678 கிரீன் சார்புகள்
678 கிரீன் சார்புகள் மாற்றுக் கருவி (switching device) கிரியோட்ரான் எனப்படும். முக்கியமாக இது கணிப்பொறிகளில் பயன்படுகிறது. தற்காலத்தில் புழையிடு (tunnelling) வகைக் கிரியோட்ரான்களே வழக்கத்தில் உள்ளன. இவற்றில் ஒரு ஜோசப்சன் சந்தி (Josephson junction) அடிப்படை உறுப்பாக அமைந்துள்ளது. மிக எளிமை யான ஒரு கிரியோட்ரானில் காரியம் போன்ற மிகு மின் கடத்தும் தன்மையுள்ள ஒரு பொரு ருளாலான இரண்டு மின்முனைகளும் அவற்றிற்கு இடையில் ஏறத்தாழ பத்து அணு விட்டங்களே தடிமனுள்ள ஒரு மின் கடத்தாப் படலமும் அமைந்திருக்கும். மின் முனைகளுக்கு மிகு மின் கடத்தும் தன்மையை உண்டாக்குவதற்கு இந்தக் கருவியைத் தனிபூஜ்ய (absolute zero) வெப்பநிலைக்குமேல் ஓரிரு பாகை வரை குளிரச் செய்ய வேண்டும். உள்ளன. மின் புழையிடு கிரியோட்ரானில் மின்தடையுள்ளது, மின் தடையில்லாதது என இரு நிலைகள் அவற்றை முறையே மாற்றியின் பாய்நிலை (on), மின்பாயா நிலை (off) ஆக வைத்துக் கொள்ளலாம். பாய் நிலையிலிருந்து பாயா நிலைக்கு மாறுவது, சந்திக்கு மேல் உள்ள ஓர் ஆளுகைக் கடத்தி (control line) வழியாக மின்னோட்டதைச் செலுத்துவதன் மூலம் தோற்று விக்கப்படுகிற ஒரு காந்தப் புலத்தால் நிறை வேற்றப்படுகிறது. இந்தக் கருவி சில பைகோ நொடி களுக்குள் (pico seconds) மின் பாய் நிலையை எட்டி மின்சாரமே விடும். இதற்குச் சில மைக்ரோவாட் செலவாகும். இப் பண்புகள் காரணமாக இந்தக் கணிப்பொறிகளுக்கு கருவி, ஏற்ற மாற்றியாக விரும்பிப் பொருத்தப்படுகிறது. அது வேறு எந்தக் கருவியாலும் எட்ட முடியாத அளவுக்குத் திறமை யுடன் செயல்படுகிறது. -கே.என். ராமச்சந்திரன் நூலோதி. W. Landee, C. Davis, and P. Albrecht, Electronics Designers Hand Book, Second Edition, McGraw-Hill Book Company, New York, 1977. பெரிய பொதுவாக, கிரீசன் அனற்பாறைத் தொகுப்புக்கு மிக அருகில் காணப்படும். இது நீள வாட்டில் கனமான பட்டைகளாகவும், மெல்லிய நுண் வரிகளாகவும், நரம்புகளாகவும் காணப்படும். பெரும்பாலான கிரீசன் பாறைகள் குவார்ட்ஸ்- அபிரகம் கனிமங்களைக் கொண்டவையாக இருக்கும். கிரானைட் பாறையில் உள்ள ஃபெல்ஸ்பார் கனிமம். கிரீசனிங் நிகழ்வின்போது, லித்தியன் அபிரகமாக முழுதும் மாறிவிடும். கிரீசனிங் நிகழ்ச்சியின்போது மஸ்கோவைட், ஜின்வால்டைட் மற்றும் நீர்மக் கனி மங்கள், புஷ்பராகம் என்னும் கனிமம் இதனுடன் எப்போதும் இணைந்திருக்கும். சில துணைக் கனி மங்களாக டூர்மலீன், காஸிட்டரைட், உல்ப்ஃரமைட், ரூடைல், ஃபுளோரைட் ஆகியவையும் ணைந் திருக்கும். கிரீசனுக்குச் சான்றாக, கார்ன்வால், சாக்சோனி, டாஸ்மேனியா ஆகிய இடங்களில் உள்ள வெள்ளீய நரம்பு வரிகளைக் (tin-veins) கொள்ளலாம். இங்கு, குவார்ட்ஸ் முதன்மை வரிக் கல்லாகக் காணப்படும். இதனுடன் போரான் அல்லது ஃபுளோரின் கனிமங் களான ஃபுளோர்ஸ்பார், புஷ்பராகம், டூர்மலீன் ஆக்சி னைட், அப்படைட ஆகியவையும் ணைந்து காணப்படுகின்றன. கிரானைட்டில் உள்ள ஃபெல்ஸ்பார் கனிமம் பாதிக்கப்படும்.இந்நிகழ்வின்போது, வளிமங்களால் கயோலின் கனிமம் உருவா கிறது. இதனுடன் துணைக் கனிமங்களாகப் போரான், ஃபுளோரின், கார்பன் தோன்று டைஆக்சைடு ஆகியவையும் கின்றன. கார்ன்வாலில் காணப்படும் சீனக் களிமண்ணும். மேற்கு அமெரிக்காவில் நுண்துகள் படிவுப் பாறை யுடன் இணைந்து காணப்படும் செம்புப் படிவுகளும் கிரீசனிங் நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டுகளாகும். எஸ். சுதர்சன் நூலோதி. L.G.Berry & B. Mason, Mineralogy. Second Edition, CBS Publishers & Distributors. New Delhi, 1985. கிரீசன் . து கிரானைட் அனற்பாறையின் ஒரு வகை ஆகும். சுற்றிலும் பக்கவாட்டில் அமைந்துள்ள பல்வேறு பாறைகள் சிற்சில சமயங்களில் புவியின் உள் ஓட்டில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் பாதிக்கப்படும் போதும், எளிதில் ஆவியாகும் பொருள்களால் பாதிக்கப்படும்போதும் இதனுள்ளே சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இவ்வாறு மாற்றப்பட்ட, மாறுபட்ட பாறை கிரீசன் (greisen) எனப்படும். இந்நிகழ்ச்சிக்குக் கிரீசனிங் (greisening) என்று பெயர். கிரீன் சார்புகள் கணிதப் பகுப்பாய்வு முறையில் மின்சாரம், காந்தப் புலம் ஆகியவற்றின் கோட்பாட்டுத் தீர்வுகளுக்கான வழிகளை 1828 இல் ஜார்ஜ் கிரீன் வெளியிட்டார். இருப்பு விசை (potential) எனும் சொல்லை உரு வாக்கியவரும் இவரே. இவருடைய ஏனைய ஆய்வுப் புலங்களாவன: நீர்மங்களின் சீர்நிலை விதிகள் (equilibrium laws), n -பரிமாண வெளிகளில் ஈர்ப்பு