பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலோ வோல்ட்‌ ஆம்பியரும்‌ அளக்கும்‌ முறைகளும்‌ 697

இந்த அளவியில் குறிப்பிட்ட காலம் முடியும் போது உந்து பகுதியை 0*க்குத் திருப்பிக் கொணரும் கருவியின் உள்ளே ஒரு கால இணைப்பு மாற்றியோடு (time switch) இணைக்கப்பட்டுள்ளது. அவை கடிகார அமைப்பால் ஆனவை. விரும்பும் காலவரையறைக்கு ஏற்றவாறு இயங்குமாறு அவற்றை அமைக்க முடியும். பயன்கள். பெருமமான தேவை ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் தொடர்ந்து இருந்தால்தான் அது. பதிவு செய்யப்படும் அளவுகளைப் பெரிதும் பாதிக்கும். அதே நேரம் குறுகிய கால உயர்ந்த தேவையும் கணக்கில் கொள்ளப்படும். வேண்டிஸ். கிர் தொழிலகம் உற்பத்தி செய்த மெர்ஸ் வடி லமைப்புத் தேவைகாட்டி பட்டுள்ளது. படம் 3 இல் காட்டப் பொதுவாக ஊசி குறிகாட்டி முள்ளை ஒவ்வோர் அரைமணி நேரத்திற்கு உந்தித் தள்ளுகிறது. அந்தக் காலத்தில் பயன்பட்ட கிலோவோல்ட் ஆம்பியர் மணி, முகப்புக் காட்டியில் காட்டப்படுகிறது. (காலப் பரிமாணத்தால் வகுத்துக் கிலோ வோல்ட் ஆம்பி யரைக் குறிக்குமாறு முகப்புக் காட்டியில் எண்களை அமைத்துக் கொள்ளலாம்). அந்தக் காலத்தின் எல்லையில் நெம்புருள் (cam) உடனடியாகப்பற்சக்கர உருளையை ஒரு வணரி (bell crank) மூலம் விடு வித்துக் கொள்கிறது. இதனால் ஊசி. அதன் உந்து கருவி விசைச் சுருளின் செயல்பாட்டின் மூலம் 0 நிலைக்குத் திரும்புகிறது. ஆனால் குறிகாட்டியோ பழைய நிலையிலேயே இருந்து முந்தைய அரைமணி நேரத்தில் பயன்படுத்தப்பட்ட சிலோவோல்ட் ஆம்பி யரைக் காட்டுகிறது. நிலை அடுத்த அரை மணி நேரத்தில் ஊசி யிலிருந்து தொடர்ந்து நகர்கிறது. ஆனால் முள் காட்டி முந்தைய காலத்தில் பதிவு செய்த பெரும தேவையை இந்தக் காலத்தில் தாண்டினால்தாள் நிலைக் குறிகாட்டியை நகர்த்தி அந்த இடத்தில் நிலை கொள்ளச் செய்யும். இல்லையென்றால் பழைய இடத்திலேயே அது இருக்கும். அதுவரை உள்ள உயர் தேவையைச் சுட்டிக் காட்டும். கிலோவோல்ட் ஆம்பியரை சிம்கோ அளவி. நுட்பமாக அளவீடு செய்வதில் பல செயல்முறை இடர்ப்பாடுகள் உள்ளன. சிம்கோ அளவியில் அத் தகைய இடர்ப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. மூன்று மாறு திசை மின்பாதை மின்னோட்டங்களும் நேர் திசையில் மாற்றப்படுகின்றன. முத்தறுவாய்ப் பாலம் போல் மின்திருத்தி (3p bridge type rectifier) இதற்குப் பயன்படுகிறது. இந்த நேர்திசை மின்னோட்டத்தால் தூண்டல் அளவியொன்றை இயக்க, ஆற்றல் மாற்றி (transducer) பயன்படுகிறது. மாறுபடும் திறன் விகிதம் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் திருத்தப்பட்டபிறகு அதை மாறு படும் மின்னழுத்தத்தோடு நிலையான தறுவாய்க் கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும் 697 கோணத்தில் உள்ள மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதே இந்த ஆற்றல் மாற்றியின் பணியாகும். இதில் நிக்கல் கலவையாலான இரும்புக் இரண்டு வளைகூடுகள் (ring cores ) உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு மாறுதிசைக் காந்தமாக்கும் சுருள் உள்ளது. அவை இரண்டையும் ஒரே நேர் திசைக் கட்டுப்படுத்தும் சுருள் தழுவுமாறு அமைக்கப் பட்டுள்ளது. ஆற்றல் மாற்றியில் நேர்திசை மின்னோட்டம் செலுத்தப்படும் வரை இரண்டு மாறுதிசைக் காந்தப்படுத்தும் சுருள்களும் உயர்தடை கொண்ட அடைகளாக (chokes) இயங்குகின்றன. அவற்றின் காந்தமாக்கும் மின்னோட்டம் மிகக் குறைவானதே. ஒரு துணை மின்னழுத்த மின்மாற்றியின் துணைச் சுற்றில் இணைக்கப்பட்டுள்ள அளவீட்டுப் பகுதியோடு ஆற்றல் மாற்றியின் மாறுதிசைக் காந்தப்படுத்தும் சுருள்கள் நேராக இணைக்கப் பட்டுள்ளன. ஆகவே, ஆற்றல் மாற்றியின் கட்டுப் பாட்டுச் சுருளில் பாயும் நேர்மின்னோட்டத்தால் விளையும் காந்த விசைக்கு நேர்விகிதத்தில் அளவியின் மின்னோட்டச் சுருளில் மாறுதிசை மின்னோட்டம் பாய்கிறது. நேர் மின்னோட்டம், மின்பாதைகளில் ஓடும் மின்னோட்டங்களின் நேராக்கப்பட்ட கூட்டுத் தாகையாகும். ஆகவே அளவியின் மின்னோட்டச் சுருளில் பாயும் மின்னோட்டம் மின்பாதையிலுள்ள மின்னோட்ட அளவிற்கு நேர்விகிதப் பொருத்த முடையது எனக் காணலாம். அந்த மின் தொகுதியின் அழுத்தமே அளவீட்டுப் பகுதியின் மின்னழுத்தச் சுருளில் செலுத்தப்படு வதால் அளவியின் திருப்புவிசை மின் தொகுதியின் ஓட்டம் மற்றும் அழுத்தத்தின் பெருக்குத் தொகைக்கு நேர் விகிதத்திலிருக்கும். மின்தொகுதியின் திறன் விகிதத்தால் இது பாதிக்கப்படுவதில்லை. துணை 'சிறிய மின்திருத்திகளையும் ஆற்றல் மாற்றியை யும் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் மூல மின் னோட்டச் சுற்றுகளுக்கிடையே தேவையான காப்புத் தன்மையை மூன்று அளப்பதற்காகவும் மின்னோட்ட மாற்றிகள் (auxiliary transformers ) பயன்படுகின்றன. மின்னோட்டம் சமச்சீராக இல்லா விடினும் மின்னழுத்தம் ஒன்றாக இருப்பதால் சரியாக இருக்கும். அளவீட்டுப் பகுதி. அளவீடு கூடுதல் மின்மாற்றிகள். மின்திருத்தி, ஆற்றல் மாற்றி அனைத்தும் வசதியாக ஒரே கட்டமைப் பிற்குள் அமைக்கப்பட்டுள்ளன. கிலோ வோல்ட் ஆம்பியர் மணி அளவியோடு மெர்ஸ் பிளாக் தேவைகாட்டி ஒன்றை இணைப் பதன் மூலம் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் அடையும் கிலோவோல்ட் ஆம்பியரின் உயர்தே காட்டப்படுகிறது. தவை