646 கிணறு மூலம் சுரங்கத்தில் நீரிறைக்கும் முறை
646 கிணறு மூலம் சுரங்கத்தில் நீரிறைக்கும் முறை நூலோதி: Arnold Sorsby, Modern ophthalmology, Second Edition. Butterworth & Co. (Publishers) Ltd, London, 1972. கிணறு மூலம் சுரங்கத்தில் நீரிறைக்கும் முறை அகழ் பரப்பின் சுற்றுப்புறத்தில் குழாய்க் கிணறுகள் மூலம் நிலநீரின் பாய்வைத் தடுப்பதால் அதன் சுற்றுப் புறம் ஈரமில்லாமல் உலர்ந்து காணப்படும். இம் முறையே கிணறு மூலம் சுரங்கத்தில் நீரிறைக்கும் முறை (well point system) ஆகும். அகழ்பரப்பைச் சென்றடைவதற்கு முன், பாய்வைத் தடுப்பதால் அகழ்பரப்பின் ஓரங்கள் (edges of excavated area) நிலைபெற்று, செங்குத்துக் கரையோரச் சரிவுகள் ஏற்பட்டு, கரையோரத் தாங்குமானத்திற்குத் தேவை ஏற்படுவதில்லை. பரல்களையுடைய மண்ணில், அதாவது சரளை மற்றும் மணலில் கிணறுகள் மூலம் சுரங்கத்தில் நீரி றைக்கும் முறை மிகவும் சிறப்பானது. ஆனால் களி மண்ணால் ஆகிய நுண்ணிய மணலில் மண்களுக் க் கிடையே உள்ள சிறு துளைகள் நீரின் பாய்வை தடுக்கின்றன. இந்நீரிறைக்கும் முறையில், கிணற்று முனை, ஏறு குழாய், தலைமைக் குழாய், எக்கி ஆகியவை அடிப்படைக் கூறுகளாகும் (படம் 1). 1.2மீ நீளமும், 5 செ.மீ. விட்டமும் கொண்ட துளைகளுள்ள குழாயைக் கிணற்றுமுனை கொண் டுள்ளது. இது நீரின் பாய்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு பந்துக் கட்டுப்பாட்டிதழையும், நீர் மேலே செல் லும்போது மணல் உட்புகுவதைத் தடுக்க ஒரு சல்ல டையையும், தாரைவீழ் முனையையும் (Jetting tip) கொண்டுள்ளது. கிணற்று முனையுடன் இணைக்கப் பட்ட ஏறு குழாயின் விட்டம் கிணற்று முனைக் குழாயை விடச் சிறியதாக உள்ளது. நிலத்தடிநீரை மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதே ஏறு குழாயின் பணியாகும். மேற்பரப்பில் இந்நீர் இந்நீர் 10-25 செ.மீ. விட்டத்தைக் கொண்ட கிடைநிலைத் தலைமைக் குழாயின் மூலம் திரட்டப்படுகிறது. நிலத்தின் இயல்பு களையும் தன்மைகளையும் பொறுத்து, கிணற்று முனையும் ஏறு குழாயும் 0.9-1.8மீ இடைவெளியில் வைக்கப்படுகின்றன. கிணற்று முனையும், ஏறு குழாயும் தேவையான ஆழத்தில் 0.5-1.5 மீ ஆழ் பரப்பிற்குக் கீழே தாரைவீழ் முறையால்(அதாவது நீரின் அழுத்தத்தால், நிலப்பரப்பை இடப் பெயர்ச்சி செய்தல்) செலுத்தப்படும். சுடினமான களிமண், கடினமான சரளை ஆகிய வற்றால் அமைந்த நிலத்தடி நீர்ப் படிமானத்தில். மேலமைந்த கடினப்பொருள்களைப் பெயர்ப்பதற்குத் தாரைவீழ்தல் முறை ஏற்றதாக இருப்பதில்லை. நிலமேற்பரப்பு தலைமைக் குழாயிலிருந்து எக்கிக்கு முன்னர் இருந்த நீர் மட்டம் ஏறு குழாய் கிணற்று முனை கிணற்றுமுனையால் குறைக்கப்பட்ட நீர் மட்டம் படம் 1. கிணற்று முனை முறை இதனால் கிணற்றின் முனையைக் கீழே கொண்டு செல்வதற்குச் சிறப்பான துரப்பணம் படுகிறது. எக்கிகள் தேவைப் அமைக்கப் நீர்மட்டத்திற்கு மேல் படுகின்றன. ஆழ்பரப்பிலிருந்து நீரை வெளியேற்று வதற்கு இவை தலைமைக் குழாயிலிருந்து நீரைச் சேகரிக்கின்றன. எக்கிகள் மையவிலகு எக்கிகளாகும். இவற்றுடன், உறிஞ்சு ஏற்றை (suction lift) அதிகப்