634 காஸ்மிக் கதிர்களின் வானியற்பியல் விளைவுகள்
634 காஸ்மிக் கதிர்களின் வானியற்பியல் விளைவுகள் மேற்பட்ட ஆற்றல்களில் 群 வோல்ட்டுகளுக்கு மெசான்கள் உண்டாக்கப்படுவதன் காரணமாகவும் கூடுதலான ஆற்றல் இழப்புச் செயல் முறைகள் நிகழ் வதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏறத்தாழ 10-3 எலெக்ட்ரான் வோல்ட் ஆற்ற லுள்ள கரும்பொருள் கதிர்வீச்சு ஃபோட்டான் களுடன் உயர் ஆற்றல் காஸ்மிக் கதிர்கள் இடை வினை செய்யும்போது இத்தகைய துகள்கள் உண்டா கின்றன. இவ்வளவு ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர்கள் அனைத்தும் விண்மீன் மண்டலத்திற்கு வெளி யிலிருந்து வருபவையாக இருந்தால் ஆற்றல் நிற மாலையில் காணப்பட வேண்டிய செங்குத்துத் • அடட தன்மை காணப்படவில்லை. தோற்றுவாய்க் காஸ்மிக் கதிர்களின் ஆற்றல் பரவீடு மேலும் தட்டையாகவே இருப்பதாகவும் விண்மீன் மண்டலத்திலிருந்தும் அதற்கு வெளியிலிருந்தும் காஸ்மிக் கதிர்கள் வருவ னவாகவும்வைத்துக் கொண்டால்தான் கூடுதலான ஆற்றல் இழப்பின் காரணமாக ஆற்றல் பரவீட்டுக் கோடு செங்குத்தாக இல்லாததை விளக்க முடியும். எலெக்ட்ரான் பாசிட்ரான்களாலும் ரமெசான் களாலும் ஏற்படுகிற ஆற்றல் நலிவு தற்செயலாக, விண்மீன் மண்டலக் காஸ்மிக் கதிர்களின் விரவல் காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பால் ஆற்றல் பரவீட்டுக் கோட்டில் தோன்றும் செங்குத்துப் பகுதி தட்டையாகிற ஆற்றல் அளவிலேயே ஏற்படுகிறது. எனவே 100 109 எலெக்ட்ரான் வோல்ட் வரை யான ஆற்றல் கொண்டுள்ள காஸ்மிக் கதிர்களை. விண்மீன் மண்டலத்திலும் அதற்கு வெளியிலுள்ள தோற்றுவாய்களிலும் தோன்றுவனவாகவே வைத்துக் காள்ள வேண்டும். அணுக்கருக்களின் செய்வதன் மூலம் வகை மண்டலத் காஸ்மிக் கதிர்களிலுள்ள கூட்டமைப்பைப் பகுப்பாய்வு விண்மீன் மண்டலத்தின் தொலைவான பகுதிகளி லிருந்து புவியை வந்தடைகிற பருப்பொருள்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவற்றில் காணப்படும் புரோட்டான்கள் அல்லது ஹைட்ரஜன் அணுக்கருக்களுக்கும் பிற அணுக்கருக் களுக்கும் இடையான தகவு குறிப்பிடத்தக்க யில் சூரிய மண்டலத்திலும், விண்மீன் திலும் நிலவியிருப்பதாக ஊகிக்கப்படுகிற தகவுக்குச் சமமாகவே உள்ளது. இவ்வாறு சூரிய மண்டலத் திலும் விண்மீன் மண்டலத்திலும் பல வகையான அணுக்கருத் துகள்கள் பரவியிருக்கும் பாங்கையே காஸ்மிக் கதிர்களில் காணப்படும் துகள் பரவீட்டுப் பாங்கும் ஒத்துள்ளது. அணுக்கருக்கள் உருவான செயல் முறைகள் அனைத்து இடங்களிலும் ஒரே வகையாக இருப்பதை இது காட்டுகிறது. ஆகவே காஸ்மிக் கதிர்த் தோற்றுவாய்களும், சராசரியான விண்மீனிடை வெளி ஊடகமும் ஒரேமாதிரியான அணுக்கருச் சூழ்நிலைகளில் ஏதோ ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும் எனக் கருத இடமேற்படு கிறது. இந்த ஓரளவான ஒற்றுமை தற்செயலான தாக இருக்கலாம் அல்லது அண்டத்தின் அடிப்படைப் பண்பாகவும் இருக்கலாம். ஆனாலும் அண்டத்தில் தனிமங்கள் அமைந்துள்ள விகிதத்திற்கும் காஸ்மிக் கதிர்களின் கூட்டமைப்புக்கும் இடையில் சில வேறு பாடுகள் காணப்படுகின்றன. காஸ்மிக் கதிர்களில் நிறை மிக்க தனிமங்களின் அணுக்கருக்கள் மிகுந் துள்ளன. காஸ்மிக் கதிரிலுள்ள ஒரு குறிப்பிட்ட தனிமத் தின் அணுக்கருக்களின் சராசரி எண்ணிக்கைக்கும் அண்டத்திலுள்ள அத்தனிமத்தின் அணுக்கருக்களின் சராசரி எண்ணிக்கைக்கும் இடையிலுள்ள தகவு அத் தனிமத்தின் அணுக்கரு மின்னுக்கு நேர் விகிதத்தி லிருக்கிறது. இவ்வாறு காஸ்மிக் கதிர்களில் இரும்பு அணுக்கருக்களின் எண்ணிக்கை அண்டத்திலுள்ள சராசரி எண்ணிக்கையைவிட 25 மடங்கு மிகுதியாக உள்ளது. காரீயம் முதல் யுரேனியம் வரையான அணுக்கருக்களும் இவ்வாறே பெருமளவில் உள்ளன. லித்தியம், பெரிலியம், போரான் ஆகிய லேசான தனிம அணுக்கருக்களின் எண்ணிக்கையும் அண்ட சராசரியைவிட ஏறத்தாழ 5-50 மடங்கு வரை மிகுதி யாக உள்ளது. இதற்கு மாறாக, கார்பன் முதல் இரும்பு வரை ஒற்றைப்படை எண் மின்னுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கைக்கு இடையிலான தகவு அண்டத்தில் காணப்படுகிற அதே தகவுக்கும் ஏறத்தாழ சமநிலையே உள்ளது. வித்தியம், பெரிலி யம் போரான் போன்ற லேசான த தனிமங்களின் அணுக்கருக்கள் மிகுதியாக இருப்பது எதிர்பார்க்கக் கூடியதே. பெரும் எண்ணிக்கையிலுள்ள நிறைமிக்க தனிமங்களின் அணுக்கருக்களுடன், வீண்மீனிடை வெளியிலுள்ள பொருள்கள் முக்கியமாக ஹைட் ரஜன் அணுக்கருக்கள் சாய்வாகச் சில்லுப்பெயர்வது போல மோதுவதால் லேசான தனிம அணுக்கருக்கள் உண்டாகின்றன. காஸ்மிக் கதிர்கள் விண்மீன் மண்ட லத்திற்குள் அடங்கியவை என்று கற்பனை செய்து கொண்டு. இத்தகைய ஓர மோதல்களிலிருந்து விண் மீன் மண்டலத்தின் காஸ்மிக் கதிர்களின் சராசரி வயதைச் சில கோடி ஆண்டுகளென மதிப்பிட்டிருக் கின்றனர். தான் Be-10 என்னும் அணுக்கருவின் கதிரியக்கத்தி லிருந்து விண்மீன் மண்டலத்தின் காஸ்மிக் கதிர்களின் வயது 2X10' ஆண்டுகளைவிட மிகுதி என அறுதி யிட்டுள்ளனர். அதாவது இரும்பு அணுக்கரு, தோன்றிய இடத்திலிருந்து புவியை வந்தடைய இவ் வளவு காலம் ஆகிறது. இத்தகைய கணக்கீடுகளி லிருந்து காஸ்மிக் கதிர்த் தோற்றுவாய் சூரியனைப் போல 10 மடங்கு மிகு அளவான ஆற்றவை உமிழ்வதாக இருக்க வேண்டும் என ஊகிக்கின்றனர். சூப்பர்நோவாக்கள் மட்டுமே இவ்வாறு பெரு மளவில் ஆற்றலை உமிழ முடியும். இரும்பு போன்ற நிறைமிக்க தனிமங்களும் சூப்பர்நோவாக்களிலேயே