கிரேவேக் 689
ஒரே நிகழ்தகவுடையனவாகும் எல்லா Xi உம் என்பதால் கிடைக்கும். d³ E log L = - n E என்னும் மதிப்பிலிருந்து V (T) > - E எனவும் நிறுவலாம். கிரேவேக் [log] d³ log f(X; 0) de பங்கஜம் கணேசன் இது ஒரு படிவுப்பாறையாகும். இதை மணற்பாறை யின் ஒருவகை எனலாம். இது அழுக்கும் சேறும் கூடிய மணல் இறுகியதால் உண்டான மணற்பாறை யாகும். இப்பாறை சாம்பல் நிறத்தில் காணப்படு கிறது. கிரேவேக் (graywacke) ஒருவகை மணற்பாறை என்று கருதப்பட்டாலும், இது சில தனித்தன்மை களுடன் விளங்குகிறது. மணற்பாறைகளில் காணப் படும் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் ஆகிய கனிமங் களோடு பல பாறைகளிலிருந்து உடைந்து உண்டான தூள்களும், பொடிகளும் இதில் உள்ளன. ப்பாறை யில் மணல் துகள்களுக்கு இடையே ஏனைய பாறை றகளின் தூள்களும் பொடிகளும் ஒட்டுக்காரை யாக உள்ளன. கிரேவேக் என்னும் பாறையை ஒத்த ஆனால் ஒட்டுக்காரை இல்லாத படிவுப்பாறை அர்க் கோஸ் எனப்படும். - கிரேவேக்கில் குவார்ட்ஸும், ஃபெல்ஸ்பாரும் குறிப்பிடத்தக்க கனிமங்களாக உள்ளன. கிரேவேக் பாறையில், பெரிய துகள்களாகக் காணப்படும் கனி மங்களை மூன்று கூறுகளாகக் கூறலாம்; ஆழ்நிலை அனற்பாறைகளின் கனிமங்களாகிய குவார்ட்ஸ். ஃபெல்ஸ்பார், ஆகைட்டு, ஹார்ன்பிளண்ட், செர்ப் பன்டைன் மற்றும் சில இரும்பு -தாதுக்கள் : படிவுப் பாறை மற்றும் தாழ்தர மாற்றுருப்பாறைகளின் துகள்கள் (துணுக்குகள்); இவை எரிமலைப் பாறை களின் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய துகள் சுளால் ஆனவை. ஒரு கிரேவேக் பாறையை எடுத்துப் பார்த்தால் இம்மூன்று பிரிவுகளில் ஏதேனுமொரு பிரிவைச் சேர்ந்த கனிமங்களே பெருமளவில் இருப்பதைக் காணலாம். இந்த கனிமச் சேர்க்கையிலிருந்து கிரேவேக் ஒரு குறிப்பிட்ட வகை மூலப்பாறையி லிருந்து தோன்றாமல் பல்வேறு பாறைகளிலிருந்து தோன்றுகிறது என்பதை அறிய முடிகிறது. இருப் பினும் கனிமங்களின் சேர்க்கையை அடிப்படையாகக் கிரேவேக் 689 கொண்டு நோக்கும்போது கிரேவேக்குகளில் பெரும் பாலானவை ஆழ்நிலை அனற்பாறைகளிலிருந்து உண்டானவை என்பது தெரியவருகிறது. கிரேவேக் பாறைகளில் ஃபெல்ஸ்பார் கனிமத் தைப் பெருமளவில் கொண்டிருப்பவற்றை ஃபெல்ஸ் பார் கிரேவேக் என்பர். குவார்ட்ஸ் கனிமம் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் கிரேவேக்குகளில் ஹார்ன்பிரண்ட் முதலான கனிமங்கள் காணப் படுகின்றன. கிரேவேக்குகளில் படிவுகளில் தோன்றிய கனிமங்கள் சிலவும் காணப்படுகின்றன. படிவுகளில் தோன்றிய கனிமங்களில் பைரைட், கார்பனேட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை மிகச் சிறிய அளவில்தான் இப்பாறையில் காணப்படுகின்றன. கிரேவேக் பாறைகளின் வேதி இயைபை ஆராயும் போது, இப்பாறையின் சில தனித்தன்மைகள் புலனா கின்றன. கிரேவேக்கில் சிலிக்கான் டைஆக்சைடின் அளவு ஏறத்தாழ 65% உள்ளது. இது சாதாரணமாக மணற்பாறைகளில் காணப்படும் சிலிக்கான்டை ஆக்சைடின் அளவைவிடக் குறைவு. ஆனால் அலு மினியம் ஆக்ஸைடு, கால்சியம், சோடியம், பொட்ட சியம் முதலானவை மணற்பாறையில் உள்ளதை விடக் கிரேவேக்கில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வேதி இயைபின் அடிப்படையில் கிரேவேக், மாற்றுருப் பாறைகளில் ஒன்றாகிய பலகைப் பாறையையும். பலவகையான அனற்பாறைகளையும் ஒத்திருக்கிறது. கிரேவேக் பாறைகள் நிலப்பொதியியல் வரலாற் றின் பலகாலங்களில், ஊழிகளில் தோன்றியவை. மிகப் பழமையான தொல் - ஊழியில், ஆர்டோவீஷியன், டிவே வோனியன் மற்றும் கார்பானிஃபெரஸ் காலங்களில் உண்டான படிவுகளாகவும் மீசோசோயிக் ஊழியின் ஜூராசிக், கிரிட்டேஷியஸ் காலப் படிவுகளாகவும், பிளையோசீன் ஊழியில் உண்டான படிவுகளாகவும் கிரேவேக் காணப்படுகிறது. இந்தியாவில் இமய மலைப் பகுதியில் பிளையோசீன் ஊழியின் பிற்பகுதி யில் தோன்றிய படிவுகளாகவும் காணப்படுகிறது. பல கிரேவேக், உலகின் மடிப்புமலைப் பகுதிகளில் தான் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மூலப்பாறையிலிருந்து தோன்றிய படிவுப்பாறை அன்று என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பகுதிகளில் காணப்படும் கிரேவேக் பாறைகளில் பெரும்பாலானவை ஆழ்கடல் நீரில் உண்டானவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் காணப்படும் பிளையோசீன் ஊழிக் காலத்தில் தோன்றிய சிவாலிக் பாறைகளில் ஒன்றா கிய கிரேவேக் கட ற்படிவு அன்று. கிரைசோகொல்லா இல.வைத்திலிங்கம் இது ஒரு நீரேறிய தாமிர சிலிக்கேட் (Cusio, 2H,O) கனிமமாகும். பெரும்பாலும் அரைகுறையான