636 காஸலின்
636 காஸலின் உட்கனற் பொறி எந்திரத்தில் அழுத்த விகிதம் compression ratio) அதிகரிக்கும்போது, எரிபொருளின் ஆக்ட்டேன் எண்ணின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அழுத்தப்படும்போது எரி அறை எனப்படும் கனற்கலத்தில் (combustion chamber) உள்ள எரிபொருள் காற்றுக் கலவையின் அழுத்தமும், வெப்பநிலையும் உயர்வதை நினைவிற் கொள்ள வேண்டும். மேலும் நன்கு இயக்கப்பட்ட எந்திரத்தில், எரிபொருள் எரிந்ததன் காரணமாக ஏற்பட்ட படிமங்களின் (deposits) அளவு அதிகரிப்ப தால் அழுத்தவிகிதமும் அதிகரிக்கிறது. வெவ்வேறு எந்திரங்களைப் பொறுத்தவரை ஆக்ட்டேன் எண் மாறுபட்ட போதும், பொதுவாக அனைத்து எந்திரங் களுக்கும் 5-10 என்னும் அளவே உள்ளது. காஸலினின் ஆக்ட்டேன் எண் நிலத்தடி எண்ணெயின் தரத்தைப் பொறுத்தும், எம்முறையில் பெறப்பட்டது என்பதைப் பொறுத்தும், அதில் உள்ள இடிப்புஎதிர்ப்புப் (anti knock) பொருள்களின் தன்மை யைக் கொண்டும் மாறுபடும். ஆக்ட்டேன் எண் நேரிடைக் காஸவினைவிட வெப்பச் சிதைவுடைய காஸலினுக்கு மிகுதியாகவும், வெப்பச்சிதைவுடைய காஸவினைவிட, வினையூக்கிச் சிதைவுடைய காஸலினுக்கு மிகுதியாகவும் இருக்கும். மேலும் நேரி டைக் காஸலினைப் பலபடியாக்கல் வினைக்கு மூலம், அதன் ஆக்ட்டேன் உட்படுத்துவதன் எண்ணின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். மேற் சொன்ன வினை நிகழ்த்துவதால் நேரிடைக் காஸலி னில் உள்ள நாப்த்தீன்கள், வளையப் பென்டேன்கள் முதலியன, அரோமாட்டிக் சேர்மங்களாகவும், வளைய ஹெக்ஸேன்களாகவும் மாற்றப்படுகின்றன. மேற்காணும் சேர்மங்கள் காஸலினின் ஆக்ட்டேன் எண்ணின் அளவை' மிகுதிப்படுத்தக் உள்ளன . காரணமாக பொ துவாகக் கந்தகச் சேர்மங்கள் குறைந்த அளவே காஸலினில் காணப்படுகின்றன. க் கந்தகச் சேர்மங்கள் எரிபொருளாக எரியும்போது. கந்தக டை ஆக்சைடு, கந்தக ட்ரை ஆக்சைடு வளிமங்க ளாக மாற்றப்படுகின்றன. இவ்வளிமங்கள் கனற் கலத்திற்கு ஊறு விளைப்பனவாதலால் அவை விரும் பத்தக்கவையல்ல. மேற்காணும் வளிமங்கள் எந்திரத் தின் வளை கூடத்தில் (crankcase) அமிலங்களாக மாற் றப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கந்தகத்தின் அளவு காஸலினில் 0.25 க்குமேல் இருக்கக்கூடாது. பெரும்பாலான கந்தகச் சேர்மங்கள் டைசல்பைடு களாகவும், சல்ஃபைடுகளாகவும், தயோஃபின்கள் எனப்படும் கரிமச் சேர்மங்களாகவும் உள்ளன. மேலும் பெரும்பாலான நைட்ரஜன் சேர்மங்கள் ஃபிரோல்கள், ஃபிரிடின்கள், அனிலின்கள் என்னும் கரிமச் சேர்மங்களாக உள்ளன. பொதுவாக நைட் ரஜன் சேர்மங்கள் 0.02%க்கும் குறைவாக உள்ளன. இவற்றுடன் பெரும்பாலான ஆக்சிஜன் சேர்மங்கள் ஃபினால்கள், கரிம அமிலங்களாக 0.1% அளவிற்கு உள்ளன. மேற்காணும் சேர்மங்களின் அளவுடன் காரத் தன்மையுடைய பொருள்களைச் சேர்ப்பதன் மூலம் காஸலினைக் குறைக்கலாம். காஸலினை எளிதில் பற்றவைக்க அதன் எளிதில் ஆவியாகும் தன்மை முக்கியமாகக் கருதப்படும். குளிர்காலங் களில் பெட்ரோலின் ஆவியாகும் தன்மை, பியூட் டேன்கள், பென்டேன்கள் முதலிய சேர்மங்களைச் சேர்ப்பதன் மூலம் அதிகரிக்கப்படுகிறது. இவற்றைச் சேர்ப்பது, செயற்கைப் பனிப்படலம் உண்டாவதற்குக் காரணமாகும். ஆனால் வகை வாள் ஊர்திக் காஸலின். வான் ஊர்திக் காஸலின் அல்கைலேட் எனப்படுகின்ற ஹைட்ரோகார்பன் களுடன். நேரிடைக் காஸலினின் சிறந்த பகுதிக திகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது. மேலும் இதன் தரத்தை மேம்படுத்த டொலுவின், ஐஸோபென்டேன் முதலிய சேர்மங்களும் சேர்க்கப்படுகின்றன. இவ் வாறு பெறப்படுகின்ற காஸவினினைப் பல களாகப் பிரிக்கின்றனர். பொருள்களின் தரத்தை அறுதியிடும் அமெரிக்கக் குழுமத்தின் கருத்தின்படி, காஸலினை F3, F4 என இருவகையாகப் பிரிக்க லாம். F3 வகை சாதாரண விமானங்களிலும், F4 வகை, வணிக, ராணுவப்பொருள்களை ஏற்றிச் செல்லும் வான ஊர்திகளிலும் பயன்படுகின்றன. தற்போது, தாரைகள் (jets) எனப்படும் மிகு விரைவு வானஊர்திகள் பழக்கத்திற்கு வந்தவுடன். வான ஊர்திக் காஸலின்களின் பயன் பெரிதும் குறைந் துள்ளது. இக்காஸலினில் உள்ள ஹைட்ரோகார்பன் கள் சிதைவடையாமலிருப்பதால் எளிதில் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரியாது. எனவே இதை நீண்டகாலம் சேமித்து வைக்கலாம். இருந்தபோதும், ட்ரை அல்க்கைல் ஃபினால் எனப்படும் ஆக்சிஜன் வினை நீக்கிகள் (antioxidants), இதில் உள்ள டெல் எனப்படுகின்ற பொருளைப் பாதுகாக்கச் சேர்க்கப்படு கின்றன. . ஆக்சிஜனேற்ற நிலைத்தன்மை. காஸலின் நீண்ட காலம் சேமித்து வைக்கப்படும்போது அதில் உள்ள கந்தகம், நைட்ரஜன், வினைபுரியக் கூடிய ஹைட்ரோ கார்பன்கள், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து ரெசின்களையும், பெராக்சைடு எனப்படும் சேர்மங் களையும் நாளடைவில் தரும். மேற்காணும் வினை, ஒரு சங்கிலித் தொடர்போல் இயங்கு உறுப்புகள் (free radicals) மூலம் நிகழ்கிறது. இத்தொடர் வினை தொடங்கச் சில காலம் தேவைப்படும். அறை வெப்பநிலையில், இக்கால அளவு 6-12 மாதங்களாக வும், ஏறக்குறைய 100°C வெப்பநிலையில் 6-12 மணியளவாகவும் வேறுபடும். இக்கால அளவிற்குப் பின் மிகுந்த வேகத்தில் வினை நடைபெறும். இவ் வாறு தொடர் வினை மூலம் கிடைக்கப்பெற்ற ரெசின்களைப் பகுப்பாய்வில் பார்த்தபோது அவற் றின் அளவுகள் கார்பன் 72%, ஹைட்ரஜன் 10%