பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 கிட்டப்பார்வை

642 கிட்டப்பார்வை மஞ்சரி 10-12 செ. மீ. நீளமுள்ள மடல் கதிராகும். மலர்கள் காம்பற்றவையாக இருப்பதால் மஞ்சரி ஸ்பைக் வகையைச் சேர்ந்தது. ஸ்பைக் கூம்பு வடிவம் கொண்டுள்ளது. மஞ்சரியில் மலர்கள் அடர்த்தி யாகக் காணப்படுகின்றன. இந்த மஞ்சரியில் பல பூவடிச் செதில்கள் உண்டு. சில பூவடிச் செதில்கள், மலர்கள் இல்லாமல் இருக்கும். இவை மலட்டுப் பூவடிச் செதில்களாகும். மகரந்தப்பை தாடி இழையுள்ளது. குலசும் மூன்று இணைந்த சூலிலைகளினால் ஆனது. மூன்று அறைகள் கொண்டது. கீழ்மட்டமானது. பல சூல்கள் அச்சுச் சூல் அமைப்பில் காணப்படுகின்றன. சூல் தண்டு மெலிந்து காணப்படும். கனி மூன்று பகுதி களாக வெடித்துச் சிதறும் வகையைச் சார்ந்தது. விதைகள் முட்டை அல்லது நீள வடிவானவை. இச்செடியின் வேர்கள் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வேர்கள் சிறிய வட்டத் துண்டங்களாக வெட்டப்படுகின்றன. இவற்றில் சிறந்த வகை வேர்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வருகின்றன. இவை ஊட்டமளிக்கும் தன்மை உள்ளவை. இது சிறுநீரசுக் கோளாறுகளுக்கு மருந் தாகச் சில வல்லுநர்களால் கருதப்படுகிறது. பொடி யாக்கப்பட்ட வேர் சிவப்புச் சாயத்திற்குக் கூட்டுப் பொருளாகச் சேர்க்கப்பட்டு இந்துக்களால் ஹோலிப் பண்டிகைக் களியாட்டங்களில் பயன்படுத்தப்படு கிறது. இச்செடி இந்தியாவின் மிதவெப்பப் பகுதி களில் பயிராகிறது. வே. சங்கரன் நூலோதி. Colonel Heber Drury. The Useful Plants of India, International Book Distributors, Dehra Dun, 1985. 1 கிச்சிலிக் கிழங்கு 1.மலர் மஞ்சரி 2. ஒற்றை மகரந்தம் உருளை மலர்கள் மஞ்சள் நிறத்தவை. புல்லி வட்டக் குழாய் குட்டை வடிவத்தது. அல்லி வட்டக் குழாய் புனல் வடிவத்தது. மூன்று இதழ் களால் ஆனது. இதழ்கள் முட்டை வடிவானவை அல்லது குறுகிய நீள வடிவானவை. மேல் இதழ் பிற இதழ்களைவிட நீளமானது, வளைந்தது. பக்க வாட்டு மலட்டு மகரந்த இதழ்கள் அல்லி வட்ட இதழ்கள் போன்ற தோற்றத்தைக் கொண்டவை. இவை ஒற்றை மகரந்தத்தாளுடன் இணைந்துள்ளன. மலரின் பெரும்பகுதி அல்லி இதழ்களால் மட்டுமன்றி அல்லி இதழ்களை ஒத்த மலட்டு மசுரந்தங்களாலும் ஆனது. உருமாறிய மகரந்த இதழ்கள் மகந்தரச் சேர்க்கைக்கு வண்டுகளை மலர்களிடம் ஈர்க்க உதவு கின்றன. மலர்களில் பாலின உறுப்புகளில் மலட்டுத் தன்மை மிகுவது அவற்றின் படிமலர்ச்சி வேறு பாட்டிற்குச் சான்றாகும். கிட்டப்பார்வை விழி வெண்படலம் (cornea), கருவிழி (pupil),விழி ஆடி (lens), முன்கண் நீர் (aqueous humour), பின் கண் நீர் (vitreous humour) போன்ற கண் பகுதிகள் வெளி உருவங்களை ஒளிமுறிவினால் விழித்திரையில் விழும்படிச் செய்வதால் உருவங்கள் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றின் ஒளிமுறிவு ஏதோ ஒரு காரணத்தால் மிகுதியாகவோ, குறைவாகவோ ஏற்படும்போது உருவங்களின் நிழல் விழித்திரையின் முன்புறம் அல்லது பின்புறம் விழும். இந்நிலையில் உருவங்கள் தெளிவாகத் தெரியா. உருவங்களின் நிழல் விழித்திரையின் முன்பக்கம் விழுமாறு ஊனம் உள்ளவர்களுக்குத் தாலைவிலுள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியா. ஆனால் உருவங்கள் கண்ணுக்கு அருகிலிருந்தால் அவற்றிலிருந்து வரும் கதிர்கள் விரி கதிராக உள்ளமையால் கண்ணின் மிகு ஒளி முறிவு ஆற்றலால் அவற்றின் நிழல்கள் விழித் திரையில் விழ முடியும். ஆகையால் இவ்வகை ஊனம் உள்ளவர்கள் அருகிலுள்ள பொருள்களை மட்டும் நன்றாகப் பார்க்க முடியும். இவர்கள் கிட்டப்பார்வையினர் (அண்மைப்பார்வையினர்) எனக் குறிப்பிடப்படுவர்.