கிரெப்ஸ் சுழற்சி 683
பெயர். மான இறுதிப் பொருள்களான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் ஆகியவையாக மாற்றப்படுகின்றன. இவற்றின் வளர்சிதை மாற்றம் செல்களில் நிகழ்கிறது. சைட்டோப்பிளாசத்தில் குளுக்கோஸ் மூலக்கூறுகள் எம்டன்-மேயர்ஹாஃப் செயல்வழி (Embden Meyerhof pathway) அல்லது குளுக்கோஸ் பகுப்பு எனப்படும் மாற்றங்களை அடை கின்றன. இந்நிகழ்வுகள் செயல்படுவதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆகவே செல்களின் சைட்டோப்பிளா சத்தில் நடைபெறும் இச்செயல்பாட்டிற்குக் காற்றிலி குளுக்கோஸ் பகுப்பு என்று இதன் காரணமாகக் குளுக்கோஸ் மூலக்கூறிலுள்ள மொத்த ஆற்றலில் 5% வெளிப்படுகிறது. இச்செயல்பாட்டின் இறுதியில் தோன்றும் பொருள்கள் சைட்டோப்பிளா சத்திலுள்ள மைட்டோகான்டிரியங்கள் செல் நுண்ணமைப்புகளை அடைந்து, அங்குச்சுழற்சி யாக நடைபெறும் பல மாற்றங்களுக்குள்ளாகின்றன. இந்தச் செயல் வழி வட்டத்திற்குக் கிரெப்ஸ் சு சுழற்சி (Kreb's cycle) என்று பெயர். குளுக்கோஸ் மூலக்கூறில் எஞ்சியுள்ள 95% ஆற்றலும் இச்சுழற்சியில் நடை பெறும் வேதிவினைகளால் வெளிக்கொணரப்பட்டுச் சேர்த்து வைக்கப்படுகிறது. சிறிதளவு ஆற்றல் வெப்ப மாக வெளியேறிச் சில உடற்செயல்கள் நடைபெற உதவுகிறது. இச்செயல்பாட்டில் ஆக்சிஜன் பங்கு பெறுவதால் இது காற்றுள்ள குளுக்கோஸ் பதப்பு எனக் குறிப்பிடப்படுகிறது. என்னும் மிகு ஆற்றல் பாஸ்ஃபேட் பிணைப்புகள். உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள வேதி ஆற்றல் மூலக்கூறின் அணுக்களுக்கு இடையேயுள்ள சக இணைப்புப் பிணைப்புகளில் தேங்கியுள்ளது. வேதிப் பிணைப்புகள், நீராற் பகுப்புற்று உடைக்கப்படும் போது ஏறக்குறைய 3000 கலோரி வெப்பம் உண்டா கிறது. ஒரு மோல் அளவு குளுக்கோஸ் (180 கிராம் குளுக்கோஸ்) செல்களில் இம்முறையில் பதுக்கப்படும் போது 6,86,000 கலோரி ஆற்றல் உண்டாகிறது. இவ்வேதிவினை பின்வருமாறு நடைபெறுகிறது. CH₁,0, CgH]: 0 + 60, → 6H,O + 6C,O + 6,85, Coo கலோரி ஆற்றல் அடுத் செல்களில் இவ்வாற்றல் திடீரென ஒருசேர வெளி யேற்றப்படுவதில்லை. பல்வேறு நிலைகளில் தடுத்துச் சிறிது சிறிதாக வெளிக்கொணரப்படுகிறது. ஓரளவிற்கு வெப்பமாக வெளிப்பட்டது தவிர எஞ்சியது வேதி ஆற்றலாகச் சேர்த்து வைக்கப்படு கிறது. அவ்வாறு சேர்த்து வைப்பதற்கு ஏற்ற அமைப்புகள் மிகு ஆற்றல் பாஸ்ஃபேட் பிணைப்புகள் ஆகும். அடினோசின் மோனோபாஸ்ஃபேட் (AMP), அடினோசின் டைபாஸ்ஃபேட் (ADP), அடினோசின் ட்ரைபாஸ்ஃபேட் (ATP), கிரியேட்டின் ட்ரை யூரிடின் ட்ரைபாஸ்ஃபேட் (UTP), குலானோசின் ட்ரைபாஸ் பேட் (GTP) போன்ற மிகு ஆற்றலுள்ள பாஸ்ஃபேட் கிரெப்ஸ் சுழற்சி 683 மூலக்கூறுகள் செல்களில் காணப்படுகின்றன. எனினும் ATP மூலக்கூறு மட்டுமே ஆற்றலைச் சேர்த்து வைப் பதில் முதல் இடம் பெற்றுள்ளது. கிரெப்ஸ் சுழற்சி இச்சுழற்சி மைட்டோ காண்டிரியம் என்னும் செல் நுண்ணமைப்பில் நடை பெறுகிறது. இதற்குத் தேவையான நொதிகளும் பிற பொருள்களும் மைட்டோகாண்டிரியச் - சாந்தில் (Mitochondrial matrix) காணப்படுகின்றன. குளுக் கோஸ் மூலக்கூறுகள் கிரெப்ஸ் சுழற்சியில் நுழைந்து ஆற்றலாக மாறுவதற்கு முன்னதாக வேறு சில மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. காற்றிலி குளுக் கோஸ் பகுப்பு மூலம் ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு இரண்டு பைரூவிக் அமிலமூலக்கூறுகளாக மாறுகிறது. பைரூவிக் அமில மூலக்கூறு, அசெட்டைல் தொகுதி யோடு இணைந்து அசெட்டைல் இணைநொதி A (coenzyme-A) என்னும் பொருளாக மாறுகிறது. இது கிரெப்ஸ் சுழற்சியில் நுழைந்து இறுதியில் முழுமை யாக ஆக்சிஜனேற்றம் அடைந்து ஆற்றலாகவும். கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகியவையாகவும் மாறு கிறது. குளுக்கோஸ் போன்றே அமினோ அமிலங்கள். கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் கிரெப்ஸ் சுழற்சியில் நுழைந்து ஆற்றலாக மாறுகின்றன. கிரெப்ஸ் சுழற்சியின்போது வெளியேற்றப்படும் ஆற்றல், பாஸ்ஃபேட் பிணைப்புகளை உண்டாக்கப் பயன்படுகிறது.ADPமூலக்கூறுகளுடன் பாஸ்ஃபேட் பிணைப்புகள்இணைவதால்ATPமூலக்கூறுகள் தோன்று கின்றன. இச்செயல் ஆக்சிஜனேற்றச் செயலுடன் இணைந்து நடைபெறுவதால் இதற்கு ஆக்சிஜனேற்ற பெயர். - பாஸ்ஃபரஸ் ஏற்றம் என்று கிரெப்ஸ் சுழற்சியின்போது வேதி வினைகளுக்கு உள்ளாகும் பொருள்களிலிருந்து ஹைட்ரஜன் அயனிகள் (H+) விடுவிக்கப்படுகின்றன. இவை நேரடியாக ஆக்சிஜ னுடன் இணையாமல், பல கடத்தும் அமைப்புகள் மூலம் கடத்தப்பட்டு இறுதியில் அணுநிலை ஆக்சிஜ னுடன் சேர்ந்து நீர் மூலக்கூறாக மாறுகின்றன. நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு (NAD) ஃபிளேவோபுரோட்டீன், இணைநொதி Q சைட்டோகுரோம் b, சைட்டோகுரோம், C சைட்டோகுரோம் C, சைட்டே டாகுரோம் சைட்டேகுரோம் a, என்பவை இந்த மின்னணுக்கடத் தலில் அல்லது மூச்சுத் தொடர் நிகழ்வில் (respiratory chain) பங்கேற்கும் முக்கிய உயிர்வேதிப் பொருள் களாகும். $1, கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை சைட்டோப்பிளா சத்தில் ஆக்கச்சிதை மாற்றமடைந்து அசெட்டைல் தொகுதிகளாக மாறுகின்றன. இவை துணை நொதி A உடன் இணைந்து அசெட்டைல் இணை நொதி -A ஆக மாறிக் கிரெப்ஸ் சுழற்சியில் நுழைகின்றன. அசெட்டைல் இணை நொதி முதலில் ஆக்சலோ