பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/655

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஸலின்‌ 635

காஸலின் 635 உருவாகின்றன என்னும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே காஸ்மிக் கதிர்களும், அண்டத்தில் காணப் படுகிற, இரண்டுக்கு மேற்பட்ட அணு மின்னுள்ள துகள்களும் சூப்பர்நோவாக்களிலிருந்தே தோன்றி இருக்கலாம் என்னும் கருத்து வலிமை பெறுகிறது. ம காஸ்மிக் கதிர்க் கூட்டமைப்பிலிருந்து வேறு வகையான விளக்கத்தையும் பெறலாம். புவி வந்து சேரும் காஸ்மிக் கதிர்களில் இரு பகுதிகள் உள்ளன என வைத்துக் கொள்ளலாம். ஒன்று 10 ஆண்டு களுக்குக் குறைவான வயதுடையது; மற்றது விண் மீன் மண்டலத்திற்குள் முழுமையாக அடக்கப்பட்ட தால் தோன்றிய ஒரு சமநிலைக் கூட்டமைப்பாகவும் அது மோதல்களால் மட்டுமே நலிவடைவதாகவும் கொள்ளலாம். எனவே புரோட்டான்கள் ஓர மோதல் களால் தோன்றியவையாகின்றன. அவை தம்மை உண்டாக்கிய அணுக்கருக்களைவிட நீண்ட நாள் சிதையாமல் இருக்கக் கூடியவை. எனவே அவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். இத்தகைய ஊகத்தில் புரோட்டானின் வாழ்காலம் 108 ஆண் களாக உயர்கிறது. எனவே காஸ்மிக் கதிர்த் தோற்று வாய் வெளியிட வேண்டிய ஆற்றலின் அளவும் குறை கிறது. அவை காஸ்மிக் கதிர்களிலுள்ள எலெக்ட்ரான்கள் விண்மீனிடை வெளி ஊடகத்துடன் மோதியதால் ஏற்பட்டவையாக இருக்கக்கூடும்.1014 எலெக்ட்ரான் வோல்ட்டுக்கு மேற்பட்ட ஆற்றலுள்ள எலெக்ட்ரான்களின் ஆற்றல் பரவீடு இதுவரை சரி யாகக் கணிக்கப்படவில்லை. எனவே அவை தோன்றும் விதமும் சரியாக அறியப்படவில்லை. காஸ்மிக் கதிர் கள் விண்மீன் மண்டலத்தின் வானியற்பியல் தன் மையை ஆராய உதவும் சிறந்த கருவிகள். அவை மட்டுமே சூரிய மண்டலத்திற்கு வெளியிலுள்ள விண்மீன் மண்டலப் பகுதியிலிருந்து புவியை வந்து அடைகிற பொருள்கள். அவை சூப்பர்நோவாக் களிலிருந்து தோன்றுவனவாக இருக்கலாம். எனவே அண்டத்தைப் பற்றியும் விண்மீன் மண்டலத்தைப் பற்றியும் கொள்கையளவில் உருவாக்கியுள்ள முடிவு களை ஆய்ந்து பார்ப்பதில், காஸ்மிக் கதிர்களின் தோற்றுவாய் பற்றிய கருத்துகளுக்கு முக்கியநெருக்க மான பங்கு உண்டு எனலாம். காஸலின் கே.என். ராமச்சந்திரன் கரிமச் இது ஹைட்ரோ கார்பன்கள் எனப்படும் சேர்மங்கள் மிகுந்து காணப்படும் ஓர் எரிபொருள். இது தானியங்கிகளுக்கு (automobile) மிகவும் ஏற்றது. பொதுவாக இதனைப் பெட்ரோல் என்றும் குறிப்பர். வ்வெரிபொருள் பண்படா எண்ணெய் எனப்படும். நிலத்தடி எண்ணெயிலிருந்து பல வழிமுறைகளைக் கொண்டு இது பலவாறான பெயர்களில் குறிப்பிடப் படுகிறது. எ.கா: குளிர்விப்பதன் மூலம் பெறப்படு கின்ற காஸலினைக் கேஸிங்- ஹெட் (casing head) காஸவின் எனவும், உள்ளீட்டுக் கவர்தல் மூலம் பெறப் படுகின்ற காஸலினைச் சாதாரண காஸலின் எனவும், காய்ச்சி வடித்தல் மூலம் பெறப்படும் காஸலினை நேரிடைக் காஸலின் எனவும், பலபடியாக்கல் (poly- merisation ) வினை மூலம் கிடைக்கும் காஸவினைப் பாலியர் காஸலின் எனவும், வெப்பச் சிதைவு கொண்டும் வினை ஊக்கியைக் கொண்டும் பெறப் படுகின்ற காஸலினை முறையே வெப்பச்சிதைவு காஸலின், வினை ஊக்கி காஸலின் எனவும் குறிப்பர். வெளியிடங்களில் கிடைக்கும் காஸலினின் தரத்தை மேம்படுத்த, இதில் உள்ள ஹைட்ரோ கார்பள்களுடன் பிற சேர்மங்களும் சேர்க்கப்படு கின்றன. நிலத்தடி எண்ணெய், திமிங்கல . எண்ணெய், தார், நிலக்கரி முதலியவற்றிலிருந்தும் தகுந்த வேதி வினை நிகழ்த்தி காஸலின் பெறப் படுகிறது. குறிப்பாக ஃபிஷர் - டிராப் என்னும் முறையில், நிலக்கரியிலிருந்து பெறப்படுகின்ற கார்பன் மோனாக்சைடு, ஆல்கஹால்கள் முதலியவற்றைக் கொண்டு காஸலின் தயாரிக்கப்படுகிறது. இருந்த போதும், மேற்சொன்ன முறைகளிலிருந்து கிடைக்கப் பெற்ற காஸலின் அளவு. மிகக் குறைவானதே. உட் கனற் பொறி எந்திரங்களைக் கொண்டுள்ள ஊர்தி கள், விமானங்கள் முதலியவற்றை இயக்கக் காஸலின் உதவுகிறது. மேற்காணும் எந்திரங்களில் காஸலின் காற்றுடன் பதின்மூன்றுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் கலக்கப்பட்டு, பின்பு கனற்சிக்குள்ளான அதன் எரிபொருள் ஆற்றல் தகுந்த முறையில் பயன் படுத்தப்படுகிறது. எடை தானியங்கிகளில் காஸலின், தானியங்கிகளில் பயன்படுகின்ற காஸலின், பொருள்களின் தரக்கட்டுப் பாட்டை அறுதியிடும் அமெரிக்கக் குழுமத்தின் (ASTM) விதிகளின்படி, நான்கிற்குமேல் பன்னிரண் டிற்கு உட்பட்ட கார்பன்களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படும் ஹைட்ரோகார்பன்களைக் கொண்டி ருக்கவேண்டும். மேலும் அந்தக் காஸலினின் கொதி நிலை 80-430°F என்னும் நிலையில் இருத்தல் வேண்டும். காஸலினின் இயற்பியல், வேதிப்பண்புகள் அவற்றின் கொதிநிலை, ஆவியாகும் தன்மை, ஆக்ட் டேன் எண். நிலைப்புத் தன்மை, இவற்றுடன் கலந்து இருக்கும் சிறிய அளவில் உள்ள ஏனைய பொருள் களின் தன்மை முதலியவற்றைக் கொண்டு அறுதி யிடப்படுகின்றன. காஸலினின் தரத்தை உணர்ந்து கொள்ளப் பலதரப்பட்ட தரக்கட்டுப்பாடுகள் இருந்த போதும், ஒவ்வொரு காஸலின் தயாரிக்கும் நிறு வனமும் அவ்வாலையில் தயாரிக்கும் காஸலினின் தன்மையைக் கருத்திற் கொண்டு தனித்தனித் தரக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.