46 கற்காரைத் தளம்
46 கற்காரைத் தளம் வெளி, தளத்தின் கனம் ஆகியவற்றுக்கிடையே உள்ள விகித அடிப்படை மதிப்பைக் கணக்கிட வேண்டும். தாங்கிகளுக்கிடையில் உள்ள இடைவெளி 10 மீட்டருக்கு மேல் இருந்தால், விகித அடிப்படை மதிப்பைப் பத்தின் கீழ் இடை டவெளித் தொகை யால் பெருக்க வேண்டும். ஒருவழித் தளத்தின் திட்ட வரையீட்டைக் கீழ்க்காணுமாறு கணக்கிடலாம். கற்காரைத் தளம் செய்யப் பயன்படுத்தப் போகும் இரும்புக் கம்பி, கற்காரை ஆகியவற்றின் மாறிலி மதிப்புகளை அதாவது மாறுநிலை நடுநிலை அச்சு (critical neutral axis), திருப்புத்திறனின் தடை மதிப்பு (resisting moment constant), நெம்புகோல் புயம், அடிப்படை மதிப்பு, (basic value) திருத்தும் காரணி (modification factor) முதலியவற்றைக் கணக் கிட வேண்டும். விறைப்புத் தன்மைக்குத் தேவையான நிகர தடிமன்= தாங்கிகளுக்கிடையே உள்ள இடைவெளி அடிப்படை மதிப்பு × திருத்தும் காரணி மொத்தத் தடிமன் - நிகர தடிமன் (effective thick- ness) + கம்பியின் ஆரம் + ஓரத்திண்ணத் தடிமன். திருத்தப்பட்ட நிகர தடிமனை, முழு எண்ணாக மாற்றப்பட்ட மொத்தத் தடிமனிலிருந்து கணக்கிட வேண்டும். 456, நிகர இடைவெளியைச் செந்தர எண் 1978 பகுதி 21. 2a இல் உள்ளபடிக் கணக்கிட வேண்டும். ஒரு மீட்டர் அகலம் உள்ள தளத்திற்கு எல்லாவிதமான மொத்தச் சுமையையும் கணக்கிட, சீராகப் பரவலாக்கப்பட்ட சுமையை ஒரு மீட்டர் இடைவெளிக்குக் கணக்கிட வேண்டும். அதிகபட்ச தொய்வு திருப்புத்திறன், துணிப்புத் தகைவு இரண்டை யும் உத்திரத்திற்குக் கணக்கிடுவது போலவே கணக் கிட வேண்டும். அதிகபட்ச தொய்வு திருப்புத் திறனைப் பயன்படுத்தி மீண்டும் நிகர தடிமனைக் கணக்கிட வேண்டும். நிகர தடிமன் 11 தொய்வு திருப்புத் திறன் திருப்புத்திறனின் தடை மதிப்பு X தளத்தின் அகலம் மேலே சுண்டுள்ள (1), (2) படிகளில் கண்டு பிடிக்கப்பட்ட நிகர தடிமனில் அதிகமான மதிப்பை எடுத்துக் கொண்டு மொத்தத் தடிமனைத் திருத்திக் கொள்ள வேண்டும். இந்திய செந்தரத் தொகுப்பு விதிமுறையில் கூறியுள்ளவாறு முதன்மைக் கம்பிகள் மற்றும் பரவ லாக்கப்பட்ட கம்பிகளின் அளவுகளைக் கணக்கிட வேண்டும். முதன்மைக் கம்பிகளின் பரப்பளவு = அதிக பட்சத் தொய்வு திருப்புத்திறன் சும்பியின் இழு தகைவு x நெம்புகோல் புயம் விலக்கம் ஏற்படாமல் இருக்க உத்திரத்திற்குக் கணக் கிடுவது போலவே கணக்கிட்டு விகிதாச்சார அடிப் படை. மதிப்பைக் கணக்கிடலாம். துணிப்பு விசையைக் கணக்கிட வேண்டும். துணிப்புத் தகைவு கற்காரையின் துணிப்புச் சக்தியை விட மிகுந்திருந்தால் தளத்தின் தடிமனை அதிகரிக்க வேண்டும். திருத்தும் காரணியின் மதிப்பை, இந்திய செந்தரத் தொகுப்பில் உள்ளவாறு கணக்கிடப்பட்ட இரும்புக் கம்பிகளின் பரப்பளவு சதவீதத்திற்கு ஏற்ற வாறு மீண்டும் திருத்தம் செய்து நிகர தடிமனை இறுதியாகக் கணக்கிட வேண்டும். தர வடிவ வகைகள். தற்போது புதிய கட்டடக் கலையின்படிக் கட்டப்படும் பல கட்டடங்களில் கற்காரைத் தளத்தின் பரப்பளவு செவ்வகமாக இல் லாமல் இணைகரமாகவும், முக்கோணமாகவும், பல் கோணமாகவும், வட்டமாகவும் அமைக்கப்படுகிறது. இணைகரத்தளத்தை இருசம செவ்வகமாக எடுத்துக் கொண்டு கணக்கிட வேண்டும். கற்காரைத்தளம் வட்டவடிவில் இருந்தால், அதன் மீது செயல்படும் சுமை வட்டத்தின் மையப்பகுதியை நோக்கியே செயல் படும். ஆதலால் வலிவூட்டும் கம்பிகள் ஆரத்திற்கு இணையாகவும் வட்டத்திற்கு இணையாகவும் வரிசை அமைதல் கம்பியைச் நன்று. சதுரமான கட்டங்கள் உள்ள வலை போன்று அமைப்பது எளி தானது. யாசு முக்கோணத் தளம், பல்கோணத் தளம் ஆகிய வற்றை வட்டத்தளமாகக் கொண்டு கணக்கிட வேண்டும். அவ்வட்டத்தளத்தின் விட்டம், கோணத் தளத்தின் உள்வட்டம், வெளிவட்டம் ஆகியவற்றின் சராசரி விட்டம் என எடுத்துக் கொள்ள வேண்டும். உத்திரங்கள் இல்லாமல் தூண்களின் மீது அமர்ந் திருக்கக்கூடிய மிகக் குறைந்த தடிமன் உள்ள தளம் (படம் - 4)தட்டைத்தளம் (flat slab) எனப்படும். தூண் களின் மீது தாங்கிகளுக்கிடையில் உள்ள இடைவெளி யில் கால்பகுதித் தொலைவு உள்ள தளம் தூண் பட்டைத்தளம் எனப்படும். அதற்கு அப்பால் உள்ள தளம் நடுப்பட்டைத்தளம் எனப்படும். பொதுவாக, தூண்பட்டைத் தளம் நடுப்பட்டைத் தளத்தைத் தாங்கி கொள்ளும். தட்டைத்தளத்தின் தூண்களின் மேல் பகுதியில் தளத்தைத் தாங்குவதற்கு ஏற்ற விரிவான ஒரு பகுதி அமைந்திருக்கும். அது தூணின் தலைப்பகுதி எனப் படும். இப்பகுதிக்கும் தட்டைத் தளத்திற்கும் இடையே தாழ்வான தளம் ஒன்று இருக்கும்.