கியூரி 653
தந்தையிடம் பெற்றார். பின்னர். வார்சவ் நகரி லிருந்த ஒரு பள்ளியில் பல ஆண்டுகள் ஆசிரியை யாகப் பணியாற்றினார். 1891 இல் இவர் பாரிஸ் நகருக்குச் சென்று இயற்பியல் பாடத்தைப் பயின்று 1893 இல் பட்டம் பெற்றார். ஈராண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேதியியலாள ரான பியாரி கியூரியை மணந்து கொண்டார். ஏ.ஹெச். பெக்குரல் என்ற இயற்பியலாளர் ஆராய்ந்து கொண்டிருந்த யுரேனியத்தின் கதிரியக் கத்தைக் கியூரி அம்மையார் ஆராயத் தொடங்கி னார். 1898 இல் பிட்ச் பிளன்ட் என்ற தாதுவி லிருந்து பொலோனியம், ரேடியம் ஆகிய தனிமங் களைப் பிரித்தெடுத்தார். இவ்வாராய்ச்சியில் அவர் கணவரும் உதவினார். ஆனால் தூய ரேடியத்தைப் பெற, அவர்கள் அடுத்துள்ள நான்கு ஆண்டுக் காலமாகத் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டி யிருந்தது.ஆய்வைத் தொடர்வதற்கான நிதி வசதி யும் அவர்களுக்குக் குறைவாகவே இருந்தது. எனவே கியூரி அம்மையார் இயற்பியல் ஆசிரியராசு ஒரு பள்ளியில் பணியாற்றினார். 1903 இல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஹென்ரி பெக்குரலுடன் கியூரி தம்பதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எவ்விதமான பதிவுரிமையும் இன்றி,கியூரி தம்பதியினர் ரேடியம் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப முறைகளை உலகிற்கு அளித்தனர். 1903 இல் சார்போன் நகரில் கியூரியின் கணவர் பணி யாற்றிய இயற்பியல் துறை சார்ந்த ஆய்வுக்கூடத்தின் தலைமையாளராகக் கியூரி பொறுப்பேற்றார். 1906 இல் அவர் கணவர் காலமான பின் அத்துறையிலேயே பேராசிரியராகப் பொறுப்பேற்றார். ரேடியம் மற்றும் அதன் சேர்மங்களில் கியூரியின் ஆய்வைப் பாராட்டி மீண்டும் ஒரு முறை நோபல் பரிசுக் குழுவினர் வேதி யியல் துறைக்கான பரிசை 1911 ல் வழங்கினர். 1914 ஆம் ஆண்டில் பாரிஸில் அமைந்திருந்த புதிய ரேடிய கழகத்துக் கதிரியக்சு ஆய்வுக் கூடத்தின் மேரி கியூரி ஐரின் கியூரி பியாரி கியூரி கியூரி 653 பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இங்குப் பணி யாற்றும் போது இவர் புதல்வியான ஐரினும் அவரு டன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஐரின், கியூரியிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஜோலியட் என்பாரை மணந்து கொண்டார். முதலாம் உலகப் போரின்போது மருத்துவமனைகளில் ரேடியம் கதிர் வீச்சு முறையினைப் பயன்படுத்தி நோயகற்றும் முறையை ஏற்படுத்தினார். 1921 இல் அமெரிக்க ஒன்றிய நாட்டிற்குப் பயணம் சென்றார். 1929ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத் தலைவர் ஹெர்பர்ட் ஹோவர்,மேரி கியூரி அம்மையாருக்கு 50,000 டாலர் காசோலையைப் பரிசளித்தார். ஆனால் இதை அவர்வார்சவ் நகரில் அமைந்திருந்த ஓர் ஆய்வுக்கூடத் திற்கு ஒரு கிராம் ரேடியம் வாங்குவதற்காக வழங்கிவிட்டார். 1910 ஆம் ஆண்டில் அவர் traise de radioactivire என்ற ஆய்வுத் தாளை யும் ரேடியம் ஆராய்ச்சித் தொடர்புடைய பல ஆய் வுத்தாள்களையும் வெளியிட்டார். கியூரி அம்மை யார் 1934ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் நாள் ஹாட் சவோய் என்னுமிடத்தில் இயற்கை எய்தினார். பியாரி கியூரி (1859-1906). பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநரான பியாரி கியூரி 1859 ஆம் ஆண்டு மேத்திங்கள் 15 ஆம் நாளன்று பிறந்தார். இவர் சார்போன் நகரில் கல்வி சுற்றார். பொது இயற்பியல் பேராசிரியராக ecolede physique et de chimie ஆய்வகத்தில் 1895 இல்பொறுப் பேற்றார். 1904 இல் சார்போன் நகரில் அமைந் திருந்த கல்லூரியில் பொது இயற்பியல் பேராசிரிய ராகவும் விளங்கினார். இவர் தம் தொடக்க கால ஆய்வுப்,படிகங்களின் காந்தத்தன்மையைப் பற்றியதாக அமைந்தது. இவர் சகோதரரான பால்- ஜீன் கியூரியுடன் சேர்ந்து 1880 ஆம் ஆண்டில் படிகங் களில் படிக மின்னழுத்தங்களைப் பற்றி(piezoelectri- city) ஆராய்ந்தார். மின்காந்த ஏற்புத் திறனை (electrical susceptibility) ஒட்டிய இவர் கொள்கை கியூரி விதி என்றும், எந்த உய்ய வெப்ப நிலையில் அயகாந்தத்தன்மை மறைகிறதோ அந்த நிலை கியூரி புள்ளி என்றும் குறிப்பிடப்படுகின்றன. பியாரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பத்தொன்ப தாம் நாள் வண்டி ஒன்று மோதியதால் காலமானார். கியூரி தம்பதிகளின் மகள் ஈவ் கியூரி இசைத் துறையில் மிகவும் சிறந்து விளங்கினார். பியாரி மேரி கியூரி தம்பதிகளின் புதல்வியான ஐரின் கியூரி 1925 இல் முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அவர் ஃபிரடரிக் ஜோலியட் என்ற பொறி யாளரைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து ஆராய்ச் சியைத் தொடர்ந்து முதன் முதலில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தனர். இதனால் நியூட்ரான் என்ற அணுவின் அடிப்படைத் துகளைக் கண்டுபிடித்தனர். 1935 இல் அவர்கள்இருவருக்கும் புதிய கதிரியக்கத் தனிமங்களைத் தயாரித்ததால்