கி கிங்கோ இது விதைமூடாத் தாவரத் (gymnospermal) தொகுதியைச் சேர்ந்த தாவரமாகும். சிங்கோ (ginkgo) தொகுதியின் தனித்தன்மை விதைகள் கண்ணுக்குப் புலனாகும்படி வெளியிலேயே உள்ளமை யாகும். பூக்கும் தாவரங்களில் உள்ளது போல் விதைகள் கனி உறையால் சூழப்பட்டிருப்பதில்லை. விதைமூடாத்தாவரத் தொகுதியில் கிங்கோயேலிஸ் என்னும் பிரிவில் உயிர் வாழும் ஒரே இனமாகக் கிங்கோ விளங்குகிறது. இது தாவர வகையில் மிகத் தொன்மையான பேரினமாகும். கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது சீனா, ஜப்பான் கோயில் களின் தோட்டங்களில் புனித மரமாக வளர்க்கப் பட்டாலும் தற்போது உலகெங்கிலும் பரவலாகக் காணப்படுகிறது. கிங்கோ 30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய மரம். பரந்து விரிந்த கிளைகளுடன் கூடிய இம்மரங்கள் எழில்மிகு தோற்றமுடையவை. தாவரவியல் பூங்காக்களில் இவற்றைக் காணலாம். இம்மரத்தின் தண்டு 8 மீட்டர் வரை குறுக்களவு கொண்டது. கிங்கோவில் கிளைத் தோற்ற வேறுபாடு ஒரு முக்கியமான கூறாகும். இதில் குட்டைக் கிளை கள், நீள் கிளைகள் என இருவகை உண்டு. நீள் கிளைகளில் கணுவிடைப்பகுதி நீண்டும், குட்டைக் கிளைகளில் குறுகியும் இருக்கும். இலைகள், நீன் கிளைகளில் சிதறலாகவும், குட்டைக் கிளைகளின் நுனிகளில் அடர்த்தியாகவும் காணப்படும். நீள் கிளை கள் விரைவாகவும், குட்டைக் கிளைகள் மெதுவாக வும் வளர்கின்றன. சில சமயங்களில் குட்டைக் கிளை கள் நீள் கிளைகளாகவும் வளரக்கூடும். இலைகள் நீண்ட காம்புடையவை. இவை அகன்ற இலை உறையிலிருந்து தோன்றுகின்றன. லைப்பரப்பு விசிறி போன்ற வடிவமானது. நீள் கிளைகளில் காணப்படும் இலைகள் அளவில் பெரியன வாகவும், இரு மடல்கள் கொண்டனவாகவும் இருக்கும். குட்டைக்கிளைகளில் உள்ள லைகள் 1 0 கிங்கோ பைலோபா I, பொதுத் தோற்றம் சூல் ஆண் கூம்புகள் 4.சூல் நீள்வெட்டுத் தோற்றம்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/659
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை