பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 கிரைசோபெரில்‌

690 கிரைசோபெரில் படிக அமைப்புடன் கூடிய துருவாகவும், திண்மங் களாகவும், தூய்மையற்ற நிலையில் உருவாகி வளை முறிவுத்தளத்துடன் கூடிய உடைவுத் தளமாகவும் காணப்படும். கிரைசோகொல்லா (Chrysocoila) சிறிய ஊசி போன்ற படிகங்களாகவும் வளரும். பச்சை அல்லது நீலங்கலந்த பசுமைநிறத்துடன் காணப்படும். சுனிமத்தில் வேற்றுப்பொருள்கள் கலந்திருந்தால் இதன் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கருமை நிறம் வரை மாறுபடும். இதன் கடினத்தன்மை 2-4 பளிங்கு மிளிர்வு கொண்டது. ஒப்பல் அல்லது மெருகுப் பூச்சுக் கட்டுக்கோப்பை உடையது. பெரும்பாலும் மேல்பூச்சாகவோ அடுக்குகளை நிரப்பும் நிரப்பிகளாகவோ அமையும். சில சமயங் உருண்டைப்பிணைவுக் கட்டுக்கோப்பைக் களில் கொண்டிருக்கும். சில கனிமங்கள் மண் போன்றவை. ஒளி கசியக்கூடிய கனிமங்கள் உடையக்கூடியன. இஃது ஓரொளியச்சுக் கனிமம் (+), w = 1.46, p = 1.57 வலிவிழந்த ஒளிவண்ண மாற்றமுடையது. நிற 0 மற்ற திசைப்புலனையும் வெளிறிய நீலப்பச்சையும் கொண்டிருக்கும். வேறுபட்ட இடங்களிலிருந்து கிடைக்கும் கனிமங்களின் ஒளிவிலக்க எண்ணும், ஒளிவியல்புகளும் மிகுதியும் வேறுபடுகின்றன. இதன் நிறம் தாமிர ஆக்சைடு, சிலிக்கா, நீர்கொண்ட கனிமப்பசையால் தோன்றுகிறது. இக்கனிமத்தில் சிலிக்கா 34.3% தாமிர ஆக்சைடு 45.2%. நீர் 20.5% அடங்கியிருக்கும். இத்துடன் சிறிதளவு மாங்கனீஸும் கலந்திருக்கும். கனிமப்பொடி மரகதப் பச்சை நிறத்தில் எரியும். இப்பொடியை மூடிய கண்ணாடிக்குழாயில் சூடேற்ற நீர் வெளிப்படும். கிரைசோகொல்லா ரண்டா எம் நிலைக் கனிமமாகத் தாமிரப் படிவங்களின் மீதுள்ள ஆக்சிஜனேற்றமடைந்த பகுதிகளில் நீர்மட்டத்திற்குச் சற்று மேலாகக் காணப்படும். இதனுடன் மாலகைட், அசூரைட், குப்ரைட், இயற்கைத் தாமிரம், ஏனைய சில் தாமிரக் கனிமங்கள் ஆகியவை சேர்ந்து காணப் படும். நுண்துகள் தன்மைகொண்ட கிரைசோ கொல்லா கார் னூயைட் என்றும், காடான்கைட் என்றும் குறிக்கப்படும். கிப்சைட்டும் கிரைசோகொல்லாவும் கலந்த கலவையாலான கனிமத்திற்குத் திராவர்சேயைட் என்று பெயர். சோவியத் நாட்டில் யூரல் மலைகளி லும்,கார்ன்வால் தாமிரச் சுரங்கங்களிலும், பெல் சியன் காங்கோவிலுள்ள கடான்காவிலும், ஏனைய பலவிடங்களிலும் இக்கனிமம் கிடைக்கிறது. இது சிறிய அளவில் கிடைக்கும் தாமிரத் தாது ஆகும். இரா. இராமசாமி நூலோதி. L. G. Berry & B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers & Distributors, New Delhi, 1985. கிரைசோபெரில் பச்சை, மஞ்சள், பழுப்பு நிறங்களில் காணப்படும் கிரைசோபெரில் (chrysoberyl) ஒரு பெரிலிய அலுமினிய சிலிக்கேட் (BeAl,0,) கனிமமாகும். இது செவ்வகப் படிகத் தொகுதியைச் சேர்ந்தது. இதன் வேதியலமைப்பு ஸ்பீனலின் அமைப்பை ஒத்து. பெரிலிய அயனி ஆக்சிஜனுடன் நான்முனைப்பிணைவு டனும், அலுமினிய அயனி ஆக்சிஜனுடன் அறு முனைக் கூட்டுப் பிணைவுடனும் காணப்படும். இது ஆலிவினின் வேதியல் கட்டமைப்புடையது. பெரிலியம் ஆலிவினில் உள்ள சிலிக்கா நிலையிலும், அலுமினியம் ஆலிவினில் உள்ள மக்னீசிய நிலையிலும் கிரைசோபெரிலில் இடம் பெற்றிருக்கும். இவ் படம் 1. கிரைசோபெரில் இரட்டைப்படிகம் முக அமைப்புகள் பிள்ளகாய்டு ((001), சாய்சதுர இரட்டைப் பிரயிடுகள் a (111), n (121) (130) சுற்று இரட்டைப்படிகத்தனம் ஓட்டுத்தனம்