648 கிப்பன்
648 கிப்பன் = திற்கு இணையாக அமைகிறது. இதில் X - அதிர்வுத் திசை வல (b) படிக அச்சுக்கு இணையாகவும், (x - b) y - அதிர்வுத்திசை, படிகக்குத்து. (c) அச்சுக்கு 69 சாய்ந்தும் (YAC = 69·), Z- அதிர்வுத் திசை படிகக் குத்து ( C) அச்சுக்கு 210) சாய்வாகவும் (ZAC 21) காணப்படும். 564°C க்கு அதிகமான வெப்ப நிலையிலிருந்தால் Y- அதிர்வுத்திசை வல இட (b)- அச்சுக்கு இணையாகவும், (Y = b) Z அதிர்வுத்திசை குத்து (C) அச்சுக்கு 45) சாய்வாகவும் அமை கின்றன. கிப்சைட் இழைகளாக உள்ளபோது, அதன் நீளக்குறி நேராகவோ (+). எதிராகவோ (-) இருக்கும். கிப்சைட்டின் ஒளிவிலகல் எண்கள் a = 1,562; 8 = 1.568; 7 = 1.587 460. அலுமினியக் கனிமங்கள் மாற்றமடைவதால் கிப்சைட் உண்டாகிறது. பாச்சைட் மற்றும் லேட்டரைட் எனும் செம்பூராங்கல் படிவுகளில் இது காணப்படுகிறது. ஃபெல்ஸ்பார் மற்றும் குருந்தம் மாற்றமடைவதாலும் கிப்சைட் உண்டாகிறது. அனற்பாறைகளின் குறைந்த வெப்பத்திலுண்டான நீர்வெப்பக் கனிமப் படிவுகளில் நரம்புகளைப் போன்றும், புழைகளிலும் கிப்சைட் கிடைக்கிறது. முதலான கிப்சைட் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா, அர்கன்சாஸ், பெனிசில்வேனியா, நியூயார்க் கிய பிரேசில், இடங்களிலும், நார்வே, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, சோவியத் ஒன்றியக் குடியரசு. மடகாஸ்கர், டாஸ்மேனியா நாடுகளிலும், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானல், பெல்ஹாம் மாவட்டத்திலுள்ள தளவாடி சதாரா மாவட்டத்திலுள்ள பெஹளலி ஆகிய இடங்களிலிருக்கும் பாக்சைட், செம்பூராங்கல் (லேட்டரைட்) படிவுகளிலும் கிடைக்கிறது. இக்கனிமம் கலோனவ் ஜார்ஜ் கிப்ஸ் (1977- 1834) என்பாரின் பெயரால் கிப்சைட் என்று பெயரி டப்பட்டுள்ளது. இவர் வைத்திருந்த கிப்சைட் கனி மங்களை 19 ஆம் நூற்றாண்டில் யேல் கல்லூரி வாங்கிக் கொண்டது. கிப்சைட்டிற்கு ஹைட்ரார் ஜிலைட் என்னும் பெயரும் வழங்கப்பட்டிருந்தது. ல. வைத்திலிங்கம் நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elem- ents of Optical Mineralogy, Part II, Wiley Eastern Private Ltd, New Delhi, 1968. கிப்பன் இவ்விலங்கு மனிதக்குரங்கின வகையைச் சார்ந்த பாலூட்டியாகும். கொரில்லா, சிம்பன்ஸி, உராங் உட்டான் போலல்லாமல், கிப்பன் (gibbon) உருவத் தில் சிறிய வாலில்லாக் குரங்கு ஆகும். கிப்பன்களில் கறுப்புக் கை கிப்பன் வெள்ளைக்கை கிப்பன் என இரு வகையுண்டு. வாழிடம். இந்தியாவில் அஸ்ஸாம் காடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளாகிய பர்மா, தாய்லாந்து, மலேசியா, சுமத்ரா, போர்னியா போன்ற நாடுகளின் காட்டுப் பகுதிகளிலும் கிப்பன்கள் வாழ்கின்றன. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உட்டான் போன்ற மனிதக் குரங்குகளிலிருந்து அமைப்பில் கிப்பன்கள் சற்று வேறுபட்டுத் தோன்றுகின்றன. கிப்பன்களின் இரண்டு கைகளும் கால்களைவிட மிக நீளமானவை. பிற மனிதக் குரங்குகள் போல் அல்லாமல் பிட்டப் பகுதிகளில் சற்றுக் குறைவான தோல் காய்ப்புகள் காணப்படும். புற அமைப்பும் இயக்கமும். கிப்பன்கள் மிகுதியாக மரங்களிலேயே வாழும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளன. அதன் பயனாக ஒரு கிளையிலிருந்து பிறிதொரு கிளைக்குத் தாவிச் செல்வதற்கு அல்லது மரம் விட்டு மரம் தாவிச் செல்வதற்கு ஏற்றவாறு அதன் கைகளும், கை விரல்களும் அமைந்துள்ளன. தன்னை நோக்கி யாரேனும் வருவதைக் கிப்பன் கண்டால் உடனே சரசரவென்று மரத்தின் நுனி கிளையைப் கிளைக்கு ஏறிச் சென்று அங்குள்ள பிடித்துக் கொண்டு ஊசலாடும். இவ்வாறு சில நொடிகள் ஆடி, தொலைவில் உள்ள மற்றொரு கிளையை நோக்கித் தாவும்.இவ்வாறு ஒவ்வொரு கிளையாகத் தாவித் தாவிப் பார்வையிலிருந்து மறைந்துவிடும். மரக்கிளைகளின் உச்சியில் இவ்விதம் கிளைக்குக் கிளை இக்குரங்குகள் கூட்டம் கூட்ட மாய்த் தாவிச் செல்லும். கிப்பனின் பாதங்கள் அகல மானவை; கால் கட்டை விரல்கள் மிக நீளமானவை. மரக்கிளைகளை உறுதியாகப் பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. வை கிப்பனின் கைகள் மிகவும் நீளமானவை. தரை யில் நடப்பதற்குத் தடை இல்லாமல் இருக்க ஆங்கில எழுத்தான 'T' போல கைகளையும் தூக்கி நேராக நீட்டிக் கொண்டோ கைகளைச் சேர்த்துப் பிடரியில் வைத்துக் கொண்டோ டாதான் நடக்கும். கிப்பன் நிமிர்ந்து நின்று கையைத் தொங்கவிட்டால் இதன் கைகள் தரையைத் தொடும். இரண்டு கைகளையும் 'T' போல நீட்டி நுனியிலிருந்து அளந்தால் கையின் மொத்த நீளம் அதனுடைய உடலின் உயரத்தை விட இரண்டு மடங்கு மிகுதி யாக இருக்கும். கிப்பனின் கையில் உள்ள கட்டை விரல்கள் சிறியவை. மரங்களில் ஏறுவதற்கும், மரத் திற்கு மரம் கிளைகளைப் பற்றித் தாவுவதற்கும் கைகளின் அமைப்புப் பயன்படுகிறது. வாழ்க்கை. கிப்பன்கள் கூட்டம் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு கூட்டத்தில் ஓர் ஆண் தன்