பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 கிழங்குகள்‌

700 கிழங்குகள் கிழங்கான் ஊட்டச் சத்து மிகுந்த பலவகை மீன்களில் கிழங் கான் (sillago) என்னும் மீன் இனமும் ஒன்றாகும். இந்தியக் கடலோரப் பகுதிகளில் இம்மீன்கள் மிகுதி யாசுக் காணப்படுகின்றன. பல வேறுபாடான உப்புத் தன்மையையும் தாங்கிக் கொள்ளும் கிழங்கான் ஆற்றுக் கழிமுகங்களில் வாழும். இந்தியாவில் ஒறத் தாழ எட்டு இனங்கள் உள்ளன. இவற்றின் உருவ அமைப்பிலுள்ள ஒருசில மாறுபாடுகளைக் கொண்டு கிழங்கான்களை அந்தந்த இனமாக வகைப் படுத்தலாம். கள் என்னும் இரட்டைத் துடுப்புகளும் கழிப்பிடத் துடுப்பு ஒன்றும் அமைந்துள்ளன. இவற்றின் உதவி கொண்டு மீன், நீரில் நீந்த முடியும். பக்கவாட்டில் அமைந்திருக்கும் பக்கக் கோட்டு உறுப்புகள் மூலம் கிழங்கான் நீரின் ஊசலாட்டத்தை அறிகிறது. கிழங்கான் ஓர் ஊனுண்ணி; இளமையில் இறால்களையும் வளர்ச்சியடைந்த பருவத்தில் பல் சுணைப் புழுக்களையும் (polychaeta). விரும்பி உண்ணும். சிலசமயங்களில் துறவி நண்டுகளையும் (hermit crabs) உண்ணும். பெண் கிழங்கான்கள் வெளிவிடும் அண்டத்துடன், ஆண் கிழங்கான்கள் வெளிவிடும் விந்து இணைந்து கருமுட்டை தோன்று கிறது. இவ்வாறு சினைத்தூவுதல் ஓர் ஆண்டில் பல முறை நிகழ்கிறது. புரதச் சத்தும், வைட்டமினும் மிகுந்த கிழங்கான் மீன் அனைத்து நாட்டு மக்களா லும் விரும்பி உண்ணப்படுகிறது. ஜப்பானில் இம் பச்சையாகவே உண்ணப்படுகின்றது. உண வாகப் பயன்படும் இக்கிழங்கான் மீன்களை எவ் வகையான வலைகளாலும் பிடிக்கலாம். மீன் சுசீலா அப்பாதுரை கிழங்கானின் உடல் நீண்டு, உருளை வடிவம் கொண்டு அமைந்துள்ளது. இதன் முதுகுப்பகுதி சாம்பல் பூத்த மரவண்ணத்தில் பளபளப்புட னிருக்கும். அடிப்பகுதி கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். நீண்ட உடலின் முன்பகுதியில் அமைந்திருக்கும் தலை கூம்பு வடிவம் உடையது. கோழை சுரக்கும் சுரப்பி கள் உடம்பு முழுதும் பரவியிருந்தாலும், தலைப் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை மிகுதி. தலையின் இரு பக்கங்களிலும் செவுள் துளைகளையும், சிறிது மேல்நோக்கிய கண்களையும் பெற்றுள்ளது. செவுள் மூடிகளின் இயக்கத்தால் நீரோட்டம் இடையறாது நிகழ்ந்த வண்ணமாக உள்ளது. வாய் மிகச் சிறிய பிளவு போலிருக்கும். தாடையின் ஓரங்களில் கூம்பு வடிவம் உடைய பற்களும், உட்புறம் விரல் வடிவப் பற்களும் அமைந்துள்ளன. . உடல் முழுதும் செதில்களால் மூடப்பட் டுள்ளது. உடற்பகுதி படிப்படியாக வாலாக மாறு கிறது. வால் கழிப்பிடத்தின் பின்னே அமைந்துள்ள உடல் பகுதி ஆகும். வாலின் நுனியில் வால் துடுப்பு (caudal fin) அமைந்துள்ளது. வால் துடுப்பைத் தவிர, இரு முதுகுத் துடுப்புகளும் மார்பு வயிற்றுத் துடுப்பு கிழங்குகள் · சில செடிகளின் குட்டையாக்கப்பட்ட அடர்த்தியான தண்டு அல்லது வேர்ப்பகுதி கிழங்கு (tuber) எனப் பொதுவாகக் குறிக்கப்படும். இது தரை மட்டத்திற்கு அடியில் காணப்படும். சில தாவரங்கள் அவற்றின் மேற்பகுதியில் உற்பத்தியாகும் உணவுப் பொருள் களைக் கிழங்குகளில் சேமித்து வைக்கின்றன. முக்கியமாகப் புரதப் பொருள்கள் இவற்றில் சேமித்து வைக்கப்படுகின்றன. சில சில கிழங்குகளில் கால்சியம் ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் படிக வடிவத்தில் காணப்படுகின்றன. எ.கா: சேனை, கருணை, சேம்பு போன்ற கிழங்கு வகைகள். சிலவகைக் கிழங்குகள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகின்றன. எ.கா: அமுக்கிராங்கிழங்கு. பொதுவாகக் கிழங்குகளை இருபெரும் பிரிவு களாகப் பிரிக்கலாம். வேரிலிருந்து உண்டாகிய கிழங்குகளை வேர்க்கிழங்குகள் (root tubers) என்றும். தண்டில் இருந்து உண்டாகிய கிழங்குகளைத் தண்டுக் கிழங்குகள் (stem tubers) எனவும் வகுக்கலாம். வேர்க் கிழங்குகளை ஆணிவேர்க் கிழங்குகள்(tap root tubers) வேற்றிட வேர்க்கிழங்குகள் (adventitious root tubers) என மேலும் வகைப்படுத்தலாம். ஆணி வேர்க் கிழங்குகளில் கேரட், முள்ளங்கி, பீட்ரூட், டர்னிப் போன்ற கிழங்குகள் அடங்கும். கேரட், முள்ளங்கி, பீட்ரூட் ஆகியவை முறையே கூம்பு, கதிர். நாப்பி (napiform) வடிவமாக உள்ளன. இவற்றில் உண்டாகும் .