பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரேட்டேசியக்‌ காலம்‌ 687

மத்திய பிரதேசம் முதலான மாநிலங்களில் காணப் படுகின்றன. இமயமலையின் தோற்றத்தோடு தொடர்புடைய மாற்றங்களும் கிரேட்டேசியக் காலத்தில் நிகழ்ந்தன. இந்தியாவின் வடக்கிலிருந்து டெதிஸ் கடல் மேற்கே பலுசிஸ்தானுக்கு அப்பாலும், வேறொரு புறம் அரகன் (பர்மா) பகுதி வரையிலும் நீண்டிருந்தது. இதன் ஒரு பகுதி கிரேட்டேசியக் காலத்தின் பிற் பகுதியில் நர்மதைப் பள்ளத்தாக்கு வரை நீண்டிருந் தது. தெற்கே இருந்து கடல் முந்நீரக இந்தியாவில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையின் சில பகுதி களிலும் அஸ்ஸாமில் சில பகுதிகளிலும் நிலத்தினுள் புகுந்து ஊடுருவியது. அக்காலத்தில் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரியலூர், நினியூர், ஊட்டத்தூர் ஆகிய இடங்களிலும், தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம், வழுதாவூர் ஆ ஆகிய இடங்களிலும், பாண்டிச்சேரியிலும் சடல் இருந்தது. கிரேட்டேசியக் காவ விலங்குகள். கிரேட்டேசியக் காலத்தில் வாழ்ந்த மீன் வகைகளில் சுறா மீன், ரம்பத் தாடைமீன் (saw fish). திருக்கை மீள் (trygon) போன்ற குருத்தெலும்பு மீன்களும், இன்று அழியும் நிலையில் காணப்படும் கைமிரா (chimaera), சீலக்காந்த் (coplacanth ) போன்ற மீன் வகைகளும் குறிப்பிடத்தக்கவை. கிரேட்டேசியக் காலத்திலேயே எலும்பு மீன்களின் படிமலர்ச்சி சிறப்பாக இருந்த தென அறியப்பட்டுள்ளது. நீர்நில வாழ்விகளில் (amphibians) புதை படிவங்கள் மிக அரிதாகக் காணப்பட்டாலும் வால் நீர்நில வாழ்விகளின் (urodeles) தோற்றம் கிரேட்டேசியக் காலத்தில்தான் நிகழ்ந்துள்ளது. ஊர்வனவற்றின் படிமலர்ச்சி கிரேட்டேசியக் காலத்தில்தான் உச்சக் கட்டத்தை அடைந்தது. பல்வேறு னக் கடல் ஆமைகள். துடுப்புப் போன்ற நீந்தும் கால்கள், எடை குறைவான புறச்சட்டகம் போன்ற தகவமைப்புகளைப் பெற்றிருந்தன. கடல் வாழ் ஊர்வனவற்றில் கிரோனோசாரஸ் போன்ற மிகப் பெரிய ஆமைகள் வாழ்ந்திருந்தன. பறக்கும் ஊர்வனவற்றில் ராம்போரிஸ்கஸ், குட்டைவாலு 码出 டீரோடாக்டைல், பற்களற்ற மிகப்பெரிய டெரானோடான் போன்ற புதைபடிவங்கள் படிமலர்ச் சிக்குக் காட்டாக உள்ளன. கிரேட்டேசியக் காலம் என்றவுடன் நினைவுக்கு வருவது டைனோசர் களின் புடிமலர்ச்சியும் அவற்றின் அழிவும் ஆகும். நீர், நில வாழ்க்கைக்கேற்பத் தகவமைப்புகளைப் பெற்றிருந்த அவை உருவத்திலும், அளவிலும் எடையிலும் மிகப்பெரிய விலங்குகளாக வாழ்ந் திருந்தன. ஏறத்தாழ 60-80 அடி வரை நீளமும், 20 அடி வரை உயரமும், 30-80 டன் வரை எடையும் உள்ள டிரன்னோசனாரஸ், அல்லோசாரஸ், புராக்கி யோசாரஸ் போன்றவை அவற்றில் குறிப்பிடத் கிரேட்டேசியக் காலம் 687 தக்கவை. இவை தவிர கடல் பல்லிகளும் முதலை, பல்லி, பாம்புகளின் மூதாதைகளும் புதைபடிவங் களாகக் காணப்படுகின்றன. களான . கிரேட்டேசியப் பறவைகளில், நீர்வாழ் பறவை இக்தியார்னிஸ். ஹெஸ்ப்பெரார்லிஸ் போன்றவை மட்டுமே காணப்படுகின்றன. பாலூட்டி களில் மல்டி டியூபர்குலேட்டுகள் (multi tuberculates), பான்டோதீர்கள் இன்செக்டிவோர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டைனோசார்கள் மற்றும் பறக்கும் ஊர்வன ஆகியவற்றின் அழிவு. மேல்நிலைப் பாலூட்டிகளின் மூதாதைகளான இன் செக்டிவோர்களின் தோற்றம் ஆகியவை கிரேட்டே புதைபடிவ வரலாற்றில் மிக முக்கிய சியக் கால நிகழ்ச்சிகளாகும். . இடையுயிரூழியில் பெருமளவில் வாழ்ந்திருந்த அம்மோனைட்டுகள் கிரேட்டேசியக் காலத்தோடு மறைந்து ஒழிந்தன. கடலில் வாழ்ந்திருந்த ஊர்வன னத்தைச் சேர்ந்த உயிரினங்களில் கடல் ஆமைகள் மட்டுமே கிரேட்டேசியக் காலத்திற்குப் பின்னரும் வாழ்ந்து வருகின்றன. கிரேட்டேசியக் காலத்தில் வாழ்ந்த கடல் ஆமைகள் 3.5 மீட்டர் வரை பெரியன வாக இருந்தன. ஆறு, ஏரி முதலான நீர்நிலைகளில் முதலைகளும் ஆமைகளும் வாழ்ந்தன. இவற்றோடு நிலத்திலும் நீரிலும் வாழும் ஆற்றலுடைய பல உயிரி னங்கள் வாழ்ந்தன. கிரேட்டேசியக் காலத்தில் பல பூக்கும் தாவரங்கள் இருந்தன. க்காலத்தில் பல வகையான பறவை இனங்களும் வாழ்ந்தன.கிரேட் டேசியக் காலத்தின் முடிவில் டைனோசார்கள் மறைந்தொழிந்தன. ஆனால் முதுகெலும்பு உடைய னத்தில் பறவைகள், பாலூட்டிகள் ஆகிய உயிரினங்களும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. ரண்டு கிரேட்டேசியக் காலத்தில் உண்டான படிவுப் பாறைகள் பலவகைப்பட்ட பாறைத் தொகுதிகளைச் சேர்ந்தனவாக இருப்பதைக் காணலாம். மேலும் இக்காலத்தில் தோன்றிய படிவுத் தொகுதிகள் இந்தியாவின் பல இடங்களில் காணப்படுகின்றன. கிரேட்டேசியக்காலத்தில் தோன்றிய பாறைகள் இமய மலையின் வடக்குப் பகுதி, பலுசிஸ்தான். சால்ட்- ரேன்ஜ், பொட்வார், காஷ்மீரம், அஸ்ஸாம், அகமத் நகர், கட்ஜ், நர்மதைப் பள்ளத்தாக்கு, தமிழ்நாடு, பாண்டிச்சேரி முதலான டங்களில் உள்ளன. இந்தியாவை அடுத்துள்ள பர்மா, திபெத் மற்றும் பிற நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்படிவுப்பாறை கள் அவை காணப்படும் இடத்தின் பெயராலும், படிவுகளில் காணப்படும் தொல்லுயிர்ப் பதிவுகளின் பெயராலும் குறிப்பிடப்படுகின்றன. இதனால் இக் காலத்தில் தோன்றிய, வெவ்வேறு டங்களில் உள்ள படிவுத் தொகுதிகள் வெவ்வேறு பெயர்களுடன் வழங்கப்படுவதைக் காணலாம். கிரேட்டேசியக் காலத்தில் உண்டான படிவுப் பாறைகள் இந்தியாவில் வடக்குப் பகுதியில் காணப்