கிரானைட் 669
பிளண்டும் உள்ளன. பயோடைட், கார்டியரைட் ஆகிய கனிமங்களும் வேறுசில சமயங்களில் அரிதாகச் சிறிய அளவில் கிரானுலைட் இனப் பாறைகளில் இருக்கக் காணலாம். பிரெஞ்சு மொழியில் லெப்டினைட் என்று கூறப் படும் பாறையும், ஸ்கான்டினேவியன் மொழியில் லெப்டைட் எனப்படும் பாறையும் கிரானுலைட்டை ஒத்த பாறைகளே ஆகும். மேற்கூறிய பாறைகள் கிரானுலைட் பாறையிலிருந்து மிகச் சிறிதே வேறு பாடு உடையன. . 1 கிரானுலைட் பாறை பெரும்பாலும் ஆர்க்கேயன் (ஊழி) காலப்பாறையாக உலகின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இப்பாறை தென் இந்தியாவிலும் மேற்கு ஆஃபிரிக்கா, கனடா அண்டார்ட்டிக்கா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. ஸ்காட்லாந்தின் வட - மேற்குப் பகுதியில் காணப்படும் லெவிஷியன்- நைஸ் என்னும் பாறைகளும் கிரானுலைட் பாறை களேயாம். ல.வைத்திலிங்கம் on Coorg). A.V, Milovsky, Mineralogy and Petro- graphy, First Edition, Mir Publishers, Moscow, 1982. கிரானைட் இது ஓர் அனற்பாறையாகும். இப்பாறை வெளிறிய நிறத்தில் காணப்படுகிறது. இப்பாறையிலுள்ள கனிமங்கள் எளிதில் புலனாகக்கூடிய பெரிய துகள் களாக ஏறத்தாழச் சம அளவினவாக உள்ளன. புவியின் அதிக ஆழத்தில் நிலவக்கூடிய அதிக வெப்ப அழுத்தம் உள்ள சூழ்நிலையில் பாறைக் குழம்பு உறைந்து கெட்டியாவதால் இப்பாறை தோன்றியது. ஆகையால் இதை ஆழ்நிலை அனற் பாறை எனக் குறிப்பிடுவர். கிரானைட் (granite) பாறைகளில் சிலிக்கான் டை ஆக்சைடு அதிகமாக 66%க்கும் உள்ளது. ஆகையால் கிரானைட், அனற்பாறைகளில் அமில- அனற்பாறை பிரிவைச் என்னும் சேர்ந்த தாகும். கிரானைட்டில் குவார்ட்ஸும், ஃபெல்ஸ்பாரும் பெருமளவில் உள்ளன. இவை இரண்டும் கிரானைட் பாறையின் முக்கிய கனிமங்கள் ஆகும். இப்பாறை யில் பயோடைட் என்னும் கறுப்பு அபிரகமும், ஹார்ன்பிளண்டும் குறைந்த அளவில் காணப்படும். மேக்னடைட், ஃபிர்ஹோடைட், இரும்பு -ஆக்சைடு, அப்படைட், சிர்க்கான் முதலிய கனிமங்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன. கிரானைட்டில் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் ஆகிய இரண்டு கனிமங்களுக்கும் அடுத்ததாகப் பயோடைட் கிரானைட் 669 இருந்தால், அதை பயோடைட்-கிரானைட் என்றும் ஹார்ன்பிளண்டு இருந்தால், அதை ஹார்ன்பிளண்டு கிரானைட் என்றும் குறிப்பிடுவர். கிரானைட் பாறையில் குறைந்தது 10% குவார்ட்ஸ் காணப்படுகிறது. இப்பாறையில் காணப் படும் ஃபெல்ஸ்பார். வகுப்பைச் சேர்ந்த கனிமங்களில் ஆர்த்தோகிளேஸ் (பொட்டாசியம் ஃபெல்ஸ்பார்), சோடியம் அதிகமாக உள்ள பிளஜியோகிளேஸ் ஃபெல்ஸ்பார் ஆகியவை உள்ளன. இப்பாறையில் ருக்கும் மொத்த ஃபெல்ஸ்பார் கனிமங்களில் மூன் றில் இரண்டு. பங்குக்கும் அதிகமாக ஆர்த்தோகிளேஸ் ள்ளது. போது கிரானைட் பாறையை நுண்னோக்கியில் பார்க்கும் மேக்னடைட் அப்படைட், சிர்க்கான் ஹார்ன்பிளண்ட், பிளஜியோகிளேஸ் ஆகிய கனிமங் கள் நிறை வடிவுத் துகள்களாக உள்ளன. ஆர்த் தோகிளேஸ் குறை வடிவத் துகள்களாகக் காணப் படுகிறது. குவார்ட்ஸ் - துகள்கள் ஒழுங்கற்று வடி விலாதனவாக உள்ளன. னட், கிரானைட்டைப் பார்ஃபைரிட்டிக் - கிரானை முடைவு - கிரானைட், கார-கிரானைட், இளஞ்சிவப்பு- கிரானைட் எனப் பல பிரிவாக வகைப்படுத்தலாம். கிரானைட்டை ஒத்த ஆனால் நுண்ணிய துகள் களாலாகிய பாறைகள் ரயோலைட், ஆப்ஸீடியன் எனப்படுகின்றன. கிரானைட் என்னும் சொல்லைப் பொறியியலார் கருங்கல் என்னும் பொருளில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். கிரானைட்டாக்கம். கிரானைட் தோன்றிய விதங் களையே கிரானைட் ஆக்கம் என்பர். கிரானைட் டாக்கம் இயற்கையில் பெருமளவு நிகழ்வதாகும். பெரும்பாலும் மலைத்தோற்றவியக்கப் பகுதிகளில் வ்வியக்கம் நடைபெறும். அப்பகுதிகளில் பாறைகள் உருமாற்றமடையும் காலத்தில் இவ்வியக்கம் உடன் நிகழ்கிறது. அடுக்குப் பாறையிலுள்ள கனிமங்கள் தம்முள் மாறியமைவதாலும் அவை சிதைந்து மீண்டும் படிகங்களாக வளர்வதாலும் பாறையின் மொத்த வேதியலடக்கம் மாற்றமடைந்து கிரானைட் பாறை களாக மாறுவதற்குத் தேவையான வேதியலடக் கத்தைப் பெறுகின்றன. இவ்வாறாக அடுக்குப் பாறைகள் கிரானைட்டாக மாறும்போது, பாறைக் குழம்பிலிருந்து உண்டான கிரானைட்டுப் பாறை களிலிருந்து அவற்றை வேறுபடுத்தி இனம் கண்டு பிடித்தல் மிகவும் கடினம். இயற்கையான ஒரு வகையான பாறை கிரானைட்டாக மாறியபின் அதனிடையே கிரானைட்டுகளின் இயல்புகளைத் தவிர பிற வேறுபாடுகளைக் காண்பதரிது. அனற் பாறை ஊடுருவல்களைச் சுற்றியுள்ள சந்திவிளிம்புப் பாறைகள் ஓரளவு உருமாற்றமடைந்து சிறிய அளவில்