பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பூரவல்லிச் செடி 49

மலர் மகரந்தம் அல்லி வட்டம் சூல்பை சூல கம் கிளை கற்பூரவல்லிச் செடி 49 கற்பூரவல்லிச் செடி வடிவமாகவும் சிறிய இழைகளுடனும் இருக்கும்.. முழுமையானது; இது புல்லிக்குழலின் வாய்ப்பகுதியை அடைத்துக் கொண்டிருக்கும். கீழ் உதடு முனை மழுங்கியும் அதன் நுனி காகிதம் போன்று மெல்லிய மயிருடனும் பின்பக்கம் வளைவுற்றும் இருக்கும். அல்லி இதழ்கள் 2 உதடால் ஆனவை, வெளிர் ஊதா நிறமானவை. மென்மையான 1 செ.மீ. நீள மான சிறுமயிர் காணப்படும். கீழ்ப்பகுதியில் அல்லிக் குழல் குறுகியிருக்கும். 5X1.5 மி.மீ. அளவிலிருக்கும். குழல் 5 மி.மீ. நீளத்தில் முனை மழுங்கியும்

5 கதுப்புகளைக் கொண்டுமிருக்கும். முழுமையானது. கீழுதடு 4.0 மேலுதடு 4.5 மி.மீ. அளவானது. சற்றுக் கூரிய நுனியையுடையது.குழல் மென்மையானது. நான்கு மகரந்தத்தாள்கள் ஏற்றத் தாழ்வானவை. இவை 3 மற்றும் 4 மி.மீ. முடையவை. மகரந்தக் கம்பிகள் பிரிந்தவை. மகரந் தப்பைகள் 0.5 மி.மீ. வட்டத் அளவுடையவை. உயர தட்டு மடலாயிருக்கும். சூற்பை நான்கு பிரிவானது. 1.5 மி.மீ. அளவானது. சூலகத் தண்டு இரு பிள வானது, 1.5 மி.மீ. நீளமானது; கனி 1.25 மி.மீ. விட்டமுடைய முட்டை போன்ற வடிவுடைய சிறு கனிகள் கொண்ட உலர்கனி. இது வழவழப்பாகவும் பளபளப்பாகவும் பழுப்பு நிறமாகவும் உள்ளது. அடித் தழும்பு சிறியது. கனிகள் டிசம்பர் மே மாதங்களில் தோன்றும். பொருளாதாரப் பயன்கள். ஓமம் அல்லது கர்ப்பூரம் போன்ற மணமுள்ளதும் தடிப்பானதும் எளிதில் கசக்கக் கூடியதும் சாறு மிகுந்துள்ளதுமான இதன் இலையைப் பச்சையாகவே வோ பிட்டுப்போல அவித்தோ பிழிந்த சாற்றைச் சர்க்கரை அல்லது கற்கண்டுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, இருமல், மாந்தம் முதலியவை தீரும். இந்தச் சாற்றில் கோரோசனை மாத்திரையை இழைத்தும் புகட்டுவ துண்டு. இது தென்னிந்தியாவில் குழந்தைகளின் இருமல் மற்றும் சளியைப் போக்கும் சிறந்த மருந்துச் செடி. இலையை மோர்க்குழம்பில் போட்டால் அதன் மணமும் சுவையும் குணமும் மிகும். வீட்டுத் தோட்டங்களில் வைத்து வளர்க்கக் கூடிய பயனுள்ள சிறந்த மூலிகைகளில் இது ஒன்று. புதிய இலைச் சாறு குளிர்ச்சியைத் தரும். இலைச்சாற்றுடன் சர்க்கரை நல்லெண்ணெய் கலந்து தலைக்குக் குளிர்ச்சியூட்டுவதற்குத் தடவலாம். கோ.அர்ச்சுணன் நூலோதி. K. R. Kirtikar and B.D. Basu, Indian Medicinal Plants, Vol.3, Bishen Mahendra Pal Singh, Dehra Dun, 1980. Singh