கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும் 699
Hs5Q4 A கிலோ வோல்ட் ஆம்பியரும் அளக்கும் முறைகளும் 699 wwwwwwwwww wwwwwwww S Ta D படம் 5. ரைட் உபர் தேவை காட்டி கம்பிச் சுருளால் சூடாக்கப்படுகிறது. அறை வெப்பத் தில் ஏற்படும் மாறுதல் இரு குமிழ்களையும் ஒரே அளவு பாதிக்கிறது. ஆனால் அந்த மாறுதல் கருவி யில் உள்ள நீர்மப் பொருளைப் பாதிப்பதில்லை. மின்கம்பிச் சுருளில் செலுத்தப்படும் மின்னோட் டம் A குமிழில் உள்ள காற்றைச் சூடாக்குகிறது. அது விரிவடைந்த நீர்மப் பொருளைத் தள்ளுகிறது. தொடக்கக் கட்டத்தில் D எனும் குழாயோடு ஒரே மட்டத்தில் இருந்த நீர்மப் பொருள் தள்ளப்பட்ட வுடன் D எனும் குழாய்க்குள் விழுகிறது. மின்கம்பிச் சுருளின் மின்னோட்டத்தின் ஈரடுக்கிற்கு (square) நேர்விகிதத்தில் காற்றுச் சூடாக்கப்படுகிறது. அதை யொட்டி விரிவடைந்து அதற்கொப்பவே நீர்மப் பொருளையும் D எனும் குழாயில் தள்ளுகிறது. ஆகவே மின் சுருளில் பாய்ந்த சராசரி உயர் தேவை மின்னோட்டத்தை இக்கருவி காட்டுகிறது. மின் வழங்கு அழுத்தத்தை நிலையாக எடுத்துக் கொண் டால் கிலோவோல்ட் ஆம்பியரின் மதிப்பை இக்கருவி காட்டுகிறது. அவ்வாறு குறியீடுகள் வரையப்பட்டுள் ளன. மொத்தச் சுமையில் ஆறில் ஒரு பங்கிற்குக் கீழ் இக்கருவியால் சரியாக மதிப்பிட இயலாது. சீமன்ஸ் உயர் தேவை காட்டி, இந்தக் கருவியில் T.மற்றும் T, எனும் இரண்டு இரட்டை உலோகத் தகடுகள் உள்ளன. அளவிட வேண்டிய அமைப்பில் பாயும் மின்னோட்டத்தின் ஒரு விகிதப் பகுதி ஒரு தடையில் பாய்ந்து I எனும் தகட்டைச் சூடாக்கு கிறது. T, அறை வெப்பநிலையிலேயே உள்ளது. R எனும் இணைத்தடையின் (Shunt resistance) மூலம் இந்தக் கருவியில் அளவுகள் குறியிடப்படுகின்றன. சூடாக்கப்படும் தகட்டின் நகரும் முனை 1 எனும் அடுக்குடன் (rack) இணைக்கப்பட்டுள்ளது. அந்த படம் 6. சீமன்ஸ் உயர் தேவை காட்டி அடுக்கு நெகிழும் கம்பிச்சுருள்களால் தொங்கவிடப் பட்டுள்ளது. P எனும் பல்சக்கர உருளையோடு பல் சக்கர அமைப்பால் அந்த அடுக்கு இணைக்கப்பட்டுள் ளது. P எனும் உருளையின் மையப்பகுதி I, எனும் தகட்டின் நகரக்கூடிய முனையால் தக்க உராய்வைத் தவிர்க்கும் தாங்கிகளால் தாங்கப்படுகிறது. இந்தக் கதிரின் மேல் ஓடும் குறிகாட்டி முள் 2 என்பது பொருத்தப்பட்டுள்ளது. அது நகரும்போது மற்று மொரு குறிகாட்டியைத் தான் நகரும் உயர் அளவில் நிறுத்துகிறது. அந்தக் குறிகாட்டி ஒரு முறையான அளவீட்டுப் பலகையின் மேல் நகர்ந்து உயர்ந்த அளவு கிலோ வோல்ட் ஆம்பியர் தேவையைக் காட்டு றது. அறையின் வெப்ப வேறுபாடு T.மற்றும் T, இன் நகரும் முனைகளில் ஒரே அளவான மாறுபாட்டையே ஏற்படுத்துகிறது. ஆகவே, P மற்றும் L இதற் கிடையே வேறுபாடு எதுவும் இருக்காது. ஆகவே, அறை வெப்பம் கருவியைப் பாதிக்காது. சூடாக்கி யின் (heater) மூலம் மின்சாரம் செலுத்தப்படும்போது மின்னோட்டத்தின் ஈரடுக்கிற்கு நேரான விகிதத்தில் T. எனும் தகடு சூடாக்கப்படுகிறது. அதன் நகரும் முனை வெளிப்புறமாக நகர்ந்து P எனும் பல்சக்கர உருளையைச் சுழற்றுகிறது. அதனால் குறிகாட்டி நகர்கிறது. சரியான வடிவமைப்பின் மூலம் அதிகச் சுமையின் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் காட்டும்படி யாகக் கருவி அமைந்துள்ளது. 2 எஸ். சுந்தரசீனிவாசன் நூலோதி. Donald G, Fink, H. Wayne Beaty Standard Hand Book for Electrical Engineers, Eleventh Edition, McGraw- Hill Book Company, New York, 1978.