பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/663

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்டப்பார்வை 643

விழித்திரையில் சாதாரண கண் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்படுகின்றன வில்லை கருவிழி விமித்திரை சிட்டப்பார்வைக் கண் கிட்டப்பார்வை 643 சரிசெய்யும் வில்லை ஒளிக்கதிரைக் குவிக்கிறது அண்மைப் பார்வை உண்டாவதற்குப் பல காரணங்கள் உண்டு. கண் உறுப்புகளின் வளைவு அதிகரித்தல், கண் முன்பின் பக்க நீளம் உடல் வளர்ச்சியால் அதிகரித்தல், ஒளி முறிவின் அளவு. நீரிழிவு நோய் அல்லது கண் பிறை முதலிய நோய் களால் அதிகரித்தல் போன்றவற்றால் அண்மைப் பார்வை ஏற்படலாம். ஆனாலும் பொதுவாக விழி வெண்படலத்தின் வளைவு அதிகரிப்பது மிகவும் அரிது. அவ்வாறு அதிகரித்தாலும் ஒரே சீராக அதிகரிப்பதில்லை. இதேபோல் விழியாடி முன் கூம்பு, பின்கூம்பு போன்ற நோய்களாலும் வளைவு அதிகரிக்கக்கூடும். கண் விழியாடியைத் தாங்கும் தசை நார்கள் (suspensory ligaments) தளரும்போதும் ஏற்படக்கூடும். பெரும்பாலும் இது கண்ணின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. மாட்டு விழி/buphthalmous) என்னும் ஒரு வகை நோய் குழந்தை பிறக்கும்போதோ குழந்தைப் பருவத் திலேயோ ஏற்படும். இந்த நோய் உள்ளோருக்குக் கண்ணின் முழு அளவும் அதிகரிக்கிறது. ஆகையால் எதிர்பார்க்கும் அளவு அண்மைப்பார்வை ஊனம் ஏற்படுவதில்லை. பொதுவாகக் குழந்தை பிறக்கும்போது மிகு நீளப்பார்வை என்னும் குறை காணப்படுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்கக் கண்ணும் வளரத் தொடங்குகிறது. மிகு நீளப்பார்வை ஊனம் குறைந்து சாதாரண பார்வை பெறுகிறது. சிலருக்குக் கண் 5. 8 41 அ சரிசெய்யப்படா ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன் குவிதல் கண்ணில் வளர்ச்சி இல்லாமல் அப்படியே இருந்து விடுவதால் மிகு நீளப்பார்வைக் குறை அப்படியே அமைந்துவிடுகிறது. சிலருக்குக் கண் வளர்ச்சி மிகவும் அதிகமாகி அண்மைப் பார்வை உண்டாகிறது. குழந்தை அண்மைப் பார்வைக் குறையுடன் பிறப்பது அரிது, இருப்பினும் சிலர் அண்மைப் பார்வைக் குறையுடன் பிறப்பர். பொதுவாக அண்மைப் பார்வை 3 அல்லது 4 வயதில் உண்டாகும். இந்தக் குறை அல்லது 6 வயதுக்கு மேல் நீடிப்பதில்லை. புது மலர்ச்சிப் பருவம் அடைந்தவுடன் அண்மைப் னவக் குறை அதிகரிப்பது அப்படியே நின்று விடுகிறது. சிலருக்கு இது மிகு விரைவாக அதிகரித்து 20, 25,30 வயது வரை காணப்படும். இது 15-20 வயது வரை மிகவும் கூடுதலாக அதிகரிக்கிறது. வயது ஆக ஆசு வேறுசில சீர்குலைவுகள் ஏற்பட்டு ஏறத்தாழ 60 ஆம் வயதில் இவர்கள் முழுதும் பார்வையற்றவர்களாகின் றனர். ヒヒコ பிரிவுகள். சாதாரண அண்மைப் பார்வைக்குறை, முற்றிக் கொண்டே செல்லும் குறை என இரு வகை உண்டு. இதில் முதல் வகை பொதுவாக ஏற்படும். ஏறத்தாழ 20 வயதுக்கு மேல் இக்குறை ஏற்படு வதில்லை. இதில் உள் விளைவுகள் ஏற்படுவதில்லை. பார்வையை வெளிக் குழிவில்லை மூலம் நன்றாகத் திருத்த முடியும். கண் மிகு நலத்துடன் இருக்கும். பின்னதில் குறை கொண்டே இருக்கும். மிக வேகமாக அதிகரித்துக்