (uniformly distributed load) சுமப்பதால் அத்தளத்தைக் கிரசாப் மற்றும் ராங்கின் முறைப் படிக் கணக்கிட வேண்டும். மூலைப்பகுதிகள் கீழே தொங்குமாறு தாங்கிகள் நடுப்பகுதியில் இருந்தால் அத்தளத்தை மார்கசு முறைப்படிக் கணக்கிட வேண்டும். ஒருவழித் தளத்தைத் திட்ட வரையீடு செய்யத் தேவையான இந்திய செந்தரத் தொகுப்பு விதி முறைகள்: நிகர இடைவெளி உள்கூடு இடைவெளி + தளத்தின் கனம். நிகர கனம் = கம்பிகளின் மையப் உத்திரம் D உத்திரம் D யின் மேலுள்ள சுமை உத்திரம் [ (உத்திரம் C-யின் மே லுள்ளசுமை கற்காரைத் தளம் 45 145° உத்திரம்Bயின் மேலுள்ள சுமை உத்திரம் B குறைவான இடைவெளி- உத்திரம் A யின் மேலுள்ள சுமை. உத்திரம் A நீளமான இடைவெளி படம் 3. சீராகச் சுமையேற்றப்பட்ட இருவழித் தளத்தைத் தாங்கும் உத்திரங்களின் மேலுள்ள சுமைப்பரவல். புள்ளிகளுக்கும் அதிகபட்ச அழுத்தம் ஏற்படும் இழைக்கும் (compression fibre) இடையேயுள்ள தொலைவு. குறைந்த பட்ச கம்பிகள் மிதமான எஃகு கம்பிகளைப் பயன்படுத்தினால் மொத்தக் குறுக்கு வெட்டுத்தளத்தின் பரப்பளவில், கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பளவு 0.15%க்குக் குறையாமல் இருக்க வேண்டும். முறுக்கப்பட்ட சும்பிகளைப் பயன்படுத்தினால் அது 0.12%க்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதிக பட்ச விட்டம் கம்பியின் விட்டம் தளத்தின் கனத்திற்கு 1/8 பகுதிக்கு மேல் இருக்கக் கூடாது. முதன்மைக் கம்பிகளுக்கிடையில் உள்ள இடைவெளி குறைந்த பட்ச அளவு: பெரிய கம்பியின் விட்டம் அல்லது 5 மி.மீ. அல்லது கற்காரையில் உள்ள பெரிய கல்லின் அளவு இவற்றில் எது அதிகமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதன்மைக் கம்பிகளின் இடையேயுள்ள அதிக பட்ச இடை வெளி கம்பியின் விட்டத்தைப்போல மூன்று மடங்கு அல்லது 450 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். பரவலாக்கப்பட்ட கம்பிகளிடையேயுள்ள இடைவெளி சும்பியின் விட்டத்தைப் போல ஐந்து மடங்கு அல்லது 450 மில்லி மீட்டர் இருக்க வேண் டும். கம்பியின் மேல் கற்காரை ஓரத்திண்ணம் 15 மி.மீ. அல்லது கம்பியின் விட்டத்தின் அளவு இருக்க வேண்டும். துணிப்புத் தகைவு. கற்காரைத் தளத்தின் துணிப் புத் தகைவு. பயன்படுத்தப்படும் கற்காரையின் அதிகபட்ச துணிப்புத் தகைவான சக்தியில் பாதிக்கு மேல் இருக்கக்கூடாது. விலக்கம். கற்காரை உத்திரத்திற்குக் கணக்கிடுவது போலவே தாங்கிகளுக்கு இடையில் உள்ள டை