630 காஸ்மிக் கதிர்களின் வானியற்பியல் விளைவுகள்
630 காஸ்மிக் கதிர்களின் வானியற்பியல் விளைவுகள் சூரியக்காற்று இடைவினைகள். புவிக்கு வரும் காஸ்மிக் கதிர்கள் பல வேளைகளில் ஏறத்தாழத் திசையொத்த பண்புடன் உள்ளமை சூரியக் காற்றி லுள்ள காந்தவியல் ஒழுங்கீனங்களுடன் காஸ்மிக் கதிர்கள் அடிக்கடி சிதறல் இடை வினைகள் செய்து தம் இயக்கத்தைச் சமவாய்ப்புள்ளவையாக ஆக்கிக் கொண்டு விடுவதைக்"காட்டுகிறது. இந்த ஒழுங்கீனங் களின் தன்மைகள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. காந்தப் பாய்ம இயக்கவியல் அலைகள், சூரியனிலிருந்து தோன்றும் ஆல்ஃப்வென் அலைகள் போன்ற தொடர்ச்சியின்மைகள், சூரியப் பிழம்புகளும் வெடிக்கும் சூரியப் பிழம்புகளும் சூரியக் காற்றில் வெளிப்படும் காந்தக் குமிழ்கள், உயர் ஆற்றல் சூரியக் காற்றோடைகள் ஆகியவை இந்த ஒழுங்கீனங்களில் அடங்கும். சூரியக் காற்றில் சூரியக் காஸ்மிக் கதிர்களும், விண்மீன் மண்டலக் காஸ்மிக் கதிர்களும் இயங்குவதைக் கோளிடைவெளிக் காந்தப் புலத்தின் திசை விரவலிலும், அவை சூரியனை விட்டு விலகிச் செல்கையில் காந்த ஒழுங்கீனங்களால் ஏற் படும். வெப்பச் சலனங்களின் அடிப்படையிலும், அவை சூரியக் காற்றுப் பாய்வுடன் சேர்ந்து விரிவடை கையில் காந்த ஒழுங்கீனங்களுடன் செய்யும் இடை வினைகளால் ஏற்படும் வெப்ப மாற்றீடற்ற ஆற்றல் இழப்புகளின் அடிப்படையிலும், கோளிடைவெளிக் காந்தப்புலக் கோடுகள் சூரியனுடன் சேர்ந்து சுழலும் போது காஸ்மிக் கதிர்களும் உச்சிக் கோட்டில் இடம் பெயர்வதின் அடிப்படையிலும் விளக்க முடியும். பிழம்பு மூலக் காஸ்மிக் கதிர்கள், 11 ஆண்டுச் சூரியச் சுழற்சியால் மாற்றமடையும் விண்மீன் மண்டலக் காஸ்மிக் கதிர்கள் ஆகியவற்றின் செறிவு களில் காலத்துடன் ஏற்படும் மாற்றங்களை விளக்க இந்த விரவல்-வெப்பச் சலன விளக்கம் பயன்படு கிறது. இந்தக் கருத்து ஃபார்புஷ் குறைவுகள் என்னும் நிகழ்வையும் விளக்க உதவுகிறது. இவை காஸ்மிக் கதிர்ப் பாயத்தில் சில நாள் முதல் பல வாரங்களுக்கு நீடிக்கிற பெரும் அளவுக் குறைவுகள், கோளிடை வெளி அதிர்ச்சி அலைகள். உயர் வேகச் சூரியக் காற்றோடைகள் அல்லது காந்தக் குமிழிகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்ட விரவல் மற்றும் வெப்பச் சலன மாற்றங்களால் ஏற்படுவன வாகத் தோன்றுகிறது. பயனீர் கோளாய்வுக் கலங்கள் வியாழனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவை விண்மீன் மண்டலக் காஸ்மிக் கதிர் வீச்சின் செறிவில் ஓர் ஆரத்திசைச் சரிவைப் பதிவு செய்தன. இதையும் விரவல்-வெப்பச் சலன விவரிப்பு விளக்கக்கூடும். கோளிடைவெளிக் காந்தப்புலம் சூரியனுடன் சேர்ந்து சுழலுவதால் தூண்டப்படுகிற திசையொவ் வாப் பண்பின் காரணமாகப் புவியில் விழும் காஸ்மிக் கதிர்களின் செறிவில் ஒரு தினசரி மாற்றம் தோன்று வதையும், சூரியனின் பரப்பில் வெவ்வேறு குறுக்குக் கோட்டுப் பகுதிகளிலிருந்து பகுதிகளிலிருந்து வெளிப்படும் சூரியக் காற்றின் செறிவில் வலிவான வேறுபாடுகள் இருப்ப தாகக் காட்டும் வகையில் புவியில் விழும் காஸ்மிக் கதிர்களின் செறிவில் அரை நாள் மாற்றம் தோன்று வதையும் இந்த விவரிப்பு விளக்க முடியும். கே.என். ராமச்சந்திரன் காஸ்மிக் கதிர்களின் வானியற்பியல் விளைவுகள் காஸ்மிக் கதிர்கள் சூரியனிலிருந்தும், விண்மீன் மண்டலங்களிலிருந்தும், புற மண்டலங்களிலிருந்தும் புவியின்மேல் வந்து விழுகிற ஆற்றல் மிக்க துகள்கள் ஆகும். அவற்றில் அணுக்கருக்களே பெரும்பான்மை யானவை எனினும் ஒரு சில சதவீதத்திற்கு எலெக்ட் ரான்களும் காணப்படுகின்றன. வானியற்பியல் தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்த காஸ்மிக் கதிர் களின் தனிச் சிறப்பியல்புகள் அவற்றின் ஆற்றல் பர வீட்டு நிறமாலை, அவற்றில் அடங்கியுள்ள அணுக் கருக்களின் வகைகளும், எண்ணிக்கையும் அல்லது பாசிட்ரான், எலெக்ட்ரான் ஆகியவற்றின் தகவு சையொவ்வாப் பண்பின் அளவாகக் குறிப்பிடப் படுகிற கோணப் பரவீடு ஆகியவை ஆகும். காஸ்மிக் கதிர்களில் உள்ள தனிப்பட்ட துகள் களின் இயல்புக்கு மேம்பட்ட ஆற்றலையும், அவற் றின் மிகப்பெரிய அளவிலான மொத்த ஆற்றல் பாயத்தையும் ஆற்றல் பரவீட்டு நிறமாலை விவரிக் கிறது. தனிப்பட்ட துகள்களின் ஆற்றல் ஒரு துகளுக் கான எலெக்ட்ரான் வோல்ட், மில்லியன் எலெக்ட் ரான் வோல்ட், திகா எலெக்ட்ரான் வோல்ட், டெட்ரா எலெக்ட்ரான் வோல்ட் என்ற பல வகை யான அலகுகளில் அளவிடப்படுகிறது. 1920 இன் தொடக்கத்தில், காஸ்மிக் கதிர்கள் அயனிக் கலங் களில் எச்ச அயனியாக்கமாகக் காணப்பட்டன. பின்னர் கெய்கர் எண்ணிக்கை துடிப்புகளாகவும் முகிற் கலத்தில் தடங்களாகவும் தொடக்கப்பட்டன. அப்போது புவியின் வளிமண்டலத்தில் ஏற் படக்கடிய அயனியாக்க இழப்புகளைச் சீராக்கி வளிமண்டலத்தைக் கடந்து வரத் தேவையான ஆற்றவான ஒரு கிகா எலெக்ட்ரான் வோல்ட்டுக்கும் மேம்பட்ட ஆற்றலுடன் காஸ்மிக் கதிர்கள் இருந்தி ருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிந்தது. இந்த அளவு ஒரு புரோட்டானின் ஓய்வு நிறைக்குச் சமமாகும். காஸ்மிக் கதிர்கள் ஒரு செ.மீ.-2 நொடி என்னும் அளவில் மழைபோலப் பொழிந்தன. தனிப் பட்ட துகள்களின் ஆற்றல் 100 எலெக்ட்ரான் வோல்ட் வரையான அளவுக்கு உயர்வாக இருந்தது. இந்த அளவுக்கு உயர் ஆற்றலை உடைய ஒரு துகளை விண்மீன் மண்டலத்தின் முழுக் காந்தப்புலம்