கற்றாழை (தாவரவியல்) 51
வை சேர்ந்தது. இதில் ஏறத்தாழ 180 இனங்கள் உள்ளன. இவற்றின் தாயகம் ஆஃப்ரிக்காவின் கிழக்கு, தெற்குப் பகுதியாகும். அங்கிருந்து இவற்றில் பல இனங்கள் இந்தியா, கிழக்கிந்திய, கிழக்கிந்திய, மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பாவின் பல பகுதிகள் முதலிய இடங்களுக்கு எடுத்துச் சென்று வளர்க்கப்பட்டுள்ளன. பெரும் பாலான னங்கள் செடிகளானாலும் ஒரு சில மரம் போல வளர்கின்றன. நீரற்ற பாலை, பாறைப் பகுதிகளிலும் வளரும். இலை மெத்தென்றிருக்கும். விளிம்பிலும் நுனியிலும் கூரிய முள்களுண்டு. தண்டு மிகக் குட்டையாக இருப்பதால் லைகள் தரைக்கருகிலேயே படர்ந்திருக்கும். இலை யிலிருந்து கிடைக்கும் சாறு கசப்பும் கெடுநாற்றமும் கொண்டுள்ளமையால் விலங்குகள் உண்பதில்லை. சாற்றைச் சூரிய வெப்பத்தில் அல்லது இளஞ்சூட்டில் காய்ச்சி நீர் வற்றச் செய்து மூசாம்பரம் அல்லது கரிய போளம் என்னும் மருந்து தயாரிப்பர். பல நோய் கார்க்கற்றாழை - செடியும், பூவும் தடித்து கற்றாழை (தாவரவியல்) 51 களுக்கும் இது மருந்தாகும். இலைச் சாறு கண் வலிக்கு ஒற்றடம் கொடுக்கப் பயன்படும். இதை நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தலை முழுகி னால் குளிர்ச்சியாக இருக்கும். இதை நாள்தோறும் தடவத் தலை மயிர் வளரும். கார்க்கற்றாழை. இதை ஆனைக்கற்றாழை, இரயில் கற்றாழை எனவும் குறிப்பிடுவர். அமரில்லிடேசி குடும்பத்தைச் சேர்ந்த இதில் பல இனங்கள் உள்ளன. சிசலினா, அமெரிக்கானா, காண்டலா என்பவை இந்தியாவில் காணப்படும் நார்க்கற்றாழைகளில் மிக முக்கியமானவை. அமெரிக்காவில் வெப்பமண்டலப் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அங்கி ருந்துதான் இவை பிற நாடுகளுக்கு எடுத்துச் சென்று வளர்க்கப்பட்டன என்று தெரிகிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட நார்க்கற்றாழை தற்போது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. தென்னிந்தி யாவில் இரயில் (புகைவண்டி) பாதையின் இரு மருங் கிலும் மிகுதியாகக் காணப்படுவதால் இதை ரெயில் (புகைவண்டி) கற்றாழை என்பர். வேலிகளி லும் இது காணப்படும். மைசூர், கர்நாடகப் பகுதி களில் சிசலினா னம் மிகுதியாகப் பயிர் செய்யப் படுகிறது. சிறு தொழில்களுக்குப் பயன்படும் நார் இரயில் கற்றாழையிலிருந்து கிடைக்கிறது. கற்றாழைச் செடியில் தரை மட்டத்தில் தண்டைச் சுற்றி மடல்கள் நெருக்கமாகக் கிளைக் கின்றன. தண்டிலும் மடலிலும் சாறு மிகுந்திருக்கும். தண்டு கிளைப்பதில்லை. பொதுவாக மடல்கள் சதைப் பற்றுடன் 100-150 செ.மீ. நீளமும். 10-15 செ. மீ. அகலமும் கொண்டவை. ஓரங்களில் முள்களுடையன. மடல்கள் பளபளப்பானவை. பயிர் செய்யும் முறை. மழை குறைவாக உள்ள மேட்டுப் பகுதிகளிலும் சாகுபடிக்குப் பயன்படாத கரடு முரடான தரிசு நிலங்களிலும் நார்க்கற்றாழை நன்கு வளரும். வளம் நிறைந்த மண்ணில் விளையும் இதில் சதைப்பற்று மிகுதியாகி நார் குறைந்துவிடு கிறது என்பதால் மிகுதியாகப் பயிர் செய்வதில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ, கிழக்கு. மத்திய ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளில் இது பெரும் பான்மையாகப் பயிர் செய்யப்படுகிறது. தரையடிக்குருத்து, அடித்தண்டின் ஒட்டுறுப்பு. மலர்க்காம்பின் முடி இவற்றில் ஒன்றை நட்டு இதைப் பயிர் செய்யலாம். இவற்றை நடுவதற்கு முன் நாற் றுப் பாத்தியில் ஓராண்டு வரை வைத்திருக்க வேண் டும். மழைக்காலத் தொடக்கத்தில் 3-31 மீட்டர் இடைவெளி விட்டுப் பெரிய குழிகளிலிட்டு நாற்று களை நடவேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து படர்ந்து கிளைக்கும் வரை நீர் விட்டு, களையெடுக்க