640 கிச்சிலிக் கரணை
640 கிச்சிலிக் கரணை அளவில் சிறியனவாகவும், இரு மடலாகப் பிரியாமல் ஒரே மடலாகவும் இருக்கும். இலை நரம்பு இரண்டி ரண்டாகக் கிளைத்திருக்கும். தண்டின் உள்ளமைப்பு. ஊசியிலைத் தாவரங்களை (conifer) ஒத்திருக்கும். ஸைலத்தில் குழாய்கள் இன்றி டிரக்கீடுகள் (tracheids) மட்டுமே உள்ளன. ரெஸின் (resin) குழாய்கள் உள்ளன. லைகளின் உள்ளமைப்பு ஸைக்கஸ் தாவர அமைப்பை ஒத்துள்ளது. ஆண் கூம்பு ( male strobilus), பெண் கூம்பு (female strobilus) ஆகியவை ஒரே மரத் தில் இல்லாமல் வெவ்வேறு மரங்களில் காணப்படு கின்றன. இவையே இனப்பெருக்க உறுப்புகள் ஆகும். இவ்வினப்பெருக்க உறுப்புகள் குட்டைக் கிளைகளின் லைக் கோணங்களில் உண்டாகின்றன. பூனை மகரந்தப் பைகள் (microsporangium) வால் போன்ற மஞ்சரி அமைப்பில் கூம்பாக ஆண் மரங்களில் காணப்படும். ஆண் கூம்புகள் ஒற்றை யாக இலைக் கோணங்களில் காணப்படுகின்றன. கூம்பில் மகரந்தப் பைகளின் அமைப்பு ஒழுங்கற்ற முறையில் காணப்படுகிறது. மகரந்தப் பைகள் காம் புடன் சேருமிடத்தில் இரண்டு குமிழ்போன்ற அமைப் புகள் உள்ளன். மகரந்தப் பையின் சுவர் பல செல் அடுக்கால் ஆனது. ஒவ்வொரு காம்பிலும் பெரும் பாலும் இரண்டு, சில சமயங்களில் மூன்று முதல் ஏழு மகரந்தப் பைகள் காணப்படும். மகரந்தப் பைகளில் மகரந்தத் துகள் காணப்படும். சூல்கள், பெண் மரங்களின் குட்டைக் கிளை சுளின் இலைக் கோணங்களில் உருவாகின்றன. இவை காம்புகளின் நுனியில் காணப்படும். இரண்டு சூல்கள் ஒரே காம்பில் உண்டாகின்றன. ஒவ்வொரு சூலிலும், ஒரே ஒரு சூலுறையால் சூழப்பட்ட நியூ ஸேல்லஸ் என்னும் பகுதி உண்டு. சூலின் நுனியில் சூல்துளை (micropyle) காணப்படுகிறது. நியூஸெல் லஸின் (nuceilus) மேல் பகுதியில் மகரந்த அறை உள்ளது. சூலின் அடிப்பகுதியைச் சுற்றி ஒரு வளை யம் போன்ற பட்டை காணப்படுகிறது. முதிர்ந்த சூல் உருண்டை வடிவமானது. இதன் சூலுறையின் வெளிப்பகுதி சதைப்பற்றாகவும், நடுப்பகுதி கடின மாகவும், உட்பகுதி மெல்லியதாகவும் உள்ளன. கருவுறுதலுக்கு முன்னர்,சூல் விழுந்துவிடுகிறது. மகரந்தப் பையினின்று உதிர்ந்த மகரந்தத்துகள், வளரும் ஆண்புணரித்தாவரம் (male gametophyte) ஆகும். காற்றினால் சில ஆண் புணரித் தாவரங்கள் சூலின் மகரந்த அறையை அடைகின்றன. சூலில் நியூ ஸெல்லலின் ஒரு செல்லிலிருந்து முளைசூழ்தசை என்னும் பெண் புணரித்தாவரம் உண்டாகிறது. பெண் இனப்பெருக்க உறுப்புகள் (archegonia) இதில் உருவாகின்றன. இவற்றில் அண்டம் என்னும் பெண்பால்செல் உள்ளது. சூலின் மகரந்த அறை யிலுள்ள ஆண் புணரித்தாவரத்திலிருந்து மகரந்தக் குழல் உருவாகி நியூஸெல்லஸை நோக்கி வளர்கிறது. இக்குழாயினுள் இரு ஆண் விந்துகள் உள்ளன. இவை முளைசூழ்தசையில் இருக்கும் பெண் உறுப்பை அடைந்து அங்குள்ள அண்டத்துடன் இணைந்து கருவுறும். கருவுற்ற அண்டத்திலிருந்து சுரு உண்டா கிறது. வளர்ந்த கரு. இரண்டு விதையிலைகளைக் கொண்டது. பிறகு சூல்கள் விதைகளாகின்றன. விதைகள் முளைத்துச் செடிகளாகின்றன. சதைப்பற்றுள்ள கருவுறுதலுக்குப் பயன். விதைகள் உணவாகப் பயன்படுகின்றன. இவற்றை வறுத்தோ, அவித்தோ, உப்புடன் சேர்த்தோ உட்கொள்ளலாம். கீழை நாடுகளில் இவை டப்பாக்களில் அடைக்கப்பட்டு, பக்குவப் படுத்தப்பட்ட உணவாக விற்பனையாகின்றன. அளவுக்கு விஞ்சினால் இவ்விதைகள் நஞ்சாகும். வே. சங்கரன் நூலோதி. A B. Rendle, The Classification of Flowering Plants, Vol I, Cambridge University Press, London, 1976. கிச்சிலிக் கரணை இதன் தாவரவியல் பெயர் டொடேலியாரஷியாடிகா (Toddalia asiatica) என்பதாகும். இது இது ரூடேசி என்னும் இருவித்திலைத் குடும்பத்தைச் சேர்ந்தாகும். இதற்கு மிளகரணை என்னும் பெயருமுண்டு. இச் செடியின் சில வகைகள் நாடு முழுதும் சில வறண்ட பகுதிகளிலும், சில கடல் மட்டத்தினின்று 2000 மீ உயரம் வரையிலும் காணப்படுகின்றன. ஏறத்தாழ 2 மீட்டர் உயரம் வரை சிச்சிலிக் கரணை வளரக்