பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலோ வோல்ட்‌ ஆம்பியரும்‌ அளக்கும்‌ முறைகளும்‌ 695

ஒரு. வெளிப்படை மின்திறனை அளவிடுதல். மின்சுற்றில் உள்ள வெளிப்படை மின்திறன் அதில் செலுத்தப்படும் மின்னழுத்தம் மற்றும் மின்னோட் டத்தின் பெருக்குத் தொகையாகும். மின்னழுத்தத் தின் மதிப்பு கிலோ வோல்ட்டில் அளக்கப்படும்போது வெளிப்படை மின்திறன், கிலோவோல்ட் ஆம்பியரில் கிடைக்கிறது. கிலோவோல்ட் ஆம்பியர் மணி அளவி செயல்படும் விதம்: (kilovolt ampere hour meter). மின் பயனீட் டாளர் பயன்படுத்தும் செயல்படும் ஆற்றலை அலகுகளில் (units) (kwh) அளப்பதோடு கிலோ வோல்ட் ஆம்பியர் மணி மற்றும் கிலோவோல்ட் ஆம்பியரையும் அளப்பது பற்றிக் காண வேண்டும். P A B V படம் 2. A படம் 2 ல் OP என்பது செயல்படும் திறனைக் (கிலோவாட்) குறிப்பிடுகிறது. என்பது வெளிப் படும் திறனைக் (கிலோவோல்ட் ஆம்பியர்) குறிக் கிறது. படம் 2 அ - வில் A எனும் அளவீட்டுக் கருவி (மீட்டர்) ஒரு வாட் மணி அளவியாகும். உண்மை யிலேயே பயன்படும் ஆற்றலை அது அலகுகளில் தருகிறது. B எனும் அளவீட்டுக் கருவி வெளிப்படை ஆற்றலைக் கிலோ வோல்ட் ஆம்பியர் மணிகளில் (KVAh) தருகிறது. என்பது கால வேறுபாட்டுக் கோணத்தைக் குறிக்கிறது. cos திறன் விகித மாகும். படம் 2 ஆவில் காட்டப்பட்டுள்ள C எனும் அளவி வார் (var) என்று அளவை குறிப்பி டுகிறது. இம்மூன்று அளவைகளும் பின்வரும் சமன் இணைக்கப்படுகின்றன. பாட்டால் SUP (KVA Sino) + (KVA Coso)* (KVA B எனும் அளவியில் உயர்தேவை காட்டியைப் (maximum demand indicator) பொருத்தினால் அது குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தேவைப்படும் பெரும கிலோ வோல்ட் ஆம்பியரைக் குறிப்பிடும். ஒரு தூண்டல் வாட் மணி அளவியில் (induction watt கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும் 695 hour meter) மின்னழுத்தச் சுற்றின் காந்தப்பாயம், மின்சுற்றை இயக்கும் மின்னழுத்தத்திற்கு 90 பின்தங்குமாறு (lag) அமையும், வோல்ட் ஆம்பியரை அளவிட வேண்டுமாயின் காந்தப் பாயம் (magnetic flux) 90°க்கு மாற்றாக 90° + pla மின்னழுத்தத்தில் பின்வருமாறு அமைக்கப் பெற வேண்டும். pa என்பது மின்சுற்றில் சராசரி தறுவாய் வேறுபாட்டுக் கோணம் எப்போதாவது மின்சுற்றின் தறுவாய் வேறுபாட்டுக்கோணம் சரியாக நிa Pa ஆக அமையக் கூடுமானால் இயக்கும் மின்னழுத்தமும் மின்னோட்ட மும் காலவேறுபாடின்றி இயங்குதல் போல அளவி செயல்படும். அதாவது கிலோவாட் மணி அளவி கிலோவோல்ட் ஆம்பியரைக் காட்டும். ஏனைய திறன் விகிதங்களில் அளவியின் வேகம் சரியாக வோல்ட் ஆம்பியருக்கு நேர்விகிதத்தில் அமையா விடினும் வோல்ட் ஆம்பியர் x cos (p - pa) நேர்விகிதத்தில் அமையும். [(p) என்பது அந்நேரத்தின் சரியான தறுவாய் வேறுபாட்டுக் கோணம்) ஒரு மாறுதிசை மின்னோட்டச் சுற்றில் தறுவாய் வேறுபாட்டுக் கோணம் சிறியதாக இருந்தால் அதா வது cos, 1-ஐ நெருங்கும்படியிருந்தால் கிலோ வோல்ட் ஆம்பியர் cos (செயல்படும் மின்திறன்) றக்குறையக் கிலோ- வோல்ட் ஆம்பியரைத் (வெளிப் படை மின்திறனை ) தரும். எடுத்துக்காட்டாக = 20° என்றால் cos 4 = 0.9397. இங்கு அளக்கப்படும் மின்திறன் கிலோவோல்ட் ஆம்பியரை விட 6.03% குறைகிறது. திறன் விகிதம் முன்போ, பின்போ இருப்பினும் இக்கணக்குப் பொருந்தும். திறன் விகிதம் 1 ஆக இருக்கும்போது அளவி 3% வேகமாக ஓடுமாறு பொருத்தப்பட்டால் அந்த மின் சுற்றின் தறுவாய் வேறுபாட்டுக்கோணம் 20க்குள் அமையுமானால் அந்த அளவி கிலோவோல்ட் ஆம்பியரை + 3% எல்லைக்குள் தருகிறது. மேற் படி இயக்கத்திற்குத் தேவையான மாறுதல்களை இணைப்புக் காந்தத்தில் நாற்கோட்டச் சுற்றுகளைப் (quadraple loops) பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோவாட் மணி அளவியில் பெறக்கூடும். இவ்வாறு அமைக்கப்பட்ட அளவியில் உயர் தேவை காட்டி யைப் பொருத்துவதன் மூலம் கிலோவோல்ட் ஆம்பி யரை அளக்க முடியும். லேண்டிஸ் கிர் மூவெக்டார் அளவி. இந்த அளவி கிலோவோல்ட் ஆம்பியர் மணி மற்றும் பெரும கிலோவோல்ட் ஆம்பியரை அளவிடுவதற்குப் பயன் படுகிறது. இந்த மூவெக்டார் அளவி, கிலோ வாட் மணி, கிலோவோல்ட் ஆம்பியர் மணி மற்றும் எதிர் வினைக் கிலோவோல்ட் ஆம்பியர் மணி ஆகிய வற்றைக் காட்டுகிறது. முதல் இரண்டு அளவிகளில் உயர் தேவை காட்டிகளைப் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொதுவாக ஒவ்வோர் அரைமணி நேரத்திலும் பயன்படும் உயர்ந்த அளவு கிலோ வாட்டும். கிலோவோல்ட் ஆம்பியரும் பெறப்படுகின்றன.