பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கற்றாழை (சித்த மருத்துவம்‌)

50 கற்றாழை (சித்த மருத்துவம்) கற்றாழை (சித்த மருத்துவம்) சுற் கற்றாழையை உலர்த்தி முறைப்படி பொடியாகச் செய்து உண்டால் எப்போதும் இளமையாக வலிமை யுடன் வாழலாம். இளமடலுடன் சீரகம், கண்டைச் சேர்த்தரைத்து, இரத்தமும் சளியும் கலந்த கழிச்சலுக்குக் கொடுக்கலாம். மஞ்சள் சிறிது சேர்த்து அரைத்து, தொடக்கப் பிலீக வளர்ச்சிக்கு, 10-20 கிராம் வரையில் கொடுக்கலாம். கற்றாழையின் சோற்றை எடுத்துப் பலமுறை கழுவி அதில் சிறிது படிகாரம் அல்லது சீனாக்கற் கண்டைச் சேர்த்துச் சிறு துண்டில் முடிந்து தொங்க விட அதில் நீர் வடியும். இதைக் கண்களில் விட கண் நோய், கண் சிவப்பு, பார்வைக் குறைவு முதலியன மாறும். இதன் சாற்றை, வெப்பத்தைத் தணிப்பதற் காகும் பற்பச் செந்தூரங்களுக்குத் துணை கொள்ள லாம். பற்பச் செந்தூரம் செய்யவும் உதவும். இதன் சாற்றைக் கொண்டு எண்ணெய், நெய், லேகியம் முதலியனசெய்து மேற்கூறிய நோய்களுக்குக் கொடுக்கலாம். இந்தச் சாற்றை வெதுப்பி மாந்த நோய்களுக்கும், நீர் வேட்கைக்கும் கொடுக்கலாம். வீக்கங்களுக்குப் பூச, அவை தணியும். சிறிது அபினி சேர்த்துத் தலைக்குப் பற்றிடத் தலைநோய் நீங்கும். நல்லெண்ணெய் ஓர் எடையாகக் கலந்து காய்ச்சித் தலையில் தடவி வர உறக்கம் வரும். வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் இவற்றைச் சாற்றுடன் சேர்த்துண்ண நீர்ச்சுருக்கு, உடலரிப்பு, உள்வெட்டை நீங்கும். இச்சாற்றை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துத் தலை மூழ்கிவர மயிர் வளரும்; தூக்கம்வரும். சிற்றாமணக்கெண்ணெய் 350 கிராமில் கற்றாழைச் சோறு 87.5 கிராம் றவைத்து அரைத்து, வெந்தயம் 300 கிராம், சிறிதாக அரிந்த வெள்ளை வெங்காயம் 1 சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி அதைக் காலையிலோ, இரவில் உறங்கும் முன்னரோ 16 மி.லி. சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். கற்றாழைப்பாலைக் கண் இரப்பையில் உண் டாகும் புண்களுக்குத் தடவலாம். இரும்பு அல்லது எஃகு இதனால் நீறாகும். கற்றாழைச் சோற்றில் கடுக்காய்ப் பொடி தூவி வைத்திருந்தால் நீருண்டா கும். அந்த நீரில் திப்பிலியை வறுத்துப் பொடித்த தூள் வெருகடி தூவிக் கொடுக்கப் பிள்ளைகளுக்கு உண்டாகும் நோய் தீரும். காற்றாழைச் சோற்றை ஏழுமுறை கழுவிப் பின்னைக் காயளவெடுத்து அதில் வெருகடி சீனி சர்க்கரையும், ஒரு சிட்டிகை கல்நார் பற்பமும் வைத்துக் காலை, மாலை இருவேளையும் 10 நாள் சாப்பிட, தீராத சூடு, வெள்ளை தீரும். சுற்றாழைச் சோறும், பசும்பாலும் கலந்து காலை, மாலை பின்னைக்காயளவு உண்டுவந்தால் மூலச்சூடு தணியும். விந்து கட்டும். சொறி, சோகை முதலியவை தீரும். வீக்க கற்றாழைச் சோற்றை ஏழுமுறை கழுவி எடுத் துக் கொண்டு ரணம் கண்டு அதற்கு மேல் முண்டாயிருக்கும் ஓர் லிங்கத்தின் மீது இரவு வைத்துக் கட்ட வாடிப் போகும். கற்றாழைச் சருகு. வேம்பின் பட்டை, கடுக்காய், கார்கோலரிசி இவற் றைச் சிதைத்துக் கியாழம் செய்து கொடுக்க இரண் டொரு முறை பேதியாகிக் காய்ச்சல் தணியும். கால் கற்றாழைச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு, முசு முசுக்கைச்சாறு வகைக்கு 251 மி. லி., நல்லெண் ணெய் 2.6 லிட்டர், மதுரம் 35 கிராம் அரைத்துப் போட்டுக் காய்ச்சி முழுகிவரக் காய்ச்சல், எரிச்சல் தீரும். கற்றாழைப் பாலை நீரில் கரைத் துக் கொதிக்க வைத்து, விழுந்து அடிபட்டு வீங்கிய வீக்கம், நடக்க முடியாத வலி, பக்க நோய் இவற் றிற்குப் பற்றிடப் போகும். கற்றாழஞ்சருகு, க ஆலஞ்சருகு. முக்காவேளை வேர், முருங்கை வேர்ப்பட்டை வகைக்கு 105 கிராம், நொச்சி வேர் 140 கிராம் இவற்றை இடித்து 10.4 லிட்டர் நீரில் போட்டு 2.6 லிட்டராக வற்ற வைத்து வேளை ஒன்றிற்கு 250 மி. லி. வீதம் மூன்று வேளை கொடுக்கத் தீரும். கற்றாழஞ்சருகு, முத்தக்காசு, கருணைக்கிழங்கு, மெருகக்கிழங்கு, சுக்கு, சித்திர மூலம், மருட்கிழங்கு, கடுக்காய், பிரண்டை. கொன்றைப்பட்டை, புளிமடற்கிழங்கு, காட்டுக் கருணைக்கிழங்கு இவற்றை ஓர் எடையாகப் பாலில் அவித்துலர்த்தி இடித்துச் சூரணஞ்செய்து, சர்க்கரை கலந்து ஒரு மண்டலங்கொடுக்கத் தீரும். கற்றாழஞ்சோற்றில் கடுக்காயைப் பொடித்துப் போட்டுச் சிறிது நேரம் வைத்திருந்து பிழிந்து வடி கட்டின நீர் 501 மி. லி. பொரித்த வெண்காரம் 3.5 கிராம், பனைவெல்லம் 8:75 கிராம் 8:75 கிராம் சிதைத்துப் போட்டுக் கொடுக்க நீரடைப்பு நீங்கும். சே.பிரேமா கற்றாழை (தாவரவியல்) இது சோற்றுக் கற்றாழை, நார்க்கற்றாழை என் இருவகைப்படும். சோற்றுக்கற்றாழை. இதைச் சிறு கற்றாழை என்றும் கூறுவர். இதன் தாவரப்பெயர் ஆலோ வெரா (Aloe vera) இது லில்லியேசி என்னும் குடும்பத்தைச்