664 கிராம்பு
664 கிராம்பு போதும் காடுவளர்ப்பிற்கேற்ற களிமண் கலந்த வண்டல்தான் இதன் வளர்ச்சிக்குச் சிறந்ததாகும். கிராம்புத் தோட்டங்கள் வடிகால் வசதி உடையன வாக இருத்தல் மிகவும் இன்றியமையாதது. நீர் தேங்கி இருந்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. பெருமளவு கிராம்பு தரை மட்டத்திலிருந்து 300 மீ உயரத்திற்குள் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் 1500 முதல் 3000மிமீ மழை பொழியும் இடங்களிலும் இந்தோனேசியாவில் 2,200-3600 மிமீ மழை பொழியம் இடங்களிலும் இது நன்கு விளைகிறது. கிராம்பை அறுவடை செய்யும்போதும் உலர்த்தும் போதும் வறட்சியான சூழ்நிலை இருத்தல் தேவை. புயல் காற்று விளைச்சலைப் பாதிக்கும். இளஞ்செடிப் பருவத்தில் நிழல் அமைத்தல் வேண்டும். காற்றுத் தடை வேலி அமைத்தல் காற்றினால் அழிவைக் குறைக்கும். வேண்டும். 18 - 24 மாத வயதுடைய நாற்றுகள் நடப்படுகின்றன. மற்றொரு முறையில் விதைகளை நேரடியாக மூங்கில் கூடைகளிலோ மண் தொட்டி களிலோ மண் ஊடகத்தில் ஊன்றி நிழலில் வைத்து நீர் ஊற்றி வளர்த்து 30 கெமீ உயரம் வந்ததும் நடலாம். கிராம்பில் வெளியிடப்பட்ட வகை GT GET எதுவும் இல்லை. ஆனால் மரத்தின் வடிவம் (நெட்டை, படரும் வகை), காய்க்கும் தன்மை. பலன் தரும் பருவம், விளைச்சல், கிராம்பின் நிறம், வடிவம் மற்றும் அதன் அளவுகளில் வேறுபாடுள்ள பல வகை உள்ளன. கிராம்பு சாகுபடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்திலிருந்து மரம் செடி கொடிகளை அகற்றிச் 75x75x75 சமப்படுத்தி 6 - 7 மீ இடைவெளியில் ஏற்படும் கிராம்பு விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மரத்திலேயே நன்கு முதிர்ந்து கீழே விழுந்த கனிகளிலிருந்து விதைகளைச் சேகரித்து நாற்றங்கால்களில் ஆகஸ்ட் -அக்ட்டோபர் மாதங் களில் விதைப்பர். கனிகளை ஓர் இரவு நேரம் நீரில் ஊற வைத்துப் பின் தோலை நீக்கி விதை களைத் பிரித்தெடுப்பது வழக்கம். இந்தக் கனிகளை நேரடியாகவே நாற்றங்கால் களில் விதைக்கலாம். ஆனால் தோல் நீக்கப்பட்ட கனிகள் (விதைகள்) பெருமளவில் முளைப்புத்தன் மையைக் கொண்டிருக்கும். தோல் நீக்கிய கனிகளை உடனே விதைக்கவேண்டும். இல்லையேல் முளைப்புத் திறன் குறைந்துவிடும். சாதாரணமாகக் கிராம்பு விதைகள் 70% அளவே முளைக்கின்றன. ஒரே வகையான இளஞ்சிவப்பு நிறமுடைய முளைவேர் கொண்ட விதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாற்றங் காவில் மேட்டுப்பாத்திகளில் வரிசையாக 12-15 செ.மீ. இடைவெளி விட்டு 2.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படும். அறுவடை விதைகள் செய்யப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் முளைப்புத் தன்மையை இழந்து விடுவதால் அவற்றை உடனே நாற்றங்காலில் முளைக்கவைக்க வேண்டும். பொதுவாக வளமான இலைமட்கு மிகுந்த நிழற்பாங்கான நிலங்களில் 3 × 1 மீ அளவுள்ள பாத்திகளில் நாற்றங்கால்கள் அமைக்கப்படுகின்றன. விதைகள் இரண்டாம் வாரத் திலிருந்து முளைக்கத் தொடங்கி ஐந்து வாரங்களில் முளைத்து மேலே வரும்வரை நாள்தோறும் நீர் ஊற்ற வேண்டும். முளைத்த மூன்று மாதத்திற்குப் பின் நாற்றங்காலில் ஆறுமாதம் வைத்திருந்து கன்று களைப் பிடுங்கித் தொழுஉரம், கரம்பை மண், மணல் நிரம்பிய கறுப்புநிறப் பாலிதீன் பைகளிலோ மண் தொட்டிகளிலோ மூங்கில் கூடைகளிலோ செங்குத் தாக நட்டு நாள்தோறும் நீர் ஊற்றி நிழலில் வைத்து 30 செ.மீ உயரம் வரும்வரை வளர்க்க கெமீ அளவுள்ள குழிகளைத் தோண்டி அவற்றில் தாழுஉரம், சரளைமண், மேல்மண் முதலியவற்றை இட்டு நிரப்பவேண்டும். கிராம்புக் கன்றுகளை ஜூன், லை அல்வது அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். பிற பயிர்களுடன் சாகுபடி செய்யப்படும்போது சற்றுக் கூடுதலான இடைவெளி தரப்படுகிறது. முதலில் கன்றுகள் நீர் ஊற்றி வளர்க் கப்படும். இளஞ்செடிகளை வெயிலின் கொடுமை யிலிருந்து பாதுகாக்கத் தென்னை, பனை ஓலைகளில் நிழல் அமைத்துத் தரவேண்டும். ஒட்டு முறையிலும் இனப்பெருக்கம் செய்யலாம். தொடக்க காலத்தில் நிழல் கொடுத்து வளர்ப்பதற்கு வாழை, கல்யாண முருங்கை ஆகிய மரங்கள் நடப்படுகின்றன. தனிப் பயிராகச் சாகுபடி செய்யப்படும் கிராம்பு தென்னிந்தி யாவில் தென்னை, பாக்கு, காப்பித் தோப்புகளில் ஊடுபயிராகப் பெருமளவில் சாகுபடி செய்யப்படு கிறது. சுவாத்து முறையில் அடிப்பகுதியில் மிகுதியான இளைகளை உண்டாக்க இயலுவதில்லை. ஆனால் சிலசமயங்களில் கிளைகளை வெட்டி நெருக்க மில்லாமல் வைத்திருப்பதுண்டு. நோய், பூச்சி தாக்கிய உலர்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது வழக்கம்.
. பூச்சி, நோய்கள். கிராம்பைத் தாக்கும் நோய் களுள் இளஞ்செடி வாடல் (seedling wilt) இலை யழுகல் (leaf rot) நுனிக்கருகல் முக்கியமானவை. இளஞ்செடி வாடல் நோயுற்ற செடி வேரிலிருந்து சிலிண்ட்ரோகிளாடியம் ஃபியூசேரியம், கொல்லிட் டோட்ரைகம் முதலிய பூசணங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. நோயுற்ற செடியின் இலைகள் வாடி, தொங்கிய பின் செடி இறந்து விடுகிறது. இந்த நோயால் 5-40% கன்றுகள் அழிந்துவிடுகின்றன. வளர்ந்த மரத்திலும் கன்றுகளிலும் உள்ள லை களில் அழுகல் நோய் உண்டாகிறது. இந்த நோயில் இலை ஓரத்தில் கருமையான புள்ளி உண்டாகி, பின் முழு இலைக்கும் பரவி அழுகிவிடும். இந்த நோயைச் சிலிண்ட்ரோகிளாடியம் குவின் கிசெப் டேட்டம் (Cylindrocladium quingulseptatum) என்னும்