கிரையோலைட் 691
வாறான கனிம அமைப்பால் தோன்றும் அறுகோண நெருக்க ஆக்சிஜன் அயனிப்பொதிவினால் கிரைசோ பெரில் போலியான அறுகோணப் படிக அமைப்பை அடைகிறது. அதனால் அதன் படிக அச்சுகள் ஏறத் தாழ 1:டு ஆகவும்,(130) தளத்தில் இரட்டுறல் உடையனவாகவும் வளருகின்றன. படிக படிகநிலை மற்றும் வகுப்பு. செவ்வகத் தொகுதி அச்சுகள் a:b:c = 0.5823:1:0.4708, A அலகறைப் பருமன் மற்றும் அடக்கம்: a = 5.48, b = 9.41, c = 4.43, z= 4பொதுமுக அமைப்பும் கோணமும்: (001) A (111) = 43°05';(010) A (111) = 59°47' (001) A (121) = = 51°08'; (010) A (130)= 29°48, படிகவளர் மரபு (001) தளத்தட்டைப்படிகங்கள். படிக இரட்டுறல். (130) தளத்தில் அமையும் இரட்டைப்படிகங்கள் ஒட்டு இரட்டைப் கங்கள் படிக அல்லது உட்செருகல் இரட்டைப் படிகங்கள். பெரும் பாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்த இரட்டைப்படிக வளர்ச்சியால் போலி அறுகோணப் படிக நிலையை அடைந்தவை. (110) தளத்தில் தெளிவான கனிமப் பிளவும். (010) தளத்தில் தெளிவற்ற கனிமப் பிளவும் உடையது. இதன் கடினத்தன்மை 8.5; அடர்த்தி 3.75. கனிமத்தூள் நிறமற்றது; பளிங்கு மிளிர்வு கொண்ட ஒளிபுகு படிகங்களைக் கொண்டது. கிரைசோபெரில் அலெக்சாண்டரைட் என்ற விலைமதிப்புயர்ந்த அணிகலக்கல்லாக மரகதப்பச்சை வண்ணத்துடன் இயற்கை ஒளியை எதிரொளிக்கும் இயல்புடையது. செயற்கை ஒளியை இது சிவப்பு வண்ணத்தில் எதிரொளிக்கிறது. பூனைக்கண் அல்லது சுமோபான் என்னும் அணிகலக்கல் பச்சை நிறத்தில் சாடோயாண்ட் இனத்தைச் சார்ந்து முத்து வெண்மையுடைய ஒப்பல் மிளிர்வுடன் காணப் படும். அக்கனிமத்தைக் குறிப்பிட்ட திசைப்புலனில் வெட்டிப் பட்டை தீட்டினால் அக்கனிமத்தினுள் மெல்லிய ஒளிக்கீற்றுகள் குறுக்கான பட்டைகளாகத் தென்படும். இவ்வியல்பு இக்கனிமத்தினுள் நுண்ணிய தட்டையான காலியான இடங்கள் இணை, யாக அமைந்திருப்பதால் உண்டாகிறது. ணை கிரைசோபெரில் கனிமங்களை அவற்றின் நிறம், கடினத்தன்மை ஆகியவற்றாலும், அதன் கனிமப் பொடி பாஸ்ஃபரத் தீச்சுடர் உப்பில் கரைவதைக் கொண்டும் அறியலாம். கிரைசோபெரில் ஓர் அரிய கனிமம். இது பெரும்பாலும் பெக்மடைட் பாறை களில் கிடைக்கிறது. சிலசமயங்களில் கிரானைட்டுப் பாறைகளிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கேரளமாநிலத்தின் தென் பகுதி. இலங்கை, பிரேசில் ஆகிய இடங்களில் ஆற்றோடைச் சரளைகளிடையே கிடைக்கிறது. அலெக்சாண்டரைட், யூரல் மலைத்தொடர்களில் காணப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மைனி, கன்னெடிகட் கிரையோலைட் 691 கொலாராடோ பகுதிகளி லுள்ள பெக்மடைட்டுப் பாறைகளில் கிடைக்கிறது. - இராம. இராமசாமி நூலோதி. W.A. Deer, R.A. Howie and Rock forming J. Zussmann, An Inuroduction to Minerals, Orient Longmans, London, 1966. கிரையோலைட் இது ஒரு ஃபுளூரைடு கனிமமாகும். இது சோடியம் அலுமினியம் ஃபுளூரைடு (Na,AIF ) ஆகும். இக் கனிமத்தில் இரும்பு - ஆக்சைடு அரிதாக மிகச் சிறிய அளவில் காணப்படுவதுண்டு. கிரையோலைட் (cryolite). ஒற்றைச்சரிவுத் தொகுதியைச் சேர்ந்த கனிமம், 'இதன் அணுக் கோப்பு, இயல்பு அல்லது அடிப்படை வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக்கோப்பில் இரண்டு கூட்டணுக்கள் உள்ளன. இதன் படிக-அச்சுகளின் நீள - விகிதம் a:b:c = 0.966:1:1.388 ஆக உள்ளது. தன் a-படிக் அச்சுக்கும் c (குத்து) அச்சுக்கும் யேயுள்ள (B) கோணம் 90° 11' ஆக உள்ளது. கிரையோலைட்டின் படிகங்கள் பெரும்பாலும் பருசதுர வடிவுகளாகக் காணப்படுகின்றன. சில குட்டையான பட்டகங்களாக உள்ளன. பட்டகங் களின் முகங்களில் கீறல்கள் காணப்படும். இ கனிமம் திண்மங்களாகவும், பெருந்துகள்களாகவும் காணப்படும். கிரையோலைட்டில் படிக-இரட்டுறல் காணப்படுகிறது. இதில் கனிமப் பிளவு வலை (001) மற்றும் (110) தளங்களுக்கு ணையான கனிமப் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கனிமம் நிறமற்றதாயும் வெண்மை. சருகுநிறம், சிவப்பு, சாம்பல் நிறம் மற்றும் கறுப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. இதன் தூள் நிறம் வெண்மை. இதில் கண்ணாடி - மிளிர்வு அல்லது எண்ணெய்- மிளிர்வு காணப்படும். இது சீரற்ற முறிவைஉடையது. தன் கடினத்தன்மை 2.5; ஒப்படர்த்தி 2.97. இது நொறுங்கக் கூடியது. இக்கனிமம் ஒளிபுகும் அல்லது ஒளி கசியும் தன்மையுடையது. கிரையோலைட் இரண்டு ஒளி அச்சுகளை டைய கனிமம். இது நேர் ஒளிக் குறியை உடையது. தன் ஒளி அச்சுக் கோணம் (2V) 43 இருக்கும். தன் ஒளி அச்சுத்தளம் (010) தளத்திற்குச் செங்குத் தாக உள்ளது. இதில் ZAC மறைவு கோணம் -440 இருக்கும். இக்கனிமத்தின் ஒளிவிலகல் எண்கள் a= 1.3376; B = 1.3377: y = 1.3387. இந்த ஒளி விலகல் எண்கள் மிகவும் குறைவாக இருப்பதால் கிரையோலைட்டின் துகள்கள் நீரில் உள்ளபோது -