பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 கிராம்‌ நிறமூட்டல்‌

660 கிராம் நிறமூட்டல் 12 ஆகியவற்றுடன் வினைப்படுவதற்குத் தேவைப்படும் தனிம எடையாகும். அணு எடை அளவை Cusஎன்னும் I பங்கை அடிப் ஐசோடோப்பின் பொருண்மையில். படையாகக் கொண்டதாக கொண்டதாக மாற்றப்பட்ட பிறகு, 3கி, கார்பனுடன் வினையுறும் தனிம எடையே கிராம்சமான எடை என வரையறுக்கப்பட்டது. அணு எடையைப் போலன்றி, சமானஎடை தனிமத்தின் இணை திறனைப் பொறுத்து மாறக் கூடுமாதலின் இவ்வரையறை கார்பனுக்கு இணை திறன் 4-ஆக இருக்கும்போது மட்டுமே இயலும் (12/4=3). ஒரு ஃபாரடே (அதாவது, 96,500 கூலும்) மின் னேற்றம் செலுத்தப்படுவதால் ஒரு மின்கலத்தின் மின்முனைகளில் கரையும் வீழ்படியும் அல்லது வெளியேறும் தனிமத்தின் கிராம் எடையே அதன் கிராம் சம எடையாகும். தனிமங்களைப் போன்றே சேர்மங்களுக்குமீ கிராம் சமானஎடை உண்டு. ஒரு சேர்மத்தின் கிராம் சமான எடை அது அமிலம், காரம், உப்பு. ஆக்சிஜனேற்றி, ஒடுக்கி ஆகியவற்றுள் எவ்வகையில் ஒரு குறிப்பிட்ட வினையில் செயலாற்றுகிறது என்பதைப் பொறுத்ததாகும். ஒரே சேர்மம் அமில மாகவும், ஆக்சிஜனேற்றியாகவும் பயன்படலாம். இரு நிலைகளிலும் அதன் கிராம் சமான எடை சம மாக இருத்தல் வேண்டும் என்பதில்லை. காட்டாக நைட்ரிக் அமிலத்தின் கிராம் சமான எடை அமிலமாக செயல்படும்போது அணு எடைக்குச் சதி மாகவும், நீர்த்த நிலையில் தாமிரம். வெள்ளி, காரீயம் போன்ற உலோகங்களை ஆக்ஜனேற்ற மடையச் செய்கையில் அணு எடையில் மூன்றில் ஒரு பங்காகவும் உள்ளது. அது இரு வேதிப் பொருள்கள் ஒன்றோடொன்று அவற்றின் கிராம்சமானஎடைகளின் விகிதத்திலேயே வினையுறுகின்றன என்பதே கிராம் சமான எடையின் முதன்மையைக் காட்டும் மையக் கருத்தாகும். ஒரு வினையில் பங்கேற்றுள்ள வினைப்படுபொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் யாவுமே சமன் பாட்டில் அவற்றின்சமான எடைகளின் விகிதத்திலேயே அமைந்துள்ளன. கிராம் நிறமூட்டல் மே. ரா. பாலசுப்ரமணியன் து உயிருள்ள நுண்ணுயிரிகளை அடையாளம் கண்டு கொள்ள மருத்துவத்தில் பயன்படும் ஆய்வாகும். சாதாரண நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது உயிருள்ள நுண்ணுயிரிகளின் விவரமான உள் அமைப்பு மிகவும் நுட்பமாகத் தெரிவதில்லை. இவற்றில் ஒரு வேறுபடுத்திக் காட்டும் பொருள் இல்லாததே இதற்குக் காரணமாகும். எனவே. நுண்ணுயிரிகளில் உயிர் உள்ளபோதே அவற்றுக்கு நிறங்களை அளிப்பதன் மூலம் இவற்றைத் தெளி வாகப் பார்க்க இயலும். ஆனால் சில சாயங்கள் ஆற்றல் மிக்கவையாக உள்ளமையால் அவை நிற மூட்டும்போதே, நுண்ணுயிர்களின் செல்களைக் கொன்று விடவும் வாய்ப்புண்டு. நிறமூட்டல் வகைக்கு, மிகு கவனிப்புடன் சாயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சாதாரண நிறமூட்டல், ஊடுருவி நிலைப்படுத்தும் நிறமூட்டல். பிரிக்கப்பட்ட பலவகை நிறமூட்டல் என நிறமூட்டல் செய்முறை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பல நான்காவதாகக் குறிப்பிடப்பட்ட வகையில் ஒரே நீர்மத்தில் இருவகைச் சாயங்கள் கலக்கப்பட்டிருப் பதன் மூலம் பல்வேறு நுண்ணுயிரிகள் வேறுவேறு நிறங்களை எடுத்துக்கொள்கின்றன. ஒரே செய்முறை யில் இருவேறு நிறங்களாகக் காணுவதுதான் இம் முறையின் சிறப்பு ஆகும். கிராம் நிறமூட்டல் இந்த முறையில் முக்கிய மானதாகும்.1884 ஆம் ஆண்டு கிறிஸ்டின் கிராம் என்னும் செல்லியலார் இந்த முறையை விவரித்தார். இது ஒரு மிகச் சிறந்த ஆய்வாக அனைவராலும் கருதப்படுவதற்கு, பல்வேறு நுண்ணுயிரிகளை இனப் படுத்திப் பிரித்துப் பார்க்க இந்த ஆயவு மிகவும் பயன்படுவதே காரணம். இதன் செய்முறை நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. . 1. முதலில் கண்ணாடித் தகட்டின் மேல் ஆய்வுக் குரிய பொருள் (எச்சில், திசுநீர் திசுக்கள், கண்ணீர்ச் சுரப்பு, தொண்டையினின்றும் எடுக்கப்படும் கோழை ஆகியவை) பூசப்படுகிறது. பின்னர் அதன் மீது பாரா ரோஸ் அனிவீன் (para rose anilin) என்னும் சாயப் பொருள் (கிரிசைல் வயலட், மெத்தில் வயலட்) ஊற்றப்படுகிறது. 2. இரண்டாவதாக, நீர்த்து வைக்கப்பட்ட அயோடின் நீர்மம் ஊற்றப்பட வேண்டும். 3. எத்தனால், அனிலீன் அல்லது அசெட்டோன் இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் ஒரு நிறமழிக்கப்பட வேண்டும்.4. எதிர்ச் சாய மேற்ற கார்பன் ஃபியுக்ஸின் போன்ற ஒன்றைக் கையாள வேண்டும். கிராம் நிறமூட்டல் முறையின் அடிப்படையில், நுண்ணுயிரிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவை கிராம் உடன்பாட்டு நுண்ணு யிரிகள் (gram positive),கிராம் எதிர்மறை நுண்ணு யிரிகள் (gram negative) என்பன.