பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராம்பு 663

பெரிய சதைப்பற்றுள்ள புல்லி இதழ்கள் காணப்படும். அரிதாக ஒரு கனியில் இரண்டு விதைகள் உள்ளன. விதையின் மேலுறை கருஞ்சிவப்பு நிறமானது. விதை 1.5 செ.மீ. நீளமுடையது. நீள்சதுரமாகவும், இருமுனைகளில் குறுகலாகவும் இருக்கும். விதையில் இரு வித்திலைகள் உண்டு. முளைசூழ்தசை இல்லை. தரைமேல் முளைத்தல் முறையில் விதைகள் முளைக் கின்றன. சாகுபடி முறை. உலகில் கிராம்பு ஆண்டுதோறும் 20,000 முதல் 30,000 டன் வரை உற்பத்தி செய்யப் படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் சான் சிபார், டான்சானியா முதலியவை முக்கிய கிராம்பு உற்பத்தி நாடுகளாகத் திகழ்ந்தன. கிராம்பு உற்பத்தியில் டான்சானியா (பெம்பா பகுதி} கிராம்பு 663 வை முதலிடத்தை வகிக்கிறது. இந்தோனேசியா. மடகாஸ்கர், மலேசியா, பெளாங்க், செய்செல்லஸ், மொரிஷியஸ், இலங்கை, இந்தியா ஆகியவை கிராம்பு உற்பத்தி செய்யும் நாடுகளாகும். இந்தோ ளேசியாதான் கிராம்பைப் பெருமளவில் பயன் படுத்தும் நாடாகும். இந்தியாவிற்கு மொரிசியஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப் படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி (குற்றாலம்) நீலகிரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளைகிறது. கிராம்பு ஈரப்பசை மிகுந்த மிதவெப்பம் உள்ள பகுதிகளில் நன்கு விளைகிறது. ஆழமான வளமிகுந்த லைமட்கு நிறைந்த களிச்சேற்று வண்டல் மண்ணைச் சாகுபடிக்குப் பயன்படுத்தலாம். இருந்த கிராம்பு (Syzysium aromaticum)