பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரரனோடயோரைட்‌ 671

புவியாழத்தில் ஒன்றிற்கொன்று குறுக்கிடும் அமைப்புகளை உடைய பிளவுத் தளங்களில் ஏற்படும் இழுவிசையால் உருமாறிய பாறைத் துண்டங்களின் ஒருபகுதி உருகிப் பாறைத் துண்டங்ளைச் சூழ்ந்துறை வதால் உருகிய குழம்புக் கலவைப்பாறை உண்டா கும். இது தீவிர கிரானைட்டாக்க வினைகளின்போது நிகழும், இத்தகைய கலவைப் பாறைகளில் உருமாறிய பாறைகளும் பாறைக்குழம்பால் உண்டான பகுதி களும் ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படும். மேலும் குறிப்பிடத்தக்க சில தனிமங்களின் மாற்றத்தால் உரு மாறிய பாறையிலுள்ள சில அடுக்குகள் கிரானைட் நைஸ்களாகவோ அனற்பாறைகளாகவோ மாறுகின் றன. தீவிர உருமாற்ற இயக்கத்தின்போது பாறைகள் உருகுவதால் கார சிலிக்கா பொருள்களைக் கொண்ட உருக்கக் குழம்புக் கரைசல் பாறையிலிருந்து வெளியேறிப் பிளவுகளிலும் பாறை இடுக்குகளிலும் சின்னஞ்சிறு அனற்பாறைக் கீற்றுகளாகவும், கொடி களாகவும் உருமாறிய பாறைகளிடையே பரவலாக உறைவதால் உருக்கக் குழம்புக் கலவைப்பாறைகள் உண்டாகின்றன. இவ்வாறு இப்பாறைகள் உண் டாகும்போது, பிளவுகளிடையேயும் இடுக்குகளிடை யேயும் உருகி நிற்கும் காரைக் குழம்பு, பாறையாக இறுகுமுன் பாறைகள் அழுத்தப்பட்டுக் குழம்பு பிதுக்கப்பட்டால் பிதுங்கி பிதுங்கி வெளியேறிய பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பின்னர் தனித்த அனற் பாறைக் கிரானைட்டாகத் தோன்றுகிறது.சில சமயங்களில் குளிர்ந்த பாறைக் குழம்பு தன்னுள் அடக்கிய வேற்றுப்பாறைத் துண்டுகளை அல்லது தன்னைச் சூழ்ந்துள்ள பிற. பாறைகளை முற்றிலும் தன்மயப்படுத்தி அவற்றைப் பாறைக் குழம்பால் உண்டான தோற்றத்தைப் பெறச்செய்து கிரானைட் பாறைகளாகவும் மாற்றலாம். இரா. இராமசாமி இல. வைத்திலிங்கம் நூலோதி.H.H. Read, The Granite controversy. Murpy Ltd., London, 1957; T. F. W. Barth Theoretical petrology, Wiley Eastern Ltd, New York, 1952. கிரானோடயோரைட் து பெரும் துகள்களாலான அமில அனற் பாறை வகையைச்சேர்ந்தது. இப்பாறை வகையில் குவார்ட்ஸ் கனிமம் 20%-40% வரையிலும், கால்சிச்-சோடிக் ஃபெல்ஸ்பார்ஸ், இரும்பு மக்னீசியக் கனிமங்களில் ஹார்ன்பிளண்ட், பயோடைட் முதலிய கனி மங்கள் மிகுதியாகவும் காணப்படும். சிறிய அளவில் காரஃபெல்ஸ்பாரும் காணப்படலாம். இப்பாறையில் ஸ்பீன், அபடைட், மேக்னடைட் போன்றவை முக்கிய அருகிய கனிமங்களாக அமையும்போது இக்காரஃபெல் கிரானோடயோரைட் 671 ஸ்பார் காணப்படும். கிரானோடயோரைட் குறை சதவீத சிலிக்காவாலும், அதிக கால்சியம், மக்னீசியம் உட்செறிவாலும் கிரானைட் பாறையிலிருந்து வேறு படும். நுண்இழைமை. இதன்நுண் இழைமை கிரானைட் பாறையின் நுண் ழைமையைப் போன்றது. ஆனால் இரு வளர் கனிம நுண் இழைமை (graphic texture) தவிர ஏறக்குறையக் கிரானைட்டின் நுண் இழைமைத் தன்மையைப் பெற்றிருக்கும். கனிமப் படிகங்கள் புலனாகும் தன்மையனவாகவும் (planeric (phaneric) ஒரே அளவுடைய - படிகங்களால் ஆனவையாகவும் (equigr- anular) உள்ளன. இப்படிக அளவு சில பாறைகளில் சிறியதாகவும். சிலவற்றில் பெரியதாகவும் இருப்ப தைக் காணலாம். தோற்றம். இயற்கையாகத் தோன்றிய பாறைக் குழம்பு (magma) குளிர்ந்து உண்டான பாறை வகை களில் இப்பாறையும் ஒன்று ஆகும். இப்பாறை உள் நுழைவு வகைப்பாறையாக (intrusive) அமைகிறது. இந்த உள் நுழைவு அனற்பாறை மிகு ஆழத்தில் அமைவதால் ஆழ் நிலைப்பாறையாகவும் காணப்படு கிறது. இப்பாறை பேத்தோலித் என்னும் ஆழ்நில உள் நுழை வடிவ அமைப்புப் பெற்றுக் காணப்படும். இப்பேத்தோலித்தின் அடித்தரை எதுவும் காணும் ஆழத்தில் இல்லை. இப்பாறை எப்போதும் கிரானைட் பாறையோடு சேர்ந்து காணப்படும். குவார்ட்ஸ் கனிம உட்செறிவு குறையும்போது கிரானோடயோரைட், குவார்ட்ஸ் டயோரைட்டாகவும் (டோனோலைட்) பின்னர் டயோரைட் பாறையாகவும் மாறுகிறது. அமில அனற்பாறை வகைகளில் பல பாறையின் பெயர்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடக் கூடியதாகும். எ.கா: பல டோனோலைட் ப பாறைகள் கிரானோடயோரைட்டுகள் என்றும், ஏறக்குறைய அனைத்து ஹார்ன்பிளண்டு பயோடைட், கிரானை பாறைகள், கிரானோடயோரைட் என்றும் குறிப் பிடப்படுகின்றன. என் று பல பெரிய பேத்தோலித் துகள் உள் நுழைவு. கிரானைட் உட்செறிவைக் கொண்டுள்ளது விவரித்தாலும் அவை உண்மையில் கிரானோடயோ ரைட்டின் உட்செறிவைக் கொண்டுள்ளன. கிரானோ டயோரைட்டின் சமவெளி உமிழ் அல்லது எரிமலைப் பாறை டேசைட் ஆகும். அதாவது அவற்றை நுண் கிரானோடயோரைட் (micro granodiorite) எனலாம். அ.வே.உடையனபிள்ளை நூலோதி. A.V. Milovsky, Mineralogy & Petro graphy, First Edition, Mir Publishers, Moscow, 1982. கிரிக், ஃபிரான்சிஸ் ஹாரி காம்ப்ட்டன் இங்கிலாந்து அறிவியலாரான இவர் மாரிஸ் ஹெச். எப். வில்கின்ஸ் என்பாருடனும் ஜேம்ஸ்