பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிப்சைட்‌ 647

படுத்துவதற்கான வெற்றிட எக்கிகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு கிணற்றுமுனையின் உறிஞ்சு ஏற்று அரிதாக 5.7 மீ மேல் செல்கிறது. நில மட்டத்தின் கீழுள்ள கிணற்று முனையின் ஆழம், உறிஞ்சு ஏற்றத்தின் ஆழத்தைவிட மிகுதியாக இருப் பின், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிணற்று முனை அடுக்குகள் தேவைப்படுகின்றன. படம் 2. எக்கிகள் மூன்றடுக்குக் கிணற்று முனை முறையின் அமைவு படம் ஒவ்வோர் அடுக்கும் கிணற்றுமுனை தலைமைக்குழாய், ஆகியவற்றைத் தனித்தனியே கொண்டுள்ளது. இரா.சரசவாணி நூலோதி.I.C. Syal & A. K. Goel, Reinforced Concrete Structures, Second Edition, Wheeler & Co. Pvt. Ltd., Allahabad, 1987. கிப்சைட் இது ஓர் அலுமினியக் கனிமம். இதில் அலுமினியத் துடன் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் உள்ளன. இதை நீரேறிய அலுமினிய ஆக்சைடு (AI,O,.3H,O) எனவும் கூறலாம். ஆனால் இது ஓர் அலுமினிய ஹைட்ராக்சைடு (Al(OH),) . ஆகும். கிப்சைட் (gibbsite), பேயரைட், நா (ட்) ஸ்டிரான்டைட் கனிமங் களுடன் வேதியியலில் ஒன்றாகவும், உருவம் மற்றும் பிற தன்மைகளில் மாறுபட்டும் உள்ளது. சிப்சைட் படிகம் ஒற்றைச்சரிவுத் தொகுதி யின் முழுவடிவ வகுப்பைச் சேர்ந்தது. இதன் அணுக் கோப்பு ஒற்றைச்சரிவுத் தொகுதியின் பட்டகப் பிரிவைச் சார்ந்த முயல்பான வகையைச் சேர்ந்தது. கிப்சைட் 647. கிப்சைட்டின் ஓர் அணுக்கோப்பில் எட்டுக் கூட்டணுக்கள் உள்ளன. இதன் அணு அமைப்பில் அணுக்களுக்கிடையேயுள்ள தொலைவு, மூன்று திசை களிலும் முறையே 8.626; 5.060; 9.700 (A) ஆக உள்ளது. படிக அச்சுகளின் நீளவிகிதம் a:b:c = 1.7089:1:1.9184 ஆகும். இதில் முன்பின் (a) படிக அச்சிற்கும், மேல்கீழ் (c) அச்சிற்கும் இடையேயுள்ள (B) கோணம் 85" 29" ஆகும். கிப்சைட் படிகங்களாக அரிதாகவே கிடைக் கிறது. இதன் படிகங்கள் அடி இணை வடிவுக்கு ணையாகத் தட்டையாக உள்ளன. இதில் (100) ணைவடிவும். (110) பட்டகமும் வளர்ச்சிபெற்று இருப்பதால் படிகங்கள் அறுகோண வடிவத்தில் உள்ளன. கிப்சைட் கல்விழுதுகளாகவும், சிறிய குமிழ் களாகவும், பொரைகளாகவும், முடிச்சுக்கற்களாகவும் கிடைக்கிறது. இவை மழமழப்பானவை. சில நன்கு புலனாகா இழைகளாகவும், கெட்டியாகவும் இருக் கும். கிப்சைட் படிகங்கள் (001) தளங்களில் (130)- வினை அச்சாகக் கொண்டு படிக இரட்டுறல் அடைந் துள்ளன.(100) மற்றும் (110) தளங்களின் மீதான படிக இரட்டைகள் மிகுதியாகக் காணப்படுவதில்லை. கிப்சைட் வெள்ளை, சாம்பல், பசுமை. அல்லது சிவந்த வெண்மை நிறங்களிலும், நிறங்களிலும், தூய்மையற்ற நிலையில் சிவந்த மஞ்சள் நிறங்களிலும் இருக்கும். இதன் கடினத்தன்மை 2.5-3.5 வரை இருக்கும். ஒப்படர்த்தி -2.40: இதில் (001) முகத்திற்கு இணையான கனிமப்பிளவு தெளிவாகத் தெரியும். து ஒடியாதது : வளையாதது. இதில் களிமண் மணம் வரும். கிப்சைட் கந்தக அமிலத்தில் கரை வதில்லை. ஆனால் சூடான சோடியம் ஹைட்ராக் சைடில் கரையும். க்கரைசலைக் குளிர்வித்தால் கிப்சைட் மீண்டும் படிகங்களாகத் தோன்றும். இதன் கனிமப் பிளவின் பக்கங்களில் முத்து - மிளிர்வும், ஏனைய பக்கங்களில் பளிங்கு-மிளிர்வும் காணலாம். ஒளிபுகுந்தன்மை உடையது: சில ஒளி கசியுந்தன்மை யுடையவை. பிரகங்களைப் போல் கிப்சைட்டில், (100),முகங்களுக்குச் செங்குத்தான கோடுகளை யுடைய குத்துப்படங்களும், (001) முகத்தில் அழுத்தப்படங்களும் உண்டாகின்றன. + கிப்சைட்டிலுள்ள நீரின் அளவு வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இதனால் இதன் ஒளியியல் தன்மைகள் வேறுபடுகின்றன. கிப்சைட்டில் இரண்டு ஒளி அச்சுகள் உள்ளன. இது நேர் (+) ஒளிக் குறியை உடையது. ஒளி அச்சுகளுக்கிடை டயேயுள்ள (2v) கோணம் 20 வரை இருக்கும். வெப்பம் அதிகரித்தால் இக்கோணத்தின் அளவு குறைகிறது. 26.5°C வெப்பத்தில் இக்கோணம் 0° ஆசு இருக்கும். கிப்சைட்டின் ஒளி அச்சுத்தளம் (010) பக்கத்திற்குச் செங்குத்தாக இருக்கும். ஆனால் இதன் வெப்ப லை 27°C க்கு மிகும்போது இத்தளம் (010) பக்கத்