கிரவுண்ட், ஜான் 655
magnet), முனைவாக்கம் பெறாத இரும்பியல் மின், எதிர் இரும்பியல் மின், சில பாரா காந்தங்கள் இவற்றின் தனி வெப்பநிலைக்கும் இடையேயான தொடர்பு கியூரி-வீயஸ் விதி (Curie weiss law) எனப் படும். பொதுவாகக் கியூரி-வீயஸ் விதி பின்வரும் சமன்பாட்டால் குறிக்கப்படுகிறது. X = C(T-0) X என்பது ஏற்புத்திறன்,C என்பது ஒவ்வொரு பொருளுக்குரிய கியூரி மாறிலி, T என்பது தனி வெப்ப நிலை மற்றும் 1 என்பது கியூரி வெப்பநிலை. எதிர் இரும்பியல் காந்தம். எதிர் இரும்பியல் மின் பொருள்கள் எதிர்க்கியூரி வெப்பநிலையைக் கொண்டு உள்ளன. கியூரி-வீயஸ் விதி, பொருள்களின் மாறு நிலை வெப்பநிலைக்கு மேல் காந்த, மின் பண்பு களைப் பற்றிக் கூறுகிறது. ஆயினும் இப்பண்புகள் முழுமையாக அனைத்துப் பொருள்களுக்கும் பொருந் துவதில்லை. ஏனெனில் சில பொருள்களில் மாறுநிலை வெப்பநிலைக்கு மிக அருகில் இப்பண்புகள் முறிவடை கின்றன. வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு C,8 மதிப்புகளில் ஏற்புத்திறன் கியூரி - வீஸ் விதியின் படி அமைந்துள்ளது. கியூரி-வீயஸ் நடத்தை அடுத்தடுத்து அமைந்துள்ள அணுக்களின் இடைவினையின் விளைவால் ஏற்படு கிறது. இவ்விடைவினை நிலையான அணுக்காந்த இருமுனைப் புள்ளிகளை ஒரே திசையில் ஏற்படுத்து கிறது. இந்த இடைவினையின் திறனே கியூரி வெப்ப நிலை 9 ஐ நிர்ணயிக்கின்றது. காந்த நிலைகளில் 9 ஐ அணுக்களுக்கிடையேயான டைவினை ஹெய்சன் பர்க் பரிமாற்றப் பிணைப்பால் தோற்றுவிக்கப்படு கிறது. பல பாரா காந்த உப்புகளில்,குறிப்பாக இரும்புத் தொகுதியில், கியூரி - வீயஸ் நடத்தைக்குப் படிக உருக் குலைவுகளும் இதன் விளைவால் காந்தமாக்கலுக் கான அணுச் சுற்றுப்பாதைக் கோண உந்தத்தில் ஏற் படும் மாற்றமுமே காரணமாகின்றன. கிரவுண்ட், ஜான் ஜா.சுதாகர் ஹென்ரி, மேரி தம்பதியருக்கு 1620 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 ஆம் நாள் மூத்த மகனாகப் பிறந்து.1674, ஏப்ரல் 18 ஆம் நாள் இறந்த ஜான் கிரவுண்ட் முறையான பள்ளிப் படிப்பில்லாதவர். தந்தையின் துணிக்கடையில் பணி யாற்றிய இவர் 1647 ஆம் ஆண்டு மேரி ஸ்கிரோட் என்பாரைத் திருமணம் செய்துகொண்டார். லண்டனி கிரவுண்ட், ஜான் 6.55 லுள்ள பல பெரிய மனிதர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. கிரவுண்ட் எழுதிய ஒரே நூல் 1652 ஜனவரியில் வெளியிடப்பட்டதும், இரண்டாம் சார்லசின் வேண்டு கோளுக்கிணங்க, பிரபுக்கள் சபையில் இவர் உறுப்பி னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1666 இல் நேர்ந்த தீ விபத்தில் பேரிழப்பைச் சந்தித்த இவருக்குப் பல சட்ட நடவடிக்கைகளும் மன அமைதியை இழக்கச் செய்தன. கிரவுண்டின் Natural and Political observations mentioned in a following index and made upon the bills of mortality' (1662) எனும் நூல் புள்ளியிய லுக்கும் மக்கள் தொகையியலுக்கும் அடிப்படையாக அமைந்தது. கணிதத்தை அவர் முறையாகக் சுற்காமையால், அவர் நூல்களிலுள்ள கணிப்புகளில் புரியாத பகுதிகள் இல்லை என்றே சொல்லாம். ஒரு நல்ல வணிகருக்குத் தெரிந்த அளவுக்கான கணித அறிவு மட்டுமே இவருக்கிருந்தது. இவர் காலத் தவரான பெட்டி என்பார் கொடுத்த ஊக்கமே, இவர் இந்நூலை மிகச்சிறப்பாக எழுதத் தூண்டியதாகத் தெரிகிறது. கிரவுண்டின் நூல் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. மக்கள் தொகையையும் வளர்ச்சியையும் கொண்டு செய்திகளை ஆய்ந்து எவ்வகையில் அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார். அதே சமயம் தம்கண்டுபிடிப்பால் இருந்த முரண்பாடுகளைக் கால இடைவெளி, இருப்பிட முறையில் சுட்டிக்காட்டி, சில கொடிய மேக நோயால் இறந்தவர்களின் இறப்புக்கான காரணங்கள் எவ்வாறு பொய்மையாக் கப்பட்டுள்ளன என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் கொடுத்துள்ள சில பட்டியல்களின் சிறப்பைப் பெரும் புள்ளியியல் மேதைகளும் பாராட்டியுள்ளனர். ஆண்களைவிடப் பெண்கள் நீண்ட நாள் வாழ் வதையும், ஆண் பெண், விகிதம் ஏறக்குறைய சமமாக இருப்பதையும், இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் சீராக இருப்பதையும், குழந்தைகளின் இறப்பு மிகுதியாக இருப்பதையும், நகரத்தைவிடச் சிற்றூர் களில் இறப்பு விஞ்சியிருப்பதையும் பட்டியல்கள் மூலம் விளக்கியுள்ளார். மக்கள் தொகையியலில் ஆராயப்பட வேண்டிய பல பண்புகளை இவர் பகுத்தாய்ந்தார். கணக்கு களைக் கொண்டு பல பிரச்சினைகளை விளக்கினார். ஆனால் முக்கியமான சில விவரங்களைக் கொடுக்க வில்லை. சில தீர்வுகளின் முடிவுகளைக் கணிப்பது கடினமாயிருப்பதாகத் தெரிகிறது. இவர் கொடுத்த சில பட்டியல் சரியாக இருக்காதோ என்று அவரே ஐயப்பட்டு, பல மறைமுகமான முறைகளில் அவற் றைச் சரிபார்க்கவும் செய்தார். சாலமன், கர்ப் எனும் மீன் வகைகளின் வளர்ச்சியைப் பற்றி 1663