பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 கிலுகிலுப்பை

692 கிலுகிலுப்பை புலனாவதில்லை. கிரையோலைட் கந்தக அமிலத்தில் கரையும். கிரையோலைட் பெக்மடைட் எனப்படும். பாறையில் காணப்படுகிறது. இக்கனிமம் பிற அலுமினியம் ஃபுளூரைடு கனிமங்கள், சிடரைட், கலீனா. ஸ்ஃபேலன் ஆகிய ரைட் கனிமங்களுடன் சேர்ந்து கிடைக்கிறது. கிரையோலைட் மாற்றமடை வதால் பேச்நோலைட், தாம்ஸினோலைட், புரோ ஸோபைட் முதலான கனிமங்கள் உண்டாகின்றன. சீடரைட் கிலுகிலுப்பை சொறி சிரங்கு நோயை நீக்க இலையைக் குடிநீரிட்டு உள்ளுக்குக் கொடுத்தும், இலையையே அரைத்து மேலுக்குப் பூசியும் வரலாம். இலையைக் குடிநீரிட் டுக் கொடுக்கச் செரியாமை, வயிற்றுவலி போன்ற பவ நோய்கள் குணமாகும். கிலுகிலுப்பை வேரை அரைத்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிக் காதி லிட்டுப் பஞ்சடைக்க, இரண்டு மூன்று வேளையில் காதெழுச்சி தீரும். சே. பிரேமா - நூலோதி: சிறுமணவூர் முனிசாமி முதலியார், மூலிகைமர்மம், புரோகிரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை. க.ர. முருகேச முதலியார் குணபாடம் மூலிகை வகுப்பு, தமிழ்நாடு அரசு அச்சகம், இரண்டாம் பதிப்பு, சென்னை.1951. கல்னா படம் கிரையோலைட் பெரும்பாலும் வெண்மை நிறத் தில் ஒளிகசியும் தன்மையுடன் கிடைக்கிறது. இது தோற்றத்தில் பனிக்கட்டி போல் இருப்பதால் பனிக் கல் என்று பொருள்படும் கிரையோலைட் எனப் பெயரிடப்பட்ட டது. கிரையோலைட் கொலராடோ, கிரீன்லாந்து, ஸ்பெயின், சோவியத் - ரஷ்யா ஆகிய நாடுகளில் மிகுந் துள்ளது. இக்கனிமம் பாக்சைட்டிலிருந்து அலு மினியத்தை மின்முறையில் தயாரிக்கும்போது இளக்கி யாகப் (எளிதில் உருக வைக்கும் பொருளாக) பயன் படுத்தப்படுகிறது. சில வகைக் கண்ணாடிகள், பீங் கான், சோடியம் - உப்புகள் முதலியன தயாரிப்பதிலும் கிரையோவைட் பயன்படுகிறது. இல.வைத்திலிங்கம் நூலோதி. N.L. Sharma and K.S.V. Ram, Intro - duction to India's Economie Minerals, Dhanbad publishers. Dhanbad, 1964. கிலுகிலுப்பைச் செடி இச்செடி பாபிலியோனேசி என்னும் ஃபாபேசி குடும் பத்தைச் சேர்ந்ததாகும். இது பொதுவாகக் குரோட லேரியா என்னும் பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங் களைக் குறிப்பது ஆகும். இதன் சிற்றினங்கள் படர் செடிகளாகவோ, புதர் செடிகளாகவோ அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில சிற்றினங்களில் தனி இலைகளும். சிலவற்றில் கூட்டிலைகளும் காணப்படுகின்றன. இலையடிச் செதில்கள் உண்டு. இலையடிப் பகுதி சற்றுப் பெருத்துக் காணப்படும். இப்பகுதி பல்வைனஸ் எனப்படுகிறது. இலைகள் மாற்று இலையடுக்கத்தையும், சிற்றிலைகள் வலை நரம்பு அமைப்பையும் கொண்டுள்ளன. பூக்கள் ரெசீம் மஞ்சரியாகக் காணப்படும். காம் புடையவை, பூவடிச் செதில்கள், பூக்காம்புச் செதில் கள் கொண்டவை, முழுமையானவை. இச்செடி யினத்தைச் சார்ந்த மலர்கள் பொதுவாக மஞ்சள் நிறத்தனவாகவும், அரிதாக நீல நிறத்தனவாகவும் இருக்கும். அவை பெரியதாகவும், ஆடம்பரமாகவும் இருக்கும். இருபால் மலர்கள் ஆகும். ஐந்தங்கம் உடையன. இருபக்கச் சமச்சீரானவை. புல்லிவட்டம் ஒழுங்கற்றது, இணைந்தது, ஐந்து, பச்சை நிறமுள்ள புல்லி இதழ்களால் உண்டாக்கப் பட்டது. அல்லி வட்டம் ஒழுங்கற்றது, இணையா தது, ஒரு கொடி இதழ், இரண்டு இறக்கை இதழ் கள், இரண்டு படகு இதழ்கள் உள்ள பாபிலியோ னேஷஸ் (papilionaceous) அல்லிவட்டம் இறங்கு அடுக்கு இதழ் ஒழுங்கு கொண்டதாகும். படகு இதழ் கள் கீழே இணைந்துள்ளன. அல்லி வட்டத்தின் .