694 கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும்
694 கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும் கிறது. இதைப் பல்லாண்டுகளாக ஆசிய நாடுகளில் பயிரிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இது ஏறத் தாழ ஐந்து லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் நார் சணலை விட மிகு வலிவானது. கோணிப்பைகள், மேல் உறைகள், வலைகள் முதலியன செய்வதற்குப் பயனாகிறது. குரோட்டலேரியா ஜன்ஸியா செடியில் தண்டின் வெளிப்புறத்தில் பள்ளமான கோடுகள் காணப்படு கின்றன. இலைகள் குறுகிய வேல் வடிவம் கொண்டவை. காய்கள் 2-3 செ.மீ. நீளமானவை. இவை பசுந்தாள் உரமாகப் பயன்படுகின்றன. குரோட்டலேரியா வெர்ருகோஸா (C verrucosa). இச்சிற்றினம் அனைத்து மாவட்டங்களிலும் காணப் படும். இது நன்கு கிளைத்திருக்கும் ஒரு பருவச் செடியாகும். அகன்ற தனி இலைகளும், நீலம் அல்லது வெண்மையான மலர்களும் உடையது. குரோட்டலேரியா லேபர்ளிஃபோலியா (C.laburni folia). இச்சிற்றினம் 3 கூட்டிலைகளும், பளிச்சென்ற மஞ்சள் நிற மலர்களும் கொண்டது. பூங்காக்களுக்கு இவை எழில் ஊட்டுகின்றன. இதைப் புலிநகக் கொன்றை என்றும் கூறுகின்றனர். இதன் விதை பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வே. சங்கரன் வெளிப்படை மின் திறனே செயல்படும் மின்திறனாக வும் அமையும். ஒரு மின் பகிர்மானப் (distribution) பகுதியிலோ, மின் பயனீட்டுப் பிரிவிலோ, பயன்தரும் அலகு அவ் வப்போது பயன்படும் மின்திறனுக்கொப்ப அமையும். அவ்வாறு செயல்படும் மின்திறள் அன்றி வெளிப்படை மின் திறனும் கிலோ வோல்ட் ஆம்பியருக்கேற்பவே, மின் பகிர்மானம், உற்பத்திப் பகுதிகளை வடி வமைக்க வேண்டியுள்ளது. மேலும் ஒரு தொகுதியில் மின்னோட்டம் வெளிப்படை மின்திறனின் தேவையை ஒட்டி அமைகிறது. மின்னோட்டத்தை ஒட்டியே மின்னிழப்பும் (IR, lineloss) உள்ளது. ஆகவே ஆங்காங்கு கிலோ வோல்ட் ஆம்பியரை (வெளிப்படை மின்திறன்) அளவிடவேண்டியது இன்றியமையாததாகிறது. உள்ள செயல்படும் மின்திறன் மற்றும் வெளிப்படை மின்திறன் ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது. El sin எதிர்வினை மின்திறன் EI வெளிப்படை மின்திறன் கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறை களும் ஒரு மாறுதிசை மின் சுற்றில் (A.C Circuit) மின் அழுத்தத்தின் RMS (Root Mean(Square) மதிப்பையும் மின்னோட்டத்தின் RMS மதிப்பையும் பெருக்கி வரும் தொகை (மின்னழுத்தம் வோல்ட்டிலும் மின் னோட்டம் ஆம்பியரிலும் குறிப்பிடப்படும்போது, வோல்ட் ஆம்பியரின் வெளிப்படை மின் திறனாகும் (apparent power). உயர் அழுத்த மின் சுற்றுகளில் மின்னழுத்தம் கிலோ வோல்ட்டில் குறிப்பிடப்படு வதால் அவ்வெளிப்படை மின்திறன் கிலோ வோல்ட் ஆம்பியரில் குறிப்பிடப்படுகிறது. செயல்படும் மின்திறன் வாட் (watt) எனும் அளவையில் குறிப்பிடப்படும். எதிர்வினைப்பகுதி வார் (var) எனும் அளவைகளில் எதிர்வினை (reactive) வோல்ட் ஆம்பியரில் குறிப்பிடப்படும். மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடைப் படும் தறுவாய் வேறுபாட்டின் (phase difference) காரணமாகவே எதிர்வினை வோல்ட் ஆம்பியர் தோன்றுகிறது. மின்னழுத்தமும், மின்னோட்டமும் தறுவாய் வேறுபாடின்றிச் செயல்படக் கூடுமானால் மின்திறனில் எதிர்வினைப் பகுதி எதுவும் இருக்காது. 9 காலவேறுபாடு E- மின்னழுத்தம் படம் 1. Er cos செயல்படு மின்திறன் ( RMS ); I - மின் னோட்டம் (RMS) உ - மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் டையே உள்ள காலவேறுபாட்டின் கோணமதிப்பு பாகையில் செயல்படும் மின்திறன் (active power watts) =El cosa எதிர்வினை மின்திறன் (ireactive power - vars) El sin வெளிப்படை மின்திறன் (apparent power - var) =EI